7 November 2011

பிரபா ஒயின்ஷாப் – 07112011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வீட்டு வாசலில் இருந்து அலுவலக வாசல் வரை காரிலியே வந்திறங்கும் மேனேஜர் சர்வசாதாரணமாக “WHY ARE YOU LATE MAN...?” என்று கேட்கிறார். பின்னங்காலில் தண்ணீர் படாமல் பக்குவமாக நடந்து, “ஷேர்” ஆட்டோக்காரன் சேறு அடிக்காமல் லாவகமாக கடந்து, பேன்ட்டை முழங்கால் வரைக்கும் தூக்கியபடி தேங்கிய தண்ணீரில் கால் வைத்து, மப்பும் மந்தாரமமுமாக வரும் பேருந்தில் ஏறி, மீண்டும் ஒரு பேருந்து மாறி, வியர்வை நாறி, அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் கஷ்டம் எங்களுக்குத்தானே தெரியும். ஒருவேளை பிறக்கும்போதே காருடன் பிறந்திருப்பாரோ...???

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர். அவருடைய இயற்கை என்னுடைய ALL-TIME FAVOURITEகளுள் ஒன்று. பேராண்மை படத்தை முந்திக்கொண்டு முதல்நாளே பார்த்தேன். (சத்தியமா தன்ஷிகாவுக்காக இல்லை). அவருடைய பேராண்மை – “The Dawns Here are Quiet” என்ற ரஷிய படத்தின் காப்பி என்று சில நாட்களுக்கு முன்புதான் அறிந்துக்கொண்டேன். (You too Brutus). ஒரிஜினல் பதிப்பு இரண்டாம் உலகப்போரில் நடந்த சில உண்மைச்சம்பவங்களின் அடிப்படை என்பதால் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

விரும்பிப்பார்க்கும் நிகழ்ச்சிகளில் நீயா நானாவும் ஒன்று. சமீப காலங்களில் அடிக்கடி அழுகாச்சி சீன் காட்டி கடுப்பை கிளப்புகிறார்கள். அதுவும் நேற்று ஒளிபரப்பான எபிசோடின் தலைப்பு, “காதலுக்காக பெற்றோரை துறந்தவர்கள்... பெற்றோருக்காக காதலை துறந்தவர்கள்...” சொல்லவா வேண்டும். ஆளாளுக்கு கண்ணைக் கசக்க ஆரம்பித்துவிட்டார்கள். ம்ம்ம் ஆம்லேட் வேணும்னா முட்டையை உடைச்சுதானே ஆகணும். தம்பிகளா காதலுங்குறது... சரி வேணாம் விடுங்க... எனக்கெதுக்கு வாய்க்கா தகராறு...!

சொல்ல மறந்த நன்றி:
கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி, இலங்கை வெற்றி பண்பலையின் விடியல் நிகழ்ச்சியில் என்னுடைய வலைப்பூவை நாளொரு தளம் பகுதியில் அறிமுகப்படுத்தியதற்காக பதிவர் லோஷன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். தூக்க அயர்ச்சியில் நிகழ்ச்சியை கேட்க தவறிவிட்டேன். ஒலிபரப்பை எனக்காக ரெகார்ட் செய்துக்கொடுத்த வலைமனை சுகுமாருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். அந்த ரெகார்டிங்கை என் பெற்றோருக்கு ஒலிபரப்பிக் காட்டிய நிமிடங்கள் நெகிழ்ச்சியானவை.

ஜொள்ளு:
கமலஹாசனா...? WHO IS HE...? ஹேப்பி பர்த்டே டூ அனுஷ்கா ஆண்ட்டி...!
ட்வீட் எடு கொண்டாடு:
ஏரோப்லேன்லயே போனாலும் ரோட்டுல தேங்குன மழை தண்ணிய மேல அடிக்கிறவன் தான் சென்னை ஆட்டோக்காரன்......

kolaaru kolaaru
பசங்களுக்கு பமீலா ஆண்டர்சனைபிடித்தது போல் பெண்களுக்கு சாம் ஆண்டர்சனைபிடிக்கவில்லை # அவர்களும் எதையோ எதிர்பார்க்கிறார்கள்!

thoatta ஆல்தோட்டபூபதி
எல்லாவற்றுக்கும் கோபப்பட்டால் ஹர்பஜன்சிங்; எதுக்குமே கோபப்படாவிட்டால் மன்மோகன்சிங்.!

iamkarki கார்க்கி
சென்னை எங்க‌ளுக்கு பொண்டாட்டி மாதிரி. வெயில‌டிச்சாலும் திட்டுவோம். ம‌ழை பெஞ்சாலும் திட்டுவோம்.ஆனா அதுக்குன்னு ஊர‌ விட்டு போக‌மாட்டோம்

அறிமுகப்பதிவர்: நல்லவன்
பதிவுலக வட்டத்தில் சிக்காமல் பதிவெழுதுபவர்களில் ஐவரும் ஒருவர். உண்மையிலேயே ரொம்ப நல்லவர். கவிதை ஸ்பெஷலிஸ்ட். ஆனால் கவிதைகளை ரசிப்பதில் நான் ஸ்பெஷலிஸ்ட் இல்லை என்பதால் வலைப்பூ லிங்க் தருவதோடு நிறுத்திக்கொள்கிறேன். Moreover, இவரும் திருவொற்றியூரைச் சேர்ந்தவர், என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர், உறவினர் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

கேட்ட பாடல்:
ஓவர் டூ ப்ளாக் அண்ட் ஒயிட் பீரியட். கடந்தவாரம் ஒரு பர்சனல் விஷயத்திற்காக சிவாஜி கணேசன் அவர்களின் பாடல்கள் சிலவற்றை கேட்க நேர்ந்தது. அவற்றுள் இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்ததற்கு காரணம் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ம்ம்ம்... நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்று சிவாஜி எம்.ஆர்.ராதாவை பார்த்து பாடுவது பொருத்தமாகத்தான் இருக்கிறது.

களவாணி பயலுகளா:
அட்டேன்ஷன்...! எல்லோரும் விறைப்பா நின்னு தமிழக காவல்துறைக்கு ஒரு சல்யூட் அடிங்க பாக்கலாம்...! (இந்த கலவரத்துலயும் அந்த பயலை கிடுக்குப்பிடி விசாரணை செய்பவரின் வட்டார பேச்சு நடையை ரசிக்கிறது மனம்... என்னத்தச் சொல்ல...)

ரசித்த புகைப்படம்:
யோவ்... மழைக்கு ஒதுங்கி நிக்கிறாங்கய்யா...
தத்துவம்:
“பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான்...”
-     விவேகானந்தர்

ஃபைனல் கிக்:
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது – அப்துல் கலாம்
(அப்புறம் என்னய்யா அய்யாவே சொல்லிட்டார்... அவங்கவங்க போய் வேலையை பாருங்க...)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

49 comments:

பார்வையாளன் said...

நூலக இட மாற்றம் தொடர்பாக நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என ஆவலுடன் காத்து இருந்தேன் ( அதிகாலை 2.55 வரை ) ஏமாற்றி விட்டீர்களே

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// நூலக இட மாற்றம் தொடர்பாக நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என ஆவலுடன் காத்து இருந்தேன் ( அதிகாலை 2.55 வரை ) ஏமாற்றி விட்டீர்களே //

நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல வெறும் தினத்தந்தி செய்தியை மட்டும் படிப்பவர்களுக்கு அதுபற்றி பேசும் தகுதி இல்லையென்று நினைக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

மழைக்கு ஒதுங்க நல்ல இடம் பார்த்தாங்க, ஹா ஹா ஹய்யோ ஹய்யோ..

அறிமுகப்பதிவர் செம


கார்க்கியின் ட்வீட் சூப்பர்..

அப்துல்கலாமையே தாக்கறீங்களா? அவ்வ்வ்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அது இன்னாபா பைனல் கிக்..

தங்கம்பழனி said...

காவல்துறை வாழ்க..!!

தங்கம்பழனி said...

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

சேட்டைக்காரன் said...

//அந்த ரெகார்டிங்கை என் பெற்றோருக்கு ஒலிபரப்பிக் காட்டிய நிமிடங்கள் நெகிழ்ச்சியானவை.//

இங்கேயும் போட்டிருந்தா நாங்களும் கேட்போமில்லே?
வாழ்த்துகள்!

ஆரூர் முனா செந்திலு said...

அந்த பண்பலையின் தொகுப்பை வலைப்பதிவில் வெளியிடுங்கள்.

கும்மாச்சி said...

\\சென்னை எங்க‌ளுக்கு பொண்டாட்டி மாதிரி. வெயில‌டிச்சாலும் திட்டுவோம். ம‌ழை பெஞ்சாலும் திட்டுவோம்.ஆனா அதுக்குன்னு ஊர‌ விட்டு போக‌மாட்டோம்//

சரிதான் அங்கேயும் அப்படித்தானா?

நல்ல சரக்கு சப்ளை. கடையை எல்லானாலும் திறந்து வையுங்க.

வெளங்காதவன் said...

வீடியோ அருமை...

:)

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// மழைக்கு ஒதுங்க நல்ல இடம் பார்த்தாங்க, ஹா ஹா ஹய்யோ ஹய்யோ.. //

ஏதோ ஒன்னு அண்ணாந்து பாக்காம இருந்தாங்களே...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// அது இன்னாபா பைனல் கிக்.. //

அது ஜாக்கி ஸ்டைல்...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// இங்கேயும் போட்டிருந்தா நாங்களும் கேட்போமில்லே?
வாழ்த்துகள்! //

ரொம்ப சொறியுற மாதிரி இருக்குமேன்னு விட்டுட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// அந்த பண்பலையின் தொகுப்பை வலைப்பதிவில் வெளியிடுங்கள். //

அடுத்த ஒயின்ஷாப்பில் வெளியிடுகிறேன்...

கோகுல் said...

வானொலி ஆடியோவை பதிவில் சேர்த்திருக்கலாமே?
/
பேராண்மை என்னுடைய பேவரைட் கூட.
காப்பியா இருந்தா இருந்துட்டு போகுதுங்க விடுங்க.பல நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழிலே கொண்டு வருவோம் னு பாரதி சொன்னத செய்யுறாங்க போல.

Philosophy Prabhakaran said...

@ கோகுல்
// பேராண்மை என்னுடைய பேவரைட் கூட.
காப்பியா இருந்தா இருந்துட்டு போகுதுங்க விடுங்க.பல நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழிலே கொண்டு வருவோம் னு பாரதி சொன்னத செய்யுறாங்க போல. //

அப்படின்னா காப்புரிமை வாங்கிட்டு பண்ணலாமே...

middleclassmadhavi said...

பகிர்ந்த விஷயங்கள் அருமையாக உள்ளன

jayaram thinagarapandian said...

என்னோட வலைபதிவை
இங்கே அறிமுகம் செய்து வைத்ததற்கு முதலில் மிக்க
நன்றி da ...
important matter :
அனுஷ்காவை
ஆன்டி என்பதற்கு
எனது எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன் uvar ஆனர்

jayaram thinagarapandian said...

ஒரு பூனைய பிடிச்சு
அத அடிச்சு
புலின்னு அத நம்ப வச்சு
நம்பளையும் வைக்குற திறமை உள்ள போலீஸ் நம்ப
TN போலீஸ்..
வாய்மையே வெல்லும் :P

jayaram thinagarapandian said...

ஃபைனல் கிக்:

உண்மை தான்
பாரம்பரிய நம்ம
பஞ்சாயத்து தீர்ப்பு

jayaram thinagarapandian said...

//சொல்ல மறந்த நன்றி:
வெற்றி பண்பலையின் விடியல் நிகழ்ச்சியில் என்னுடைய வலைப்பூவை நாளொரு தளம் பகுதியில் அறிமுகப்படுத்தியதற்காக பதிவர் லோஷன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.//

வாழ்த்துக்கள் நண்பா ..:)

PTR said...

நானும் நேற்று நீயா நானா நிகழ்ச்சியை பார்தேன். எல்லோரும் எதற்கு அழுகிறார்கள் என்றே புரியவில்லை. டி.ஆர்.பி ரேட்டை அதிகரிக்க எப்படி எல்லாம் செய்கிறார்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மழையை கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் எவ்வாறு சந்திக்கிறார்கள் என்று மேல் மட்டத்தில் உள்ளவர்கள் உணருவதில்லை பிரபா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னைய தொகுப்பு அத்தனையும் அமர்க்களம்...

ஒயின் ஷாப் களைகட்டட்டும்...

N.H.பிரசாத் said...

இந்த வார சரக்கு சூப்பர் பிரபா. பகிர்வுக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லவன் பதிவுக்கு வழிகாட்டியதற்க்கு நன்றி

சி.பிரேம் குமார் said...

//ஒருவேளை பிறக்கும்போதே காருடன் பிறந்திருப்பாரோ...???//உங்க மேனேஜர் உங்க ப்ளாக் படிப்பாரா பாஸ் !

சி.பிரேம் குமார் said...

ஜொள்ளு கலக்கல் ஆண்ட்டினாலும் பியூட்டி பாஸ்

அப்பு said...

\\\\\\\\\\\\\வரைக்கும் தூக்கியபடி தேங்கிய தண்ணீரில் கால் வைத்து, மப்பும் மந்தாரமமுமாக வரும் பேருந்தில் ஏறி, மீண்டும் ஒரு பேருந்து மாறி, வியர்வை நாறி, அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் கஷ்டம் எங்களுக்குத்தானே தெரியும்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்ப பேஞ்சிருக்க மழையில காரு எங்கயாவது மாட்டும் போது .... அதனால் லேட்டா வரும்போது,
நீங்க கேட்கமுடியாது. அவரா நினைச்சுப் பார்த்தாதான் உண்டு..

அப்பு said...

பைனல் கிக் - நேர் கிக்கா பேக் கிக்கா

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் பைக் களவு இப்பிடியும் நடக்குதா அவ்வ்வ்வ்வ்வ்...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

மழைக்கு ஒதுங்குற இடம் நல்லாயிருக்கே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா அப்துல்கலாம் உள்ள மரியாதையையும் கெடுத்துகிட்டார் போங்க....!!!

Arun J Prakash said...

பதிவின் விஷயங்கள் அருமை.
தத்துவம்:
“பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான்...”
தத்துவம் மிக அருமை.

சே.குமார் said...

ha... ha... haaaaa...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//பின்னங்காலில் தண்ணீர் படாமல் பக்குவமாக நடந்து, “ஷேர்” ஆட்டோக்காரன் சேறு அடிக்காமல் லாவகமாக கடந்து, பேன்ட்டை முழங்கால் வரைக்கும் தூக்கியபடி தேங்கிய தண்ணீரில் கால் வைத்து, மப்பும் மந்தாரமமுமாக வரும் பேருந்தில் ஏறி, மீண்டும் ஒரு பேருந்து மாறி, வியர்வை நாறி, அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் கஷ்டம் எங்களுக்குத்தானே தெரியும். ஒருவேளை பிறக்கும்போதே காருடன் பிறந்திருப்பாரோ...???
//

எல்லா இடத்திலும் இந்த பிரச்சனைதான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்

Elamparuthi said...

october 31 to nov 7....looonnng gap...why brother?

Anonymous said...

Manager Speaking...

No more Increments...-:)

வாழ்த்துக்கள்...வானொலி ஆடியோவை பதிவில் சேர்த்திருக்கலாமே...

கார்த்தி கேயனி said...

வழக்கம் போல் பிரமாதம்

Philosophy Prabhakaran said...

@ jayaram thinagarapandian
// அனுஷ்காவை
ஆன்டி என்பதற்கு
எனது எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன் uvar ஆனர் //

ஆண்ட்டி என்பது இழிவுபடுத்தும் சொல்லல்ல... பெருமைப்படுத்தும் சொல்லென்று தெரிந்துக்கொள்ளுங்கள் யுவர் ஆனர்...

Philosophy Prabhakaran said...

@ PTR
// நானும் நேற்று நீயா நானா நிகழ்ச்சியை பார்தேன். எல்லோரும் எதற்கு அழுகிறார்கள் என்றே புரியவில்லை. டி.ஆர்.பி ரேட்டை அதிகரிக்க எப்படி எல்லாம் செய்கிறார்கள். //

யாராவது அழுவுற மாதிரி வந்தாலே கோபிநாத் அவங்கள தூண்டிவிட்டு அழ வைக்கிறார்...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
//உங்க மேனேஜர் உங்க ப்ளாக் படிப்பாரா பாஸ் //

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இதே கேள்வியை அப்பு கேட்டிருந்தார்... அதே பதிலை காப்பி பேஸ்ட் செய்கிறேன்...

தெரியும்... ஆனால் அவர் எழுத்துக்கூட்டி தமிழ் படிப்பதற்குள் விடிந்துவிடும்...

Philosophy Prabhakaran said...

@ Elamparuthi
// october 31 to nov 7....looonnng gap...why brother? //

Weekend வெட்டியா இருந்தா அந்த வாரம் முழுக்க போஸ்ட் வரும்... Weekend ஊர் சுத்துரதுலயும் தண்ணி அடிச்சு மட்டையாகுறதுலயும் டைம் ஓடிருச்சுன்னா அந்தவாரம் முழுக்க பதிவு வராது... இதான் மேட்டர்... FYI, இப்பவே இந்த வாரத்துக்கு இன்னும் நாலு போஸ்ட் Draftல் இருக்கு...

மயிலன் said...

முதல் பத்தி நகைச்சுவையோடு சொல்லப்பட்டாலும் அழுத்தம் அதிகம்..மிக நன்று..
அனுஷ்கா புகைப்படம் என்னைக் கைகுட்டையைத் தேடவைத்தது..அழகு..

மயிலன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

police not only link with thieves they also link smugglers, politicians & doing Vasool raja work


Watch this video Child Labor Sexually abused in india

குரங்குபெடல் said...

Jananathan gives credits to that russian novel in beginning of the movie


Thanks

Raj said...

good