27 February 2013

ஹரிதாஸ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்றவாரம் வரை ஹரிதாஸ் என்று ஒரு படம் வெளிவர இருப்பது குறித்து எந்த தகவலும் என்னுள் பதியப்படவில்லை. பேப்பர் விளம்பரங்கள் பார்த்தபோது வழக்கமான லோ-பட்ஜெட் குப்பை என்றுதான் நினைத்திருந்தேன். படத்தில் சினேகா இருக்கிறார் என்பது கூட பார்ப்பதற்கு முந்தயநாளில் தான் தெரிந்துக்கொண்டேன். தொடர்ச்சியாக பலதரப்புகளில் இருந்து வெளிவந்த பாஸிடிவ் கூவல்கள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. அப்படியென்ன இருக்கிறது ஹரிதாஸில் ?


பிறக்கும்போதே தாயை இழந்து, தந்தையின் கவனிப்பின்றி வளர்ந்து, ஆட்டிஸம் எனும் குறைப்பாடினால் பாதிக்கப்பட்ட சிறுவன். ஒருகட்டத்தில் தந்தை தன்னுடைய மகனின் நிலையை உணருகிறார். பின்னர் அவருக்கும் மகனுக்கும் ஆட்டிஸத்திற்கும் இடையே நிகழும் போராட்டம் தான் ஹரிதாஸ்...!

ஆட்டிஸம் பற்றிய விவரங்களை சில வாரங்களுக்கு முன்புதான் மூத்த பதிவர் பாலபாரதியின் பதிவுகளில் படித்து தெரிந்துக்கொண்டேன். அதற்குள் அதனை படமாகவே பார்க்க கிடைத்த வாய்ப்பு ஒத்திசைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

கிஷோருக்கு நிகழ் வருடம் அற்புதமாக அமைந்திருக்கிறது. வனயுத்தம், ஹரிதாஸ், அடுத்த மாதம் வெளிவரவுள்ள கூட்டம் என்று அனைத்திலும் பிரதான வேடங்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல், துருத்தாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் பிருத்வி தாஸ் மின்னுகிறது. அமுதவல்லி டீச்சர் வேடத்திற்கு சினேகா பொருத்தமான தேர்வு. சினேகாவின் வயதும் அழகும் ஒருசேர பயணிக்கிறது. சினேகாவின் தங்கையும், சக ஆசிரியை சுப்புலட்சுமியும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். பரோட்டா சூரியின் நகைச்சுவை கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறது. தலைமை ஆசிரியை, சினேகாவின் அம்மா, கிஷோரின் நண்பர்கள் போன்ற சிறு நடிக / நடிகைகள் பலம் சேர்த்திருக்கிறார்கள். இரண்டே காட்சிகளில் தோன்றினாலும் யூகி சேது ரசிக்க வைக்கிறார்.

பாடல்கள் மனதில் பதியவில்லை. எனினும், பிண்ணனி இசை இதமாக வருடிக்கொடுத்து பின் எழுச்சியூட்டுகிறது. போலீஸ் கானாவை தவிர்த்து, இசை விஜய் ஆண்டனி என்றால் நம்ப முடியாது. 


ஹரிதாஸ் - என்கிற சரித்திரப்புகழ் வாய்ந்த பெயரை பயன்படுத்தியிருப்பது வருத்தத்திற்குரிய செயல். இந்த படத்திற்கு ஹரிதாஸ் என்ற பெயரை சூட்டவேண்டிய கட்டாயமும் இல்லை. தயாரிப்பாளருடைய பெயரையே கூட சூட்டியிருக்கலாம்.

படம் இரண்டு விஷயங்களை முன்னிறுத்துகிறது. ஒன்று என்கவுன்ட்டர், மற்றொன்று ஆட்டிஸம். என்கவுன்ட்டரை ஒதுக்கிவிடலாம். சொல்லப்போனால் என்கவுன்ட்டர் பற்றிய காட்சிகளுக்கு படத்திலேயே விடை இருக்கிறது. “ஆமாம்... நான் ஒரு LICENSED KILLER...!” என்று நாயகனே மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார். ஆட்டிஸம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதற்காக இயக்குனர் GNR குமாரவேலனுக்கு எழுந்து நின்று கைதட்டலாம்...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 comments:

கார்த்திக் சரவணன் said...

சின்ன விமர்சனமா இருந்தாலும் நல்ல விமர்சனம்...

aavee said...

சினேக்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலியே??

Philosophy Prabhakaran said...

நன்றி ஸ்கூல் பையன்...

Anonymous said...

//ஒத்திசைவு //

நீயும் கெட்டு போயிட்டய்யா!!

Ponmahes said...

இந்த படம் கண்டிப்பாக ஓடாது ....நீ positive review எழுதுன பெரும்பாலான படங்கள் வசூல் அளவில் பிளாப் தான் ....


but விமர்சனம் சிம்பிள் அண்ட் பெஸ்ட் ..................

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், ஹரிதாஸ் அந்தமாதிரி கிடையாது... வணிகரீதியாகவும் வெற்றி பெரும்...

காரணம் ஒன்று, படத்தில் மொக்கையாக இருந்தாலும் நகைச்சுவை காட்சிகள் உள்ளன, ஒரு குத்துப்பாட்டு, அப்புறம் என்கவுன்ட்டர் டிராக் என்று கமர்ஷியல் அம்சங்கள் உள்ளன.

காரணம் இரண்டு, விமர்சகர்கள் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகிறது. நான் கூட இந்த படத்தை பார்த்ததற்கு விமர்சகர்கள் தான் காரணம்.

காரணம் மூன்று, அடுத்ததாக பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் வரிசையில் இல்லை.

ஆதலால் ஹரிதாஸ் மூன்று வாரங்கள் வரை ஓடக்கூடும். அந்த கால ஹரிதாஸ் மூன்று தீபாவளிகள் பார்த்ததாம்... இந்த ஹரிதாஸ் மூன்று வெள்ளிக்கிழமைகளை பார்த்தாலே வெற்றி தான்...

Anonymous said...

Haridoss is complete copy of Korean Movie Marathon Based on autism