அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஏழாம் அறிவு பார்த்தபோது திரையரங்கில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மினி ட்ரைலர் காட்டினார்கள். காதல், காதலர்களை கிண்டலடித்து சந்தானம் சொன்ன அந்த தத்துபித்துவத்துக்கு திரையரங்கில் அப்படியொரு ரெஸ்பான்ஸ். எல்லோருமே கடுமையா பாதிக்கப்பட்டிருப்பாங்க போல. அடுத்ததா வித்தகன் ட்ரைலர். தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் போலீஸாக வித்தியாச விரும்பி பார்த்திபன் நடிப்பது ஆச்சர்யம்தான். ஆனாலும் சில வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தன. குறிப்பாக எழுதி வச்சிக்கோன்னு வில்லன் கோபமா பஞ்ச் பேசும்போது பார்த்திபன் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு கண்ணும் கருத்துமாக சொல்லுங்க சார் எழுதிக்கிறேன் என்கிறார். பூர்ணா வேற வழக்கத்தை விட அழகாக தெரிகிறார். எல்லாம் ரசனைக்கார பார்த்திபனின் கைவண்ணம்தான் என்று நினைக்கிறேன்.
ஆணாதிக்க சண்முகம் – மனைவிக்காக கணவன் தாஜ் மகால் கட்டியிருக்கிறான். கணவனுக்காக எந்த மனைவியாவது தாஜ் மகால் கட்டியிருக்கிறாளான்னு சினிமாவுல தொடங்கி எஸ்.எம்.எஸ் வரை நிறைய பேர் நக்கல் விட்டு கேட்டிருப்பீங்க. ஆனா நிஜமாவே ஒரு மனைவி கணவனுக்காக மாளிகை கட்டியிருக்கிறார். மொகலாய மன்னர்களுள் புகழ்பெற்ற பாபரின் மகனும் அக்பரின் தந்தையுமான ஹுமாயுன் இறந்தபிறகு அவருடைய மனைவி ஹமீதா பானு பேகம் அவரது நினைவாக கட்டியிருக்கும் இந்த மாளிகை டெல்லியில் இருக்கிறது. இதன் பெயர் Humayun’s Tomb. (கட்டியது கொத்தனார்தான்னு யாராவது நக்கல் விட்டீங்கன்னா Tomato i will kill you...!) நன்றி: குமுதம்
என்னுடைய ஏழாம் அறிவு படம் பற்றிய பதிவை படித்துவிட்டு நண்பன் ஒருவன் போனில் அழைத்து பொங்கினான். முருகதாஸ் தமிழர்களை பெருமைப்படுத்தியிருக்காரு, தமிழன்னு திமிரு வர வச்சிருக்காருன்னு கொந்தளித்தான். தமிழ் என்ற வடையை காட்டி நம்மை எலிப்பொறிக்குள் சிக்க வைத்துவிட்டார்கள் என்பதை அவன் உணர்ந்த பாடில்லை. சனங்களே... உங்களை ஒன்னு கேக்குறேன். படம் முடிஞ்சதும் இது உலகத்தமிழர்களுக்கு சமர்ப்பணம்ன்னு ஒரு ஸ்லைடு போட்டாங்களே, அது உண்மையா இருந்தா படத்துக்கு கோடி கோடியா கொட்டும் லாபத்தை வைத்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் தமிழர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே...??? (பி.கு ஏழாம் அறிவின் தெலுங்கு வெர்ஷன் பார்த்தவர்கள் யாராவது போதி தர்மர் எபிசோடை மாற்றினார்களா என்று சொல்லுங்களேன்)
சுற்றுலா செல்லும் கொண்டாட்ட மனப்பான்மையை நடுவில் கொஞ்சகாலம் ஒளித்து வைத்திருந்தேன். இப்போது மறுபடியும் அது கொஞ்சம் பொங்கிய நேரம் பதிவர் அஞ்சாசிங்கம் கொல்லிமலை ட்ரிப் பற்றி சொன்னார். விடுமுறை நாளும் கைகூடி வந்ததால் பொட்டியை கட்டிவிட்டேன். அனேகமாக இந்த பதிவை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் கொல்லிமலை சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிங்காரச்சென்னையை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருப்பேன்.
ஜொள்ளு:
![]() |
பகுத்தறிவாவது... வெங்காயமாவது... ஹேப்பி தீபாவளி...! |
ட்வீட் எடு கொண்டாடு:
RajanLeaks theTrendMaker™
தமிழன்ற திமிரோட பைக்க ஸ்டாண்டுல இருந்து எடுத்தேன் பின்னாடி இன்னொருத்தன் மேல முட்டுச்சு! கயிவி ஊத்திட்டான்! #7மறிவு
RajanLeaks theTrendMaker™
சுருதியைக் கொல்ல சுமார் லட்சம் பேருக்கு ஹிப்னாடிசம்;மெஸ்மரிசம்லாம் செய்து கொல்லும் டோங்லீ அந்த இழவை ஸ்ருதிக்கே செய்து தொலைத்திருக்கலாம்!
thoatta ஆல்தோட்டபூபதி
2016ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்- ராமதாஸ்# அன்று இந்திய ஜனாதிபதியா இருக்கும் அண்ணன் தங்கபாலுவை வைத்து ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிடுவோம்ல
powshya Chandra Thangaraj
வீட்டில் உட்கார்ந்து டீவி பார்த்துக்கொண்டிருப்பதைத்தான் நிறைய கணவர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதாகச் சொல்கிறார்கள்.
RajanLeaks theTrendMaker™
விஜய் ரசிகர்கள் நல்லாருக்குன்னுதான் சொல்லுவானுக நம்பீராதீங்கோ; அவனுக விஜயவே அழகன்னு சொல்றவனுக! ;-)
அறிமுகப்பதிவர்: முரட்டு சிங்கம்
உலகசினிமா ரசிகர் வட்டத்திற்கு இன்னுமொரு புதிய வரவு. இதுவரை எழுதியிருப்பது ஐந்து இடுகைகள். ஐந்துமே ஒவ்வொரு வகையான உலக சினிமா. American History X – பொழுதுபோக்கு படம், Monster Inc – அனிமேஷன் படம், Donnie Darko – சைக்கோ த்ரில்லர் படம், The Shining – திகில் படம், Fight Club – ஆக்ஷன் படம் என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார். கூடிய விரைவில் வீராசாமி, லத்திகா போன்ற ஒலகப்படங்கள் குறித்து அவர் எழுதுவதற்கு வாழ்த்துவோம்.
கேட்ட பாடல்:
ரா – ஒன் படத்தில் சிகப்பு நிற சிட்டாக கரீனா போட்ட கெட்ட ஆட்டத்திற்காகவே இந்த பாடலை பார்த்தேன். ஆனால் பாடலின் மெட்டும் இசைக்கருவிகளின் விளையாட்டும் ஈர்த்துவிட்டன. இந்தி வெர்ஷனில் கூட பாடலின் நடுவே சில தமிழ் வரிகள் வருவதாக கூறுகிறார்கள். திரும்பத்திரும்ப கேட்டாலும் பாடல் வரிகள்தான் புரிந்து தொலைக்க மாட்டேங்குது...!
இப்ப சொல்லு உன் பேரை...? - சுங்குடி சுப்ரமணியம்
ரஜினி ரசிகர்களே... இதைப் பார்த்துட்டு உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. ரா – ஒன் படத்துல ரஜினி நடிச்சாரா அல்லது எந்திரன் படத்திலிருந்து வெட்டி எறியப்பட்ட காட்சிகளை பொறுக்கி சொருகியிருக்காங்களா...???
ரசித்த புகைப்படம்:
நான் பணிபுரிந்த பழைய அலுவலகத்தின் Smoking Zone – மலரும் நினைவுகள். இந்த புகைப்படத்தை எடுத்தவர் என் பழைய டீம் மேனேஜர் பாலாஜி.
ஃபைனல் கிக்:
காதலுங்குறது கழட்டி போட்ட செருப்பு மாதிரி... சைஸ் சரியா இருந்தா யார் வேணும்னாலும் மாத்திக்கலாம்...!
டிஸ்கி: இது ஒரு Schedule செய்யப்பட்ட இடுகை. நண்பர்கள் யாரேனும் திரட்டிகளில் இணைக்கவும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
27 comments:
பகிர்வு அருமை நன்றிங்க...பாட்டு ஓஹோ....Rajini சிட்டி அது சென்னை சிட்டி ஹிஹி!
சந்தானம் காட்டுல இப்போ நல்ல மழை...... ஒவ்வொருத்தருக்கும் ஒரு சீசன் அந்த டைம்ல அவங்க என்ன பண்ணாலும் நல்லா இருக்கும்......
/// தமிழ் என்ற வடையை காட்டி நம்மை எலிப்பொறிக்குள் சிக்க வைத்துவிட்டார்கள் ////
எலிகளுக்கு வாழ்க்கையில் வடையே போதுமானதாக இருக்கிறது.....
அது நம்ம தலைவரே இல்லை, எந்திரனின் மிச்சம்..
கடைசில சூர்யா படமும் நம்ம டாகுடர் பட ரேஞ்சுக்கு வந்துடுச்சே?
தமிழ்மணத்துல நீங்களே ஒட்டு போடலையா? என் ஓட்டு தான் முதல். தீபாவளி எப்படி போச்சு. நான் நேற்று தான் சென்னை வந்தேன்.
தன்சிக்காவ இன்னும் மறக்கல போல...? ஆமா பார்ட்டி இப்போ என்ன பண்ணிட்டு இருக்கு?
அப்போ விஜய் அழகு இல்லையா?
பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல....
>>அறிமுகப்பதிவர்: முரட்டு சிங்கம் அவர்களூக்கு வாழ்த்துக்கள்
7ம் அறிவு பற்றிய எலி , வடை, பொறி கமெண்ட் ரசித்தேன்
சரக்கு சூப்பர் தலைவா.
சரக்கு சூப்பர் தலைவா.
சுவாரசிய பதிவு
பகிர்வுக்கு நன்றி...
ஒயின்ஷாப் சும்மா கிர்ருன்னு இருக்கு...
வாழ்த்துக்கள்.
//காதல், காதலர்களை கிண்டலடித்து சந்தானம் சொன்ன அந்த தத்துபித்துவத்துக்கு திரையரங்கில் அப்படியொரு ரெஸ்பான்ஸ். எல்லோருமே கடுமையா பாதிக்கப்பட்டிருப்பாங்க போல.
//
90% பேர் பாதிக்கபட்டு உள்ளனர் தலைவா
இன்று என் வலையில்
விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி
அண்ணே...
ரைட்டு....
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
பதிவு அருமை, ஃபைனல் கிக்: கலக்கல்
உங்கள் ப்ளாக்'கில் என்னை அறிமுகபடுதியதற்கு மிகவும் நன்றி.
சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கும் என் நன்றி.
இன்று நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவர் வேறு யாருமல்ல. என்னுடன் வேலை பார்க்கும் திரு. அருண் பிரகாஷ் என்பவர் தான் அவர். இன்னும் சொல்லப் போனால் பதிவுலகம் என்று ஒன்று இருக்கிறதென்று எனக்கு அறிமுகம் செய்தவரே அவர் தான்.
சந்தானம்தான் இப்போதைய ஹீரோ...!!!
அட கொல்லிமலை நம்ம மாவட்டமுங்க போய் வந்து அனுபவத்த சொல்லுங்க.
உங்களுக்கு இப்பிடியே பொழப்பு போகுது
கோடி கோடியா கொட்டும் லாபத்தை வைத்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் தமிழர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே...??? //
உடுங்க தலைவரே...கிடைக்கிறதே கொஞ்சம் கோடி தான்...அதுலயும் பங்கு கேட்கிறீங்களே...
Humayun’s Tomb//
கொன்னுட்டு அப்புறம் தாஜ் மகால் கட்டினா என்ன...கோரமண்டல் கட்டினா என்ன...
வாழ்த்துக்கள்...
ஒழுங்காக வாராத முடி சரிவர ஒப்பனை இல்லாத முகம் என தலைவரை கேவலப்படுதிட்டாங்க பாஸ் .புகைப்படம் அருமை
அட ஏழாம் அறிவு மொக்கைதான் எனக்கு நீங்க தான் செட்.
ஜாலியாப் போயிட்டு வந்து அதைப் பத்தியும் எழுதுங்க.
// தமிழ் என்ற வடையை காட்டி நம்மை எலிப்பொறிக்குள் சிக்க வைத்துவிட்டார்கள்//
உண்மை தான் ...
Post a Comment