5 March 2014

வா நீ கபூர் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வட பாவ் நடிகைகள் தோன்றுவதுண்டு. ஏன் உலக அழகிகளையும், பிரபஞ்ச அழகிகளைக் கூட தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அவர்களில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் தவிர்த்து வேறு யாரும் தமிழர்களை அவ்வளவாக ஈர்த்ததில்லை. லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் விஜய் நடிப்பில் தமிழன் என்ற படம் வெளிவந்திருந்தது. எனது சமூக அறிவியல் ஆசிரியை என்ன காரணத்திற்காகவோ அதனை பார்த்திருக்கிறார். மறுநாள் வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். யாரு அவளையெல்லாம் உலக அழகியாக தேர்ந்தெடுத்தது என்று அறச்சீற்றம் கொண்டவரை அமைதிப்படுத்தவே சிரமப்பட்டுவிட்டோம். அந்த நடிகையின் பெயர் ப்ரியங்கா சோப்ரா. எனக்கு ப்ரியங்கா சோப்ராவின் மேல் உதடுகளை பார்க்கும் போதெல்லாம் மேற்கிந்திய தீவு பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் நினைவுக்கு வருவார். ஆனால் பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் சக்கை போடு போட்டார். அவருடைய கோரமான பல்வரிசையை நீயா நானா ஆசாமிகள் வர்ணிக்கிறார்கள். அதுபோல வித்யா பாலன் என்று தமிழில் அக்கா, அண்ணி கதாபாத்திர முக அமைப்பு கொண்ட ஒருவர் அங்கே சென்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஹிந்திவாலாக்களின் ரசனையை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படி அவ்வப்போது பாலிவுட் சீமாட்டிகள் தமிழில் தலை காட்டுகிறார்கள் இல்லையா...? பாட்டியாவையும், அகர்வால்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்களெல்லாம் தமிழர்களாக இனம் மாறிவிட்டார்கள். அவர்கள் தவிர்த்து, மாற்றான் படத்தில் இஷா ஷெர்வானி வந்து ஒரு ஆட்டம் போட்டு பார்த்தார். பில்லாவில் ப்ரூனா அப்துல்லா வந்தார். ம்ஹூம் யாரும் தேறவில்லை. திடீரென தற்சமயம் யாரோ வாணி கபூராம். சில வாரங்களாகவே அவரைப் பற்றிய விளம்பரங்கள் தூள் பரத்துகின்றன. பண்பலையில் வந்து பேசுகிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், தமிழ் கற்றுக்கொள்ள போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார். என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..? ஒருநாள் கூத்துக்கு ஏனய்யா வேக்ஸிங் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். பின்னே, ஏதோ ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அடுத்து குட்டிக்கர்ணம் அடித்தாலும் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காது. ஏன் சிரமப்பட்டு தமிழெல்லாம் கற்றுக்கொள்கிறார் என்று வருத்தப்பட்டேன்.

என் எண்ணம் அவ்வாறாக இருந்தமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வாணி கபூரின் கன்னங்கள். உட்புறமாக ஒடுங்கியிருந்த கன்னங்கள். தாமரைக் கன்னங்கள் என்று கதாநாயகியை வருணித்து மகிழ்ச்சியுறும் மக்கள் எப்படி வாணி கபூரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே என் ஐயப்பாடு. எனினும், பிற்பாடு ஒரு விஷயத்தை தெரிந்துக்கொண்டேன். வாணியிடம் உள்ள பாகங்களில் கன்னங்களை தவிர வேறெதுவும் ஒடுங்கியிருக்கவில்லை.

வாணி கபூருடைய தாயார் கருவுற்றிருந்த சமயம் குங்குமப்பூவை கிலோ கணக்கில் சாப்பிட்டிருக்கக்கூடும். சும்மா செக்கச் செவேலென கோயமுத்தூர் கொய்யா போல இருக்கிறார். உயரத்தில் அனுஷ்காவை விட ரெண்டு இன்ச் தான் குறைவாக இருப்பார். தலப்பாக்கட்டியை நினைவூட்டுகிறது வாணியுடைய வாளிப்பான கால்கள். டெல்லியில் பிறந்து, வளர்ந்து, இந்திரா காந்தி பல்கலையில் சுற்றுலா மேலாண்மை படித்த வாணி, தன்னைப் பற்றி தமிழகத்திலுள்ள உள்ள ஒரு வலைப்பதிவர் வர்ணித்து எழுதுவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். யாஷ் சோப்ரா என்று மும்பையில் ஒரு பெருந்தலை. தமிழ் சினிமாவில் ஏ.வி.மெய்யப்பர் போல ஒரு மரியாதைக்குரிய பெரியவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய மகனான ஆதித்யா சோப்ரா தான் வாணி முத்துவை தமிழ் சினிமாவிற்கு கொணர்ந்திருக்கிறார். மொத்தமாக மூன்று படங்கள் நடித்துத்தர வேண்டுமென வாணியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ஆதித்யா. அந்த சமயமாக பார்த்து கோலிவுட்டில் கால் பதிக்க ஆதித்யா சோப்ரா விரும்பியது நம்முடைய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் படங்களில் அதிகபட்சமாக எத்தனை உதட்டு முத்த காட்சிகளை பார்த்திருப்பீர்கள்...? அவற்றில் பெரும்பாலானவை பொடனியில் கேமரா வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படியெல்லாம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற முத்தத்தை பார்த்திருக்கிறீர்களா...? நியாயமாக தமிழ் சினிமா நடிகைகள் வாணிக்கு பாத பூஜை செய்துவிட வேண்டும். சிலர் ஆஹா கல்யாணத்தில் இடம்பெற்ற உதட்டு முத்த காட்சியையே ஆஹா ஓஹோ என்கிறார்கள். அவர்கள் அம்மணி ஷுத் தேசியில் சுஷாந்த் சிங்கிற்கு அடித்த கிஸ்ஸை பார்த்திருக்க வேண்டும். ஆஹா கல்யாணத்தில் பன்ச் சாங் என்று ஒன்று வருகிறது பாருங்கள். பஞ்சு நெஞ்சு கொண்டவர்கள் தாங்க மாட்டார்கள். இடுப்பு விஷயத்தில் தமிழர்களுக்கு நன்றாகவே இறக்கம் காட்டியிருக்கிறார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பாக ஏதோ மூன்று பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். ம்ஹூம். அடுத்து தமிழ் சினிமா நாயகர்களுடன் ஒரு வலம் வந்து கடைசியாக கமலுடன் ஜோடி சேருவது வரை வாணியை நாங்கள் விடுவதாக இல்லை. வேண்டுமானால் ஆதித்யா சோப்ராவை தமிழில் படம் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்.

தொடர்புடைய சுட்டி: தன்வி வியாஸ்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 comments:

aavee said...

உங்க "ஜொள்" மழையில் நனைந்தோம்.. ஹிஹிஹி..

Unknown said...

ஆமாய்யா...ஆமாய்யா...கன்னத்தை தவிர எங்கும் ஒடுக்கமேயில்ல....

சீனு said...

கேட்ரினா கைப், கரீனா கபூர் முதலானோர் தமிழுக்கு தமிழர்களுக்கு தமிழ் சினிமாவிற்கு துரோகம் இழைத்து விட்டனர் என்றே நினைக்கிறன்... :-)


ஆகா கல்யாணம் பார்க்ககூடாதுன்னு இருந்தேன்.. பார்க்க வச்சிருவீங்க போலியே :-)

வவ்வால் said...

வாணி கபூர் பார்த்தால் இப்பவே முத்தினாப்போல தெரியுதே, எதுக்கும் மேடுப்பள்ளங்களை நல்லா கவனிச்சுப்பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம் :-))

# உலக அழகி,பிரபஞ்ச அழகிலாம் "டெக்னிகல் பியூட்டி" ,அளவுகளின் கணக்கு வேற, வாயை வச்சி முடிவு செய்வதில்லை. கருப்பின பெண் கூட உலக அழகியா தேர்வாகி இருக்காங்க.

நவோமி கேம்பல் வாயை எல்லாம் பார்த்தா டாப் மாடல்னு சொல்லுறாங்க?

#நமக்கு மலையாள பிரதேசம் தான் இஷ்டதேசம் ஹி...ஹி!

Anonymous said...

vaani tamil nadttuku vaa nee.....!

Ponmahes said...

வாணி கபூரை பத்தி எழுதி வா(ய்) நீரை வர வச்சிட்டியே பரட்ட...பதிவு அருமை....

unmaiyanavan said...

தமிழன் படம் வெளியானபோது, நீங்கள் பத்தாம் வகுப்பு தான் படித்துக்கொண்டிருந்தீர்கள் என்று நாங்கள் நம்பிவிட்டோம்.

srinivasan said...

குங்கும பூ ரத்தத்தை சுத்தப்படுத்த மட்டுமே பயன்படும். நிறத்திற்கும் ,குங்கும பூவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் பலர் கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாகக் வாங்கி சாப்பிடுவது வழக்கம் ஆகிவிட்டது .

Philosophy Prabhakaran said...

சீனு,

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்...!

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

ப்ரியங்காவாச்சு வாயளவில் கர்ட்லி அம்ப்ரோஸ் போல இருக்கிறார்... நவோமி கேம்பல் உண்மையாகவே அம்ப்ரோஸின் தங்கையாக இருப்பார் போலிருக்கிறது...

Philosophy Prabhakaran said...

சொக்கன்,

அய்யா... தமிழன் வெளிவரும்போது உண்மையாகவே நான் பத்தாம் வகுப்பு தான் படித்துக்கொண்டிருந்தேன்...

Philosophy Prabhakaran said...

ஸ்ரீனி,

இது தகவல் பதிவு இல்லை என்பதால் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...

அதுமில்லாமல் குங்குமப்பூவை கிலோகணக்கில் சாப்பிட்டால் வயித்தால போகுமில்லையா :)