அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஆறு மாதங்களுக்கு முன்பு துரை வில்லியம் – கேத் மிடில்டன் திருமணம் கோலாகலமாக நடந்தது அறிந்ததே. அந்த திருமணத்தின் ஹாட் டாபிக்ஸ் – ஒன்று கொழுந்தியாள் பிப்பா, மற்றொன்று கேத் அணிந்திருந்த திருமண உடை. இப்போது பிந்தைய சமாச்சாரத்தை ஏலத்தில் விடப்போகிறார்களாம். ஏற்கனவே கண்காட்சிக்காக வைக்கப்பட்ட அந்த ஆடை பத்தரை மில்லியன் யூரோக்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏலத்தில் பல மில்லியன் யூரோக்கள் குவியப்போவது உறுதி. இதில் கிடைக்கும் பணத்தை தர்ம காரியங்களுக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் ஹைலைட்.
ஒலக லெவல் ஜொள்ளு:
![]() |
கிர்ர்ர்ரடிக்க வைக்கும் அழகி மிராண்டா கெர் |
தக்காளி நாடாம் வியட்நாமில் நடந்த கொடுமை. சில வருடங்கள் முன்பு வரை இளமையும் அழகுமாய் பூத்துக்குலுங்கிய ஒரு இளம்பெண் இப்போது அறுபது வயது தோற்றத்தில் இருக்கிறார். அவருடைய உண்மையான வயதோ ஜஸ்ட் இருபத்தி ஆறு. முன்பொருமுறை கடல் உணவை உட்கொண்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டதாகவும், தனது ஏழ்மை நிலை காரணமாக மருத்துவ உதவியை நாடவில்லை என்றும் குறிப்பிடுகிறார். சில வருடங்களுக்கு பின்பு இப்போது மீடியாவிடம் உதவி கேட்க, சிலர் உதவ முன்வந்திருக்கிறார்கள். ஆனால் Lipodystrophy எனப்படும் இந்த அரிய நோயை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறது மருத்துவக்குழு. இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இவருடைய காதல் கணவர் இன்னமும் இவரிடம் அன்பு மாறாமல் உறுதுணையாக இருக்கிறார்.
மலைக்க வைத்த புகைப்படம்:
மின்னல்களை படம் பிடிப்பதை மட்டுமே ஹாபியாக வைத்திருக்கும் ஒரு தென்னாப்பிரிக்க புகைப்படக் கலைஞரின் கைவண்ணம்.
நமக்கெல்லாம் டைனோசர் என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்தவர் ஸ்பீல்பெர்க் தான். ஆனால் உலகின் பல மூலைகளிலும் இன்றுவரை டைனோசர் குறித்த ஆராய்ச்சிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்றில் டைனோசர்கள் இதுவரைக்கும் நாம் நினைத்திருந்ததை விட பல மடங்கு பெரியது, வலியது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக Tyrannosaurus எனப்படும் பறக்கும் டைனோசர்களின் இறக்கை மட்டுமே யானையை விட பெரிதாகவும், எடை கொண்டதாகவும் இருந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஜுராசிக் பார்க் அடுத்த பாகம் எப்போ ஸ்பீல்பெர்க் சார்...?
சிந்திக்க வைத்த காணொளி:
பாம்புக்கறி சாப்பிட்டாலும் ஜப்பான்க்காரன் மூளையே மூளை
Smuggling விஷயத்தில் பல நாடுகள் நம்மைவிடவும் மோசமாக இருக்கிறது. பெரு, கொலம்பியா போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்றனவாம். கடந்த வாரத்தில் மட்டும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு நாடுகளில் இருந்து டன் கணக்கில் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின் படி கொலம்பியா ஆண்டுக்கு 350 டன் கொக்கைன் உற்பத்தி செய்து முதலிடத்திலும் பெரு ஆண்டுக்கு 330 டன் கொக்கைன் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் மெக்சிகோ. இந்த நம்பர் விளையாட்டு பதிவுலக அரசியலை விட மோசமாக இருக்கும் போல.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
51 comments:
தொகுப்பு பிரமாதம்..
காணொளியில் இருப்பது French Crepe. தோசை அல்ல.. தோசை மாதிரி செய்துவிட்டு பலவித டாப்பிங் போட்டு சாப்பிடும் ஒரு இனிப்பு வகை உணவு. அதே போல் உருவாக்கும் முறையும் எல்லா ஊரிலும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.
// காணொளியில் இருப்பது French Crepe. தோசை அல்ல.. தோசை மாதிரி செய்துவிட்டு பலவித டாப்பிங் போட்டு சாப்பிடும் ஒரு இனிப்பு வகை உணவு. அதே போல் உருவாக்கும் முறையும் எல்லா ஊரிலும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். //
தகவலுக்கு மிக்க நன்றி பந்து...
தொகுத்த விஷயகள் அனைத்தும் அருமை
@ கார்த்தி கேயனி
// தொகுத்த விஷயகள் அனைத்தும் அருமை //
நன்றி நண்பா...
பகிர்ந்த விஷயங்களுக்கு உங்களை மெச்சினேன்...நன்றி!
மாப்ள ரொம்ப நாளா கேக்கனும்னு இருந்தேன் அது என்ன வலைப்பூக்கு வணக்கம்...அவரா வந்து ஓட்டும் கருத்தும் சொல்றாரு...கொய்யால படிக்கறது நாங்க வணக்கம் அவருக்கா...இன்னாய்யா உங்க ஞாயம்..ஹிஹி நாங்களும் கோப்போம்ல!
@ vikki
பிரபா செய்யும் தொழிலே தெஇவம்கறார்.. நீ வாடிக்கையாளரே தெய்வம்கறே.. 2ம் 1 தான்யா..
@ பிரபா
2 ஃபோட்ட்க்களும் தூள். ஆனா பதிவு நீளம் கம்மியா இருக்கே? ஏன்?
வணக்கம் தலை ....
ஓகே தலை ......
ஜொள்ளு மற்றும் புகைப்படம் அருமை.அந்த 26,60 ஆன படம் போட்டிருக்கலாம்
உதிரியா இருந்தாலும் அதை தொகுத்து கட்டி பூமாலையாக்கும் உங்கள் திறமை சூப்பர். ஸ்ஸப்பா, ஒரு ஓட்டு வாங்குறதுக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டியிருக்குது.
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
தொகுத்தளித்த விதம் அருமை..! நன்றி பிரபா..!
@ விக்கியுலகம்
// மாப்ள ரொம்ப நாளா கேக்கனும்னு இருந்தேன் அது என்ன வலைப்பூக்கு வணக்கம்...அவரா வந்து ஓட்டும் கருத்தும் சொல்றாரு...கொய்யால படிக்கறது நாங்க வணக்கம் அவருக்கா...இன்னாய்யா உங்க ஞாயம்..ஹிஹி நாங்களும் கோப்போம்ல! //
நல்ல கேள்வி... இந்த வணக்கம், நன்றி சொல்றதுக்கு எனக்குன்னு ஒரு டெம்ப்ளேட் ஸ்டைல் இருக்கனும்ன்னு நினைச்சேன்... அதான் இப்படி... BTW, அது வலைப்பூவிற்கு வணக்கம் இல்ல... "அன்புள்ள வலைப்பூவிற்கு"... கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அந்த படம் வந்த புதிதில் ஒரு வசனம் விடாம மனப்பாடம்... அதுல கமல் டைரி எழுதும்போது அன்புள்ள டைரிக்குன்னு போட்டு ஆரம்பிப்பார்... அங்க இருந்து அந்த மேட்டரை சுட்டேன்... நானும் டைரி எழுதும்போது அதே மாதிரி அன்புள்ள டைரிகுன்னு போட்டு எழுத ஆரம்பித்தேன்... அதுவே ப்ளாக்கில் எழுத ஆரம்பித்ததும் அன்புள்ள வலைப்பூவிற்குன்னு மாத்திட்டேன்... மற்றபடி எந்த உள்குத்தும் இல்லை...
@ சி.பி.செந்தில்குமார்
// 2 ஃபோட்ட்க்களும் தூள். ஆனா பதிவு நீளம் கம்மியா இருக்கே? ஏன்? //
பதிவு ரொம்ப நீளமா இருந்தா படிக்கிறவங்க கடுப்பாக மாட்டாங்க... அதான் இப்போல்லாம் பதிவின் சைஸை குறைத்து விடுகிறேன்...
@ NAAI-NAKKS
// வணக்கம் தலை ....
ஓகே தலை ...... //
நன்றி தலை ....
@ சி.பிரேம் குமார்
// ஜொள்ளு மற்றும் புகைப்படம் அருமை.அந்த 26,60 ஆன படம் போட்டிருக்கலாம் //
அந்த புகைப்படம் கொஞ்சம் மோசமா இருந்துச்சு... உங்களுக்காக லிங்க் தர்றேன் பார்த்துக்கோங்க...
http://i.telegraph.co.uk/multimedia/archive/02026/nguyenThi_2026486c.jpg
@ ஆரூர் முனா செந்திலு
// உதிரியா இருந்தாலும் அதை தொகுத்து கட்டி பூமாலையாக்கும் உங்கள் திறமை சூப்பர். ஸ்ஸப்பா, ஒரு ஓட்டு வாங்குறதுக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டியிருக்குது. //
தல பப்ளிக்ல இந்தமாதிரி எல்லாம் பேசப்பிடாது...
@ அருள்
// தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html //
என்ன இது கிட்டத்தட்ட எல்லா வலைப்பூவிலையும் இந்த விளம்பரத்தை பார்த்துட்டேன்...
@ தங்கம்பழனி
// தொகுத்தளித்த விதம் அருமை..! நன்றி பிரபா..! //
நன்றி நண்பா..!
உடையில் ஆரம்பிச்சு, மின்னல் போய், பிறகு உணவில் வந்து கடைசியில் கொக்கின் வரைக்கும் வந்துட்டிங்க பிரபா.
ஆட்களைத் தெய்வமாக நினைக்கும் மனிதர்கள் இங்கு மட்டும் இல்லை ஆடைகளைக் கூட அப்படி ஆக்கிவிடும் மனிதர்கள் உலகம் முழுவதும்தான் இருக்கிறார்கள்... [இது ஒரு விதத்தில் நேற்றைய பதிவின் தொடர்ச்சி என்றே கருதுகிறேன் -நேற்றைப் பிரச்சனைய மீண்டும் தொடரும் எண்ணம் இல்லை. சொன்னேன்].
வணக்கம் சகோ,
நலமா?
தங்கள் பேஸ்புக்கிற்கு ஒரு மெசேஜ் போட்டேனே.
கிடைத்ததா..
வேலை பிசி.
அதனால் தான் நேற்றும் , முன் தினமும் வர முடியலை.
கிர்ர்ர்ரடிக்க வைக்கும் அழகி மிராண்டா கெர்
//
Monte Carlo படத்தில் இவங்க தானே நடிச்சிருந்தாங்க.
சுவாரஸ்யமான அழகியின் உடை ஏல விற்பனை தொடர்பான சேதியினையும்,
வியட்னாமில் உணவின் ஒவ்வாமையால் ஏற்பட வியப்பான உடற் தோற்றம் கொண்ட நபர் கொண்ட சேதியினையும்,
அழகான புகைப்படத்தின் மூலம் கண்களுக்கு விருந்தினையும் தந்து நிற்கிறது இப் பதிவு.
கலக்கல் தொகுப்பு பாஸு
///ஒன்று கொழுந்தியாள் பிப்பா, மற்றொன்று கேத் அணிந்திருந்த திருமண உடை. இப்போது பிந்தைய சமாச்சாரத்தை ஏலத்தில் விடப்போகிறார்களாம்///
முன்னைய சமாச்சாரத்தை ஏலத்தில் விடுவாங்களாண்ணா? கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன்...
அனைத்தும் அருமை.
GOOD ONE KEEP IT UP & KEEP GOING
\\அன்புள்ள வலைப்பூவிற்கு\\ இதைப் பத்தி நானும் கேட்கனும்னு நினைச்சேன் அதை விக்கியுலகம் கேட்டுவிட்டார். அன்புள்ள வலைப்பூ வாசகர்களுக்கு அப்படின்னு போடலாம் அதுக்குத்தான் அர்த்தமிருக்கு, அன்புள்ள டைரிக்கு, வலைப்பூவிற்கு என்று போடுவதில் அர்த்தமில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில் டைரியும், வலைப்பூவும் விக்கியுலகம் சொன்னமாதிரி நீங்க எழுதுவதைப் படிக்கப் போவதில்லை.
விவரங்கள் தெரிந்துகொண்டேன் கலக்குங்க கலக்குங்க...!!!
வியட்னாம் பற்றி செய்தி போட்டதும் தக்காளி என்னமா நீளமா கமெண்ட் போடுறான்ய்யா...!!!
புகைப்பட(ங்கள்)ம் அருமை ;-)
மேட்டர் செலக்ஷன் பக்கா பிரபா...
நல்லா இருக்கு , நல்லா இருக்கு
ஆமா, பால்கனியும் ஒயின்ஷாப்பும் வருதே,என்ன வித்தியாசம்.... அது அசைவம் இது சைவமா? அப்படியும் தெரியலையே?
பால்கனியிலிருந்து ஒரு 360 டிகிரி பார்வை!
/////நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இவருடைய காதல் கணவர் இன்னமும் இவரிடம் அன்பு மாறாமல் உறுதுணையாக இருக்கிறார். ///////
ஆஹா....
////// இந்த நம்பர் விளையாட்டு பதிவுலக அரசியலை விட மோசமாக இருக்கும் போல.//////
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா......
பிப்பா,//
காதலன் படத்துல வடிவேல் சொல்லுவார் அது போல இருக்கு!
@ அப்பு
// ஆட்களைத் தெய்வமாக நினைக்கும் மனிதர்கள் இங்கு மட்டும் இல்லை ஆடைகளைக் கூட அப்படி ஆக்கிவிடும் மனிதர்கள் உலகம் முழுவதும்தான் இருக்கிறார்கள்... [இது ஒரு விதத்தில் நேற்றைய பதிவின் தொடர்ச்சி என்றே கருதுகிறேன் //
ம்ம்ம்... என்னை தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்று புரிகிறது... மிக்க மகிழ்ச்சி...
// நேற்றைப் பிரச்சனைய மீண்டும் தொடரும் எண்ணம் இல்லை. சொன்னேன் //
என்னது பிரச்சனையா...? எல்லாம் சுமூகமா தானே போயிட்டு இருக்கு...
@ நிரூபன்
// நலமா?
தங்கள் பேஸ்புக்கிற்கு ஒரு மெசேஜ் போட்டேனே.
கிடைத்ததா.. //
நலம் நண்பா... கொஞ்சம் விரிவாக கதைக்க வேண்டும் என்பதால் வார இறுதியில் கதைக்கலாமே...
// Monte Carlo படத்தில் இவங்க தானே நடிச்சிருந்தாங்க. //
அந்த மேட்டர் நமக்கு தெரியலைங்க... ப்ரா மாடல்களில் புகழ் பெற்றவர் என்பது மட்டும் தெரியும்...
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// கலக்கல் தொகுப்பு பாஸு //
நன்றி பாஸு...
@ மொக்கராசு மாமா
// முன்னைய சமாச்சாரத்தை ஏலத்தில் விடுவாங்களாண்ணா? கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன்... //
அது ஏண்ணே என்னைப் பாத்து இந்த கேள்வியை கேட்டீங்க... இத்தனை பேர் இருக்காங்களே கேக்க கூடாதா...
@ சே.குமார்
// அனைத்தும் அருமை. //
நன்றி நண்பரே...
@ ROSHAN , MUMBAI
// GOOD ONE KEEP IT UP & KEEP GOING //
ஹி... ஹி... நன்றி ரோஷன்... மிக்க மகிழ்ச்சி...
@ Jayadev Das
// இதைப் பத்தி நானும் கேட்கனும்னு நினைச்சேன் அதை விக்கியுலகம் கேட்டுவிட்டார். அன்புள்ள வலைப்பூ வாசகர்களுக்கு அப்படின்னு போடலாம் அதுக்குத்தான் அர்த்தமிருக்கு, அன்புள்ள டைரிக்கு, வலைப்பூவிற்கு என்று போடுவதில் அர்த்தமில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில் டைரியும், வலைப்பூவும் விக்கியுலகம் சொன்னமாதிரி நீங்க எழுதுவதைப் படிக்கப் போவதில்லை. //
ஆமாம் சரிதான்... வலைப்பூவும், டைரியும் படிக்கப் போவதில்லை... அந்த வாக்கியத்துக்கு அர்த்தமும் இல்லை... இருந்தாலும் எனக்கென்று ஒரு தனி ஸ்டைல்... அது அப்படித்தான்...
@ MANO நாஞ்சில் மனோ
// கலக்குங்க கலக்குங்க...!!! //
நன்றி நன்றி...!!!
@ பாலா
// புகைப்பட(ங்கள்)ம் அருமை ;-) //
நன்றி பாலா...
@ யுவகிருஷ்ணா
// மேட்டர் செலக்ஷன் பக்கா பிரபா... //
நெஜமாவா சொல்றீங்க... நன்றி லக்கி...
@ Avani Shiva
// நல்லா இருக்கு , நல்லா இருக்கு //
நன்றி , நன்றி
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா, பால்கனியும் ஒயின்ஷாப்பும் வருதே,என்ன வித்தியாசம்.... அது அசைவம் இது சைவமா? அப்படியும் தெரியலையே? //
அட அது உள்ளூர் சரக்கு, இது வெளிநாட்டு சரக்குண்ணே...
@ சென்னை பித்தன்
// பால்கனியிலிருந்து ஒரு 360 டிகிரி பார்வை! //
பார்த்து சார்... கீழே விழுந்திடாம பாருங்க...
@ கோகுல்
// காதலன் படத்துல வடிவேல் சொல்லுவார் அது போல இருக்கு! //
பாப்பா பேரு அதானே... வேற எப்படி சொல்றது...
Post a comment