16 December 2010

மார்கழி மாத மயக்கம்

வணக்கம் மக்களே...

எனக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் மாதங்களில் பிடித்தது மார்கழிதான். (வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு மாறுபடலாம்). அத்தகைய மார்கழி மாதத்தின் நிகழ்வுகள் பற்றி கடந்த வாரம் நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்தார். (இணைப்பை சேமித்து வைக்க தவறிவிட்டேன்). அவரைப் போலவே எனக்கும் சில மகிழ்வான நிகழ்வுகள் உள்ளது. அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

1. வைகுண்ட ஏகாதசி:
ஏகாதசி என்றவுடன் ஏதோ பழைய பாட்டிகளுடன் அமர்ந்து பரமபதம் ஆடுவேன் என்றோ, டி.வியில் என்.டி.ஆர் நடித்த பக்தி படங்களையும் பார்ப்பேன் என்று நினைத்து ஏமாற வேண்டாம். ஏகாதசி என்றாலே நம்ம ஊர் தியேட்டர்களில் களை கட்டும். ஒரே டிக்கட்டில் மூன்று படங்கள்ன்னு போட்டு அசத்திடுவாங்க. அதுலயும் எல்லாரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரு ரஜினி படம், ஒரு விஜய் படம், ஒரு அஜித் படம்னு போடுவாங்க. நானும் வருஷம் தவறாம பங்காளி படையோட போய் கும்மி அடிச்சிட்டு வருவேன். சென்ற வருடம் ஏகாதசி அன்று சிவகாசி படத்தை பார்த்து விடிய விடிய குலுங்கி குலுங்கி சிரித்ததை எல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது.

2. அரையாண்டு விடுமுறை:
இந்த சந்தோஷமெல்லாம் இப்போ இல்லை. ஸ்கூல் படிக்கும்போது அரையாண்டு விடுமுறை விடும் நேரம் மார்கழி மாதம்தான். எப்ப லீவ் விடுவாங்க ஊருக்கு போய் அத்தைமகளை பார்க்கலாம்னு கேலன்டரில் நாட்களை எண்ணிக்கொண்டும், அத்தைமகளை மனதில் எண்ணிக்கொண்டும் காத்திருப்பேன். ஆனாலும் அந்த ஒருவார விடுமுறை முடிஞ்சு மறுபடி வீடு திரும்புற நாள் இருக்கே.... நரகம்.

3. பனி விழும் இரவு:
மற்ற ஊர்களில் எப்படியோ. சென்னையில் க்ளைமேட் மனதிற்கு இதமாக இருக்குமென்றால் அது மார்கழி மாதத்தில் மட்டும்தான். அதுவும் விடியற்காலையில் ஒரு மப்லரை கட்டிக்கொண்டு காலாற டீக்கடை வரை நடந்துபோய் டீ குடித்து தினத்தந்தி படித்து கூடவே நாலு பேரிடம் வெட்டிக்கதை பேசும் சுகம் இருக்கிறதே... அப்பப்பா.

4. கோலங்கள்:
அய்யய்யோ நான் தேவையா...னி நடித்த சீரியல் பற்றி சொல்லவில்லை. மார்கழி மாதமானால் ஏரியாவில் இருக்கும் பெண்கள் எல்லாம் கோலங்கள் போடும் அழகை சொல்ல வந்தேன். அதிலையும் பொங்கல் சமயத்துல பானை வரையிரேன், கரும்பு வரையிரேன்னு குறும்பு பண்ணுவாங்க. யார் வேகமா கோலம போடுறாங்க, யார் அழகா கோலம போடுறாங்க என்றெல்லாம் குரூப் குரூப்பா போட்டிபோட்டு கும்மி அடிப்பாங்க.

5. புத்தாண்டு:
புத்தாண்டு இரவு என்றாலே தனி சிறப்புதான். கலர் கலரான வான வேடிக்கைகள், யாரை பார்த்தாலும் ஹேப்பி நியூ இயர் சொல்லும் பெருமகிழ்ச்சி, ஸ்பீக்கர் செட்டில் பாடல்களை ஒலிபரப்பி குத்தாட்டம் போடுவது இதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல். ஆனால், வருடம் தவறாமல் இரண்டு சக்கர வாகன விபத்துக்கள் நடப்பதும் ஒவ்வொரு வீட்டிலும் பெருசுகள் இளசுகளை கழுவி கழுவி ஊற்றுவதும் கடுப்பு.

6. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்
மற்ற தினங்களில் ஒளிபரப்பும் சிறப்பு நிகழ்ச்சிக்களை விட புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ரொம்பவே சிறப்பு. ஏனெனில், அந்த ஆண்டின் பத்து சூப்பர் படங்கள், பத்து பாடல்கள், அந்த வருடத்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் என்று தொலைக்காட்சிகளில் அசைபோட்டு அசத்துவார்கள்.

7. புத்தக சந்தை:
புத்தக பிரியர்களுக்கெல்லாம் இது ஒரு கோவில் திருவிழா மாதிரி. நானும் ஆறேழு வருடமா போயிட்டு இருக்கேன். புத்தகங்களை பார்வையிட ஒருநாளும் புத்தகங்களை வாங்குவதற்கு ஒருநாளுமாக இரண்டுமுறை செல்வேன். இந்த முறை பாசக்கார பதிவர்கள் சிலரை சந்திக்க வேண்டி இருப்பதால் இப்பவே என்னுடைய ஆணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தயாராக காத்துக்கொண்டு இருக்கிறேன். (இதைப் பற்றிய தனிப்பதிவு விரைவில்).

8. போகி:
இறுதியாக மார்கழியை முடித்து வைக்கும் நிகழ்வு. சுற்றுப்புற சீரழிவு குறித்த விழிப்புணர்வு வந்து இப்போது அதிகமாக கொண்டாடுவது இல்லை. அதுவும் வீடு மெயின் ரோட்டுப்பக்கம் இருக்குறதால போலீஸ் தொல்லை அதிகமா இருக்கும். ஆனாலும், எங்கேயாவது யாராவது பழைய பொருட்களை எரித்துக்கொண்டிருந்தால் நானும் சென்று ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன்.

லிஸ்டுல எதையாவது விட்டுட்டேனான்னு பாத்து சொல்லுங்க.

டிஸ்கி:  கூகிள்ல மார்கழின்னு போட்டு தேடினேன். சத்தியமா அந்த பொண்ணு போட்டோ அங்கதான் கிடைச்சது.
என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

46 comments:

goma said...

மார்கழிக்கு இத்தனை மகத்துவமா தெரியாமல் போச்சே....
அருமையாக அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
கோலங்கள் வர்ணனை சூப்பர்.

Unknown said...

கலக்கறீங்க பாஸ் .

எப்பூடி.. said...

எனக்கும் மிகவும் பிடித்த மாதம் மார்கழிதான், இது சம்பந்தமாக ஒரு பதிவும் இட்டுள்ளேன் :-)

ஆனால் இங்கு போகி கொண்டாடுவதில்லை என்பதால் அதனை பற்றிய எந்த அனுபவமும் எனக்கு வாய்க்கவில்லை :-(

இங்கு பொங்கலுக்கு மட்டும்தான் கோலம் போடுவார்கள், அதுகூட வீட்டு முற்றத்தில்தான், இந்தியாவில் வீடுகளுக்கு முன்னால் வீதிகளில் கோலம்போடும் பெண்கள்போல (திரைப்படங்களில் பார்த்த மாதிரி) இங்கு யாரும் கோலம் போடுவதில்லை ;-(

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மார்கழி மாத...நினைவலைகள் எல்லாமே நல்லா இருக்குங்க...

நீங்க சத்தியம் பண்ணி சொன்ன பிறகு, நம்பாம இருப்பேனா?? நம்பிட்டேன்... :-))

Unknown said...

நல்ல அனுபவங்கள்! எனக்கும் மார்கழி மிகவும் பிடிக்கும்! :-)

pichaikaaran said...

ரசனையான பதிவு

pichaikaaran said...

ரசனையான பதிவு

Kousalya Raj said...

//லிஸ்டுல எதையாவது விட்டுட்டேனான்னு பாத்து சொல்லுங்க//

பல வீடுகளின் முன்னால் கண் சிமிட்டி சிரித்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் பற்றி சொல்லலையே...!!

நீங்க லிஸ்ட்ல விட்டு போனதை சொல்ல சொன்னதால் சொல்கிறேன்...! :)))

மார்கழியின் குளிருக்கு இணை வேறு இருக்கிறதா என்ன...?! அழகாய் மார்கழி நினைவுகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்...

அது எப்படிங்க தொடர்ந்து பதிவுகளை போட்டு அசத்துறீங்க...?? :))

nis said...

மார்கழி என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத முக்கிய மாதமாக உள்ளது :)

Unknown said...

மார்கழி மாசத்துல இவ்வளவு மேட்டர் இருக்கா!!

நல்ல பகிர்வு..

Unknown said...

சூப்பருங்க அந்த பொண்ணு போட்டோ, அதவிட சூப்பருங்க உங்க பதிவு

Anonymous said...

டிஸ்கி: கூகிள்ல மார்கழின்னு போட்டு தேடினேன். சத்தியமா அந்த பொண்ணு போட்டோ அங்கதான் கிடைச்சது.//
:)
nice

Anonymous said...

அட.. ஆமா
மார்கழி மாசம் இவ்ளோ விசேஷம் இருக்கு இல்ல..

சொல்லும்போது தான் நினைவுக்கே வருது.

karthikkumar said...

கூகிள்ல மார்கழின்னு போட்டு தேடினேன். சத்தியமா அந்த பொண்ணு போட்டோ அங்கதான் கிடைச்சது//
வெரி குட் உங்க அப்ரோச்ச நான் பாராட்டறேன் :))

goma said...

நானும் புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருக்கிறேன்

Unknown said...

மார்கழி மாதம் என்றால் நினைவில் வருவது . விடியும் முன்னே நகரில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்றால் "சூப்பர் பிகர்ஸ் " தரிசிக்கலாம் .அன்று அதற்க்கான நேரமிருந்தும் என்னால் தரிசிக்க செல்ல முடியவில்லை காரணம் சோம்பல் .

Unknown said...

சூப்பரப்பு பின்றீங்க

Unknown said...

முடிந்தால் சீரியஸ் பதிவு நாங்க என்ன அடியாளுங்களாக்கு வரவும்

'பரிவை' சே.குமார் said...

அருமையாக அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
கோலங்கள் வர்ணனை சூப்பர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நினைவுகள் அருமை.

அஞ்சா சிங்கம் said...

அதுவும் விடியற்காலையில் ஒரு மப்லரை கட்டிக்கொண்டு காலாற டீக்கடை வரை நடந்துபோய் டீ குடித்து தினத்தந்தி படித்து கூடவே நாலு பேரிடம் வெட்டிக்கதை பேசும் சுகம் இருக்கிறதே... அப்பப்பா../////

அய்யய்யோ இது வயசானவங்க செய்றது ஆச்சே ......
உங்க நண்பர்களுக்கு என்ன அறுபது வயசு இருக்குமா..........

தூயவனின் அடிமை said...

உங்கள் பழைய நினைவுகள் அருமை.

ம.தி.சுதா said...

கலக்குங்க பிரபா...

குளுகுளுப்பாயிருக்கிறது...

யோ வொய்ஸ் (யோகா) said...

////கூகிள்ல மார்கழின்னு போட்டு தேடினேன். சத்தியமா அந்த பொண்ணு போட்டோ அங்கதான் கிடைச்சது.////

நம்பிட்டம்

சிவகுமாரன் said...

பக்கத்துக்கு கோயில்ல கிடைக்கும் சூடான பொங்கலும் சுண்டலும் விட்டுப் போச்சே.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பரா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்.

Geetha6 said...

வாழ்த்துக்கள்.
உங்க அத்தை மகள் போட்டோ இல்லையா?
உங்க ப்ளாக் பார்த்தவுடன் மார்கழி மாதம் கோலங்கள் ஞாபகம் வருது.நான் போய் என் ப்ளோக்ல கோலம் போடுறேன்..வந்து பாருங்க ...

ஆமினா said...

//அத்தைமகளை பார்க்கலாம்னு கேலன்டரில் நாட்களை எண்ணிக்கொண்டும், அத்தைமகளை மனதில் எண்ணிக்கொண்டும் காத்திருப்பேன்//

இன்னுமா???

எப்போதும் நியூயர் தான் மறக்க முடியாத நாள் எனக்கு

Sivakumar said...

அதுவும் விடியற்காலையில் ஒரு மப்லரை கட்டிக்கொண்டு காலாற டீக்கடை வரை நடந்துபோய் டீ குடித்து தினத்தந்தி படித்து கூடவே நாலு பேரிடம் வெட்டிக்கதை பேசும் சுகம் இருக்கிறதே... அப்பப்பா../////

அய்யய்யோ இது வயசானவங்க செய்றது ஆச்சே ......
உங்க நண்பர்களுக்கு என்ன அறுபது வயசு இருக்குமா.......////

>>> பிரபா, பேசாம டீக்கடையை காபி டே என்று மாற்றினால்...உங்களுக்கு இளம்பெண்களின் ஓரவிழிப்பார்வை கிடைக்கலாம்!

Philosophy Prabhakaran said...

@ goma, பாஸ்கர், எப்பூடி.., Ananthi (அன்புடன் ஆனந்தி), ஜீ..., பார்வையாளன், Kousalya, nis, பதிவுலகில் பாபு, இரவு வானம், கல்பனா, இந்திரா, karthikkumar, நா.மணிவண்ணன், விக்கி உலகம், சே.குமார், புவனேஸ்வரி ராமநாதன், மண்டையன், இளம் தூயவன், ம.தி.சுதா, யோ வொய்ஸ் (யோகா), சிவகுமாரன், தமிழ்வாசி - Prakash, Geetha6, ஆமினா, சிவகுமார், T.V.ராதாகிருஷ்ணன்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// எனக்கும் மிகவும் பிடித்த மாதம் மார்கழிதான், இது சம்பந்தமாக ஒரு பதிவும் இட்டுள்ளேன் :-) //

நீங்கதானா அது... இந்தப் பதிவின் முதல் பத்தியை மறுபடி படித்துப் பார்க்கவும்... உங்களது பதிவின் இணைப்பைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்...

// ஆனால் இங்கு போகி கொண்டாடுவதில்லை என்பதால் அதனை பற்றிய எந்த அனுபவமும் எனக்கு வாய்க்கவில்லை :-( //

இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது...

Philosophy Prabhakaran said...

@ Kousalya
// பல வீடுகளின் முன்னால் கண் சிமிட்டி சிரித்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் பற்றி சொல்லலையே...!! //

ஆமாம்ல... மறந்தே போயிட்டேன்... இப்போதெல்லாம் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல அழகுக்காக பலருடைய வீடுகளில் நட்சத்திரம் தொங்க விடுகிறார்கள்... நல்ல விஷயம்தான்...

Philosophy Prabhakaran said...

@ goma
// நானும் புத்தகக் கண்காட்சிக்காகக் காத்திருக்கிறேன் //

அப்படியா மேடம்... நல்ல செய்திதான்... அப்படின்னா ஒரு மினி பதிவர் சந்திப்பு இருக்கு போல...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// மார்கழி மாதம் என்றால் நினைவில் வருவது . விடியும் முன்னே நகரில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்றால் "சூப்பர் பிகர்ஸ் " தரிசிக்கலாம் //

எனக்கு கோவில் போற நல்ல பழக்கமெல்லாம் இல்லைங்க...

Philosophy Prabhakaran said...

@ மண்டையன்
// அய்யய்யோ இது வயசானவங்க செய்றது ஆச்சே ......
உங்க நண்பர்களுக்கு என்ன அறுபது வயசு இருக்குமா.......... //

அது நம்ம வலையுலக முதியோர்களுக்காக புனையப்பட்ட வரிகள்...

டிலீப் said...

கலக்கல் பதிவு வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

மார்கழியில் அந்த இதமான மிதமான குளிர் ம்ம்ம்ம். அசத்தல் பதிவு தல!!

//டிஸ்கி: கூகிள்ல மார்கழின்னு போட்டு தேடினேன். சத்தியமா அந்த பொண்ணு போட்டோ அங்கதான் கிடைச்சது.//

சத்தியமா நாங்க உங்களை ஒண்ணுமே கேக்கலியே பாஸ்!! நீங்க எம்புட்டு நல்லவருன்னு எங்களுக்கு தெரியாதா?? அவ்வ்வ்வ்...

அபிநயா said...

//கேலன்டரில் //

அது கேலண்டர் இல்ல பாஸ்... காலண்டர் எங்க சொல்லுங்க காலண்டர்....

//டிஸ்கி: கூகிள்ல மார்கழின்னு போட்டு தேடினேன். சத்தியமா அந்த பொண்ணு போட்டோ அங்கதான் கிடைச்சது.//

அதுசரி இந்த பதிவுக்கும் போட்டோவுக்கும் என்ன சம்பந்தம் பாஸ்.........

ரிஷபன் said...

மார்கழி மகோத்ஸவம்..

சாமக்கோடங்கி said...

அருமையான அழகான பதிவு... அப்புறம் அந்த போட்ட்வுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும்.. ஏன்னா அந்த பொண்ண எனக்கு ரொம்ப நாளா தெரியும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ்,பிகரு படம் போட்டா பேரு போடனும் அதான் ரூல்ஸு.....!!!

சாமக்கோடங்கி said...

ஆமா.. பன்னி சொன்னா சரிதான்..

ILA (a) இளா said...

ஹ்ம்ஹ்ம்ம்ம் உங்க வரிசையில இருக்கிற ஒன்னு கூட நமக்கு ஒத்து வரலீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட் என்ட்ரி

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா ஃபிகரு நல்லாருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

மார்கழித்திங்கள் அல்லவா? பாட்டு ஞாபகம் வருது