28 December 2012

கனவுக்கன்னி 2012 - பாகம் 1

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பத்துக்கு பத்து பட்டியலில் இடம்பெற தவறியவர்கள் :-
“லீலை” மான்சி பரேக், “கழுகு" பிந்து மாதவி, “மதுபான கடை” தியானா.10. ரம்யா நம்பீசன்
ஒரு படம், சில காட்சிகள். பீட்சா சாப்பிடுவது போல ரசிகர்கள் மனதை லபக்கென்று கவ்விக்கொண்டார். முகப்பரு கூட ஒரு அழகுதான் ரம்யாவின் முகத்தில். “என்ன கண்ணுடே...!” என்று சொல்பவர்கள் கூட ரம்யாவை பார்த்தால் “என்ன மூக்குடே...!” என்று சொல்லக்கூடிய தனித்துவ அழகி.


9. மம்தா மோகன்தாஸ்
தடையற தாக்கு தாக்கென்று தாக்கிவிட்டு மீண்டு வந்திருக்கிறார். முக அழகு, புற அழகு, பிற அழகு தாண்டி தன்னுடைய விஸ்கி வாய்ஸாலேயே வசீகரித்தவர். நல்ல பாடகியும் கூட. மல்லுக்களுடன் மட்டும் மல்லு கட்டாமல் தமிழர்களுக்கும் கொஞ்சம் தயவு காட்டலாம்.


8. நிஷா அகர்வால்
காஜலின் தமிழ்ப்படங்கள் தாமதமான போது இஷ்டம் படத்தில் நடித்து நம் கஷ்டத்தை போக்கியவர். நிஷா தரிசனத்தில் தேவி பேரடைஸ் திரை வாழை இலையாகி நம் கண்களுக்கு விருந்து வைத்தது. ஒரே படத்தோடு நிறுத்தியவர், மீண்டும் எம்.பி.ஏ படித்துவிட்டு எம்பி குதித்து வருவார்.


7. சுனைனா
“அழகு சாத்தானே இப்பால வா...!” என்று அழைக்கத்தூண்டும் அழகி. பா.ஒ.நி, திருத்தணி என்று சுனைனாவின் மற்ற படங்கள் நிஜத்திலும் சாத்தானாக அமைந்துவிட்டாலும், கடந்த வாரம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய காதலில் விழுந்தேன் இன்னமும் கூட நம்மை விழ வைக்கிறது.


6. அமலா பால் (2011: 6, 2010: 3)
ஆண்டு ஆரம்பத்திலேயே பெப்பே பெப்பே ஆட்டம் போட்டு ரசிகர்களை வேட்டையாடிவிட்டார். கா.சொ.எ? தலைமுடி பின்னலலங்காரம் கவன ஈர்ப்பு போராட்டம் செய்தது. அதன்பிறகு நாம் முப்பொழுதும் இவர் கற்பனைகளில் மிதந்தாலும் தமிழில் தலைகாட்டவில்லை. அடுத்த ஆண்டில் நிமிர்ந்து நிற்பார்.

முதல் ஐந்திடங்கள் அடுத்த பாகத்தில்...!

தொடர்புடைய சுட்டிகள்: 2011 - I, 2011 - II, 2010 - I, 2010 - II

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 comments:

CS. Mohan Kumar said...

நிஷாவை தவிர மற்றவர்கள் ஓகே

CS. Mohan Kumar said...

முதல் ஐந்து இடத்தில இருக்க வேண்டிய ரம்யா மற்றும் சுனைனா அடுத்த ஐந்துக்கு வந்தது வருத்தம் தருது

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு

கும்மாச்சி said...

முதலிடம் மட்டும் காஜலுக்கு இல்லையென்றால் ஒரு பெரிய போராட்டமே வெடிக்கும், ஆமாம் சொல்லிப்புட்டேன்.

arasan said...

நான் நினைக்கிறேன் சம்முவுக்கு முதலிடம் இருக்குமென்று .. என்ன அண்ணாத்தே சரியா ?
இந்த அஞ்சுல ரம்யாவை கடைசி இடத்தில் தள்ளி இருக்க வேண்டாம் ...பால் இருக்குற இடத்துல அது இருந்தா சரியா இருக்குமென்பது என் விருப்பம்

Unknown said...

சமந்தா சமத்த 1 வது இடம் கொடுங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிஷா & அமலா ரிஜக்டட்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

5. லக்ஸ்மி மேனன்
4. ராதிகா ஆப்டே
3. ரிச்சா
2. காஜல் அகர்வால்
1. சமந்தா

பார்ப்போம் எத்தன கரெக்டா வருதுன்னு........ (அப்புறம் வேணும்னே மாத்திடப்படாது...!)

CS. Mohan Kumar said...

ராம்சாமி அண்ணே : போங்கண்ணே : தம்பி காஜலுக்கு தான் முதல் பிளேஸ் தருவார்; இது கூட தெரியாம இருக்கீங்க

பிரபா : அனுஷ்கா மட்டும் முதல் 5-ல் இல்லன்னா அவ்ளோ தான் சொல்லிட்டேன் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
ராம்சாமி அண்ணே : போங்கண்ணே : தம்பி காஜலுக்கு தான் முதல் பிளேஸ் தருவார்; இது கூட தெரியாம இருக்கீங்க //////

அதுனாலதான் காஜலுக்கு போனா போகுதுன்னு ரெண்டாவது கொடுத்திருக்கேன்......

Prem S said...

///காஜலின் தமிழ்ப்படங்கள் தாமதமான போது இஷ்டம் படத்தில் நடித்து நம் கஷ்டத்தை போக்கியவர். ///

அப்படியா பாஸ் சொல்லவே இல்ல ..

Cinema News said...

நன்றாக நடிப்பது யார் என்றால் கண்டிப்பாக வரிசை மாறும்

M (Real Santhanam Fanz) said...

மத்தது எப்புடியோ தெரியல,பட் உங்க லிஸ்ட்ல காஜல்தான் பர்ஸ்ட்டு பாஸ்.. அப்புறம் ஹன்ஷிகா, சமந்தா, லக்ஸ்மி மேனன் அன்ட் யாரவது இன்னொருத்தர் அடுத்த நாலுக்குள்ள!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது ஹன்சிக்கா இல்ல தன்சிகா, நம்ம லிஸ்ட்ல அதையும் சேர்த்துக்குங்கப்பா.....!

M (Real Santhanam Fanz) said...

//அது ஹன்சிக்கா இல்ல தன்சிகா, நம்ம லிஸ்ட்ல அதையும் சேர்த்துக்குங்கப்பா.....!//
அண்ணே, ஹன்ஷிகா சூப்பர்ரா சிரிக்கும்ண்ணே!! அதையும் சேர்த்துக்கலாமே!!

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
தல... செம அண்டர்ஸ்டாண்டிங்... காஜல், சம்மு, தன்ஷிகா மூவரும் முதல் ஐந்தில் இருக்கிறார்கள்... தன்ஷிகாவை நீங்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பது வியப்பளிக்கிறது...

மற்றபடி லக்ஷ்மி மேனனை எனக்கு பிடிக்கவில்லை... ராதிகா ஆப்தே அண்ணி கேரக்டர்களில் நடிக்க வேண்டியவர்... ரிச்சாவெல்லாம் மறந்துபோச்சு...

Philosophy Prabhakaran said...

அப்புறம் ஹன்சிகா, அனுஷ்கா, அஞ்சலியெல்லாம் நம்ம லிஸ்டில் இல்லை...