17 October 2011

பிரபா ஒயின்ஷாப் – 17102011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எலக்குசன் அன்னைக்கும் திறக்கப்படும் ஒரே ஒயின்ஷாப் – உங்கள் பிரபா ஒயின்ஷாப் #மச்சி ஒப்பன் த பாட்டில்

பூனம் பாண்டே – உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன்பு இவரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரே ஒரு அறிக்கையில் பப்ளிசிட்டி பப்பாளிப்பழங்களை பறித்துக்கொண்டார். கொஞ்சம் பரபரப்புகள் ஓய்ந்த நிலையில் தனது அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு கொஞ்சம் வெறியேற்றினார். இப்போது குளிப்பது எப்படி என்று கிட்டத்தட்ட strip tease ஸ்டைலில் டெமோ காட்டியிருக்கிறார். இவையெல்லாம் வெறும் விளம்பரத்திற்கும் பணத்திற்கும் தான் என்றாலும், வீடியோவை பார்க்கும்போது அம்மணிக்கு Exhibitionism வகையறா மனநோய் இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. பூனம் நீங்கள் நல்லதொரு மனநோய் மருத்துவரை சந்திப்பது நலம். (உடையணிந்துக்கொண்டு...!!!)

என்னுடைய உயரதிகாரி ஒருவர் நானெல்லாம் ஓட்டு போட மாட்டேன்ப்பா என்று ஃபேஷனாக சொல்லிக்கொண்டார். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பதிலுக்கு ஏதாவது சொன்னால் அப்ரைசல் ஆப்பு-ரைசல் ஆகிவிடக்கூடும் என்பதால் நமுட்டுச்சிரிப்பு ஒன்றினை உதிர்த்து வைத்தேன். இந்தமாதிரி “ட்”டன்னா போடமாட்டேன் என்று சொல்பவர்கள் வாழ்க்கையில் “த்”தன்னாவே போடமுடியாதபடி தண்டனை கொடுத்தால்தான் திருந்துவார்கள். படித்த முட்டாள்கள்.

வழக்கமாக எலக்குசன் கொள்ளியில் எந்தக்கொள்ளியை தேர்ந்தெடுப்பது என்று தடுமாறுவதுண்டு. இந்தமுறை சென்னை மேயர் வேட்பாளர் சைதை.துரைசாமி என்று அறிவித்ததுமே என்னுடைய ஓட்டு அவருக்குத்தான் என்று முடிவு செய்துவிட்டேன். நல்லவேளை அவர் சட்டமன்ற தேர்தலில் தோற்றதாக அறிவித்தார்கள் என்று எண்ணிக்கொண்டேன். கவுன்சிலர் ஓட்டு யாருக்கு என்று சற்றே சிந்தித்தால் தி.மு.க சார்பாக யார் நிற்கிறார்கள் என்பதே குழப்படியாக இருக்கிறது. கேப்டன் மீதுக்கொண்ட நம்பிக்கையும் முந்தாநாள் இரவு போதையாக இறங்கிவிட அநேகமாக என் ஓட்டு அ.தி.மு.கவுக்குத்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது என் ஆள்காட்டி விரலில் மை வைத்திருப்பார்கள்.

ஒருகாலத்தில் தீபாவளி என்றால் இருபது நாட்களுக்கு முன்னாடியிருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவோம். இப்பொழுதெல்லாம் பட்டாசு வெடிக்கும் ஆசையே நமுத்துப் போய்விட்டது. அதிலும் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு வரும் முதல் தீபாவளி. காசை கரியாக்காதே என்று அநேகமாக எல்லோருடைய பெற்றோர்களும் உதிர்க்கும் வார்த்தைகளின் வலி இப்போதுதான் புரிகிறது. #ஒருவேளை எனக்கு வயசாயிடுச்சோ.

சிப்ஸ்:
“பயம்ன்னா எனக்கு என்னன்னே தெரியாது... என் பேரு பிரபாகர்...” அவ்வ்வ்வ் பிரபாகர்ன்னு பேர் வச்சிருக்குற எனக்கே பயமா இருக்கே. நீங்கள்லாம் எப்படிங்க பயப்படாம பாக்குறீங்க. 

மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. இனிமே யாராவது ஹனிமூனுக்கு மூணார் போவீங்க...???

கட்டைப்பை தூக்கிக்கொண்டு மனைவிக்கு பின்னால் பயந்தபடியே நடந்துசெல்லும் கணவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் # செத்தான்டா சேகர்

ஜொள்ளு:
டார்ஜீலிங் கூட பிடிக்கலை... டார்லிங் உன்னை பிடிக்குது...
ட்வீட் எடு கொண்டாடு:

Kaniyen கனியன்
சனிக்கிழமை நாம் எல்லோரும் மீன் ஆகிவிடுகிறோம், தண்ணி இல்லாட்டி உயிரே போய்விடுகிறது !

ஓட்டுனர் உரிமம் அப்ளை பண்றதுக்கு ரெண்டு போட்டோ ப்ருஃப் வேணும்,முக்கியமா ஒன்னுல நம்மஃபோட்டோவும் இன்னொன்ல காந்திஃபோட்டோவும் இருக்கனும்

படத்தில் ஜோடி சேர நித்யாமேனனை அணுகிய Dr.சீனிவாசன் #வாயே இல்லாம வடை பாயாசத்துக்கு ஆசபடுறது ரொம்ப ஓவரு பவர்ஸ்டார்

கருணாநிதி 'சிங்காரசென்னை'என்றழைத்தார்,ஜெயலலிதா 'எழில்மிகுசென்னை' என்கிறார்.சென்னையின் பெயரில் மட்டுமே,சிங்காரமும் எழிலும் சேர்க்கப்படுகிறது

அறிமுகப்பதிவர்: கதம்ப மாலை
ஏற்கனவே சிலருக்கு அறிமுகமாகி இருக்கலாம். நான் கொஞ்சம் அல்ல ரொம்பவே லேட்தான். ஒரு முருங்கைக்காய் சமாச்சார தலைப்பால் ஈர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தேன். ஜெயலலிதா, வைகோ என்று நிறைய சூடான அரசியல் இடுகைகளும் கிடைத்தன. பாலியல் தொழிலாளிகள் பற்றிய இவரது பர்சப்ஷேனை பாருங்கள். புட்டபர்த்தி பற்றிய இடுகையை தவறவிடாதீர்கள். அந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிகூட எழுதியிருக்கிறார். மிகைப்படுத்தி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இவர் எழுதியுள்ள ஒவ்வொரு இடுகையுமே கிளாஸ் தான்.

கேட்ட பாடல்:
ஏற்கனவே இந்தப்பாடலை பற்றி ஆங்காங்கே சிலாகித்திருப்பேன் என்று நினைக்கிறேன். தப்பித்தவறி ஒருமுறை கேட்டுவிட்டால் தொடர்ந்து குறைந்தது பத்து முறையாவது கேட்கத் தோன்றுகிறது. கேட்கவே இப்படியென்றால் பார்த்தால்...

கொசுறு:
மேலே பார்த்த பாடல் காஜல் செல்லத்தை நினைவுப்படுத்தி தொலைத்ததால் காஜல் விசிறிகளுக்காக லக்ஸ் பாப்பா விளம்பரம்...

பார்த்த வீடியோ:
புலியை முரத்தால் (‘ர’ அல்லது ‘ற’ #குழப்பம்) அடித்து விரட்டிய தமிழச்சியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே சிறுத்தைகளோடு கபடி விளையாடும் இங்கிலீஷ்காரியை பாருங்க. ஒருவேளை கலைஞரின் பெண்சிங்கம் இவங்கதானோ...

ரசித்த புகைப்படம்:
சின்ன வயதில் தூரத்தில் இருக்கும் தாஜ் மகாலை உள்ளங்கையில் தாங்கிப்பிடிப்பது போல போட்டோ எடுத்த ஞாபகம். ஆனால் இந்தளவிற்கு பெர்பெக்டாக எடுத்திருப்பது புகைப்படக்கலைஞரின் சாமர்த்தியம்.

போதொபதேசம்:
பீடியால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
லேடியால் சுட்ட வடு

தத்துவம்:
தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

46 comments:

சேட்டைக்காரன் said...

//தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே...!//

கலைஞானி "குருதிப்புனல்" படத்துலே சொன்னது! :-)

விக்கியுலகம் said...

கலக்கல் மாப்ள!

ஆரூர் முனா செந்திலு said...

சிறுத்த இடையாள் என்றால் அது கிக். இது என்னவோ அகன்று இருக்கிறது. இதில் எப்படி பாஸ் வரும் ஜொள்ளு. சைட் அடிப்பது என்றால் ஒகே.

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// கலைஞானி "குருதிப்புனல்" படத்துலே சொன்னது! :-) //

கமல் சொன்னதுன்னு தெரியும்... ஆனா என்ன படம்ன்னு தெரியல... தகவலுக்கு நன்றி சேட்டை...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// கலக்கல் மாப்ள! //

நன்றி மாம்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// சிறுத்த இடையாள் என்றால் அது கிக். இது என்னவோ அகன்று இருக்கிறது. இதில் எப்படி பாஸ் வரும் ஜொள்ளு. சைட் அடிப்பது என்றால் ஒகே. //

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது தல...

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா!!!!!!!!!!

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// ஆஹா!!!!!!!!!! //

இது யாருக்கு தல... மதுரிமாவுக்கா காஜலுக்கா...???

ஆரூர் முனா செந்திலு said...

யாரப்பா அது எனக்கு வயசாயிடுச்சின்னு சொன்னது. இதை வண்மையாக கண்(ண)டிக்கிறேன். வெறும் முப்பது பிளஸ் தாம்ப்பா. இது வாலிப வயசு.

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// யாரப்பா அது எனக்கு வயசாயிடுச்சின்னு சொன்னது. இதை வண்மையாக கண்(ண)டிக்கிறேன். வெறும் முப்பது பிளஸ் தாம்ப்பா. இது வாலிப வயசு //

முப்பது ப்ளஸ் பதினைந்தா....???

சார்வாகன் said...

nice post

வைரை சதிஷ் said...

அசத்தல்

வீடீயோவும் சூப்பர்

ஆரூர் முனா செந்திலு said...

ஹா ஹா ஹா

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃபிரபாகர்ன்னு பேர் வச்சிருக்குற எனக்கே பயமா இருக்கே. நீங்கள்லாம் எப்படிங்க பயப்படாம பாக்குறீங்க.ஃஃஃஃ

பீ.பீ இலங்கை பக்கம் இதை பப்ளிஸ் பண்ணிடாதிங்க... அப்புறம் மற்ற பதிவருக்கும் ஆப்பாயிடும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

சே.குமார் said...

அசத்தல்... அசத்தல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெடி வெடிச்ச பாதிப்பு இன்னும் போகல போல..... (அதான் டெய்லி டீவில தாக்குறாங்கன்னு சொல்றீங்களா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பூனம் நீங்கள் நல்லதொரு மனநோய் மருத்துவரை சந்திப்பது நலம். (உடையணிந்துக்கொண்டு...!!!)////////

இல்லேன்னா அதுவும் ஒரு வீடியோவா வந்துடுமோ? (ஏனுங்க இப்படி ஒரு கெட்ட எண்ணம், ஏதோ இப்பவாவது அதுக்கு மனசு வந்து ஆரம்பிச்சிருக்கு.... அது புடிக்கலியா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஏற்கனவே இந்தப்பாடலை பற்றி ஆங்காங்கே சிலாகித்திருப்பேன் என்று நினைக்கிறேன். தப்பித்தவறி ஒருமுறை கேட்டுவிட்டால் தொடர்ந்து குறைந்தது பத்து முறையாவது கேட்கத் தோன்றுகிறது. கேட்கவே இப்படியென்றால் பார்த்தால்...///////

அழகை ஆராதிப்பதில் மனவாடுகளை அடிச்சுக்க ஆள் கிடையாது...

வெளங்காதவன் said...

ஹி ஹி ஹி .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////kolaaru
படத்தில் ஜோடி சேர நித்யாமேனனை அணுகிய Dr.சீனிவாசன் #வாயே இல்லாம வடை பாயாசத்துக்கு ஆசபடுறது ரொம்ப ஓவரு பவர்ஸ்டார்//////

காசு இருக்கு, அதுக்கு மேல என்னங்க வேணும்?

NAAI-NAKKS said...

தலை ,,,நல்லா இருக்கு ....

சி.பிரேம் குமார் said...

இந்த வார புகைப்படம் அருமை. ஜொள்ளு பழசானது ஏன் ?

Philosophy Prabhakaran said...

@ சார்வாகன், வைரை சதிஷ், சே.குமார், NAAI-NAKKS

வருகைக்கு நன்றி நண்பர்களே...

Philosophy Prabhakaran said...

@ ♔ம.தி.சுதா♔
// பீ.பீ இலங்கை பக்கம் இதை பப்ளிஸ் பண்ணிடாதிங்க... அப்புறம் மற்ற பதிவருக்கும் ஆப்பாயிடும்... //

அய்யய்யோ மதி இதுல உள்குத்து வெளிக்குத்து இல்லை...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// வெடி வெடிச்ச பாதிப்பு இன்னும் போகல போல..... (அதான் டெய்லி டீவில தாக்குறாங்கன்னு சொல்றீங்களா?) //

நான் இன்னும் படம் பார்க்கலை... சிவகுமாரின் விமர்சனத்தை படிச்சதுக்கே டர்ர்ர் ஆயிட்டேன்...

// இல்லேன்னா அதுவும் ஒரு வீடியோவா வந்துடுமோ? (ஏனுங்க இப்படி ஒரு கெட்ட எண்ணம், ஏதோ இப்பவாவது அதுக்கு மனசு வந்து ஆரம்பிச்சிருக்கு.... அது புடிக்கலியா?) //

புடிச்சிருக்கே அதானே பிரச்சனை...

// அழகை ஆராதிப்பதில் மனவாடுகளை அடிச்சுக்க ஆள் கிடையாது... //

மனவாடுகள் - தெலுங்கர்கள் என்று மட்டும் புரிகிறது... யாராவது விரிவான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்...

// காசு இருக்கு, அதுக்கு மேல என்னங்க வேணும்? //

இமேஜ் இல்லையே... அது மட்டும் இருந்தா நேத்து வந்த நடிகைல இருந்து பவர் ஸ்டார்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்... இந்த வயசுலயும் அவர் ஸோ க்யூட் என்று டக்கால்ட்டி விடுவார்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// இந்த வார புகைப்படம் அருமை. ஜொள்ளு பழசானது ஏன் ? //

இதுவே பழசா...??? அடுத்தவாரம் டி.ஆர்.ராஜகுமாரி, எம்.என்.ராஜம் படங்களை போடுறேன்...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஅய்யய்யோ மதி இதுல உள்குத்து வெளிக்குத்து இல்லை...ஃஃஃஃ

சும்மா தமாசுக்கு சொன்னேம்பா... இங்கையும் பலருக்கு அதே பெயர் இருக்கிறத.. அந்தத் துணிவு தான் ஹ..ஹ..

Philosophy Prabhakaran said...

@ ♔ம.தி.சுதா♔
// சும்மா தமாசுக்கு சொன்னேம்பா... இங்கையும் பலருக்கு அதே பெயர் இருக்கிறத.. அந்தத் துணிவு தான் ஹ..ஹ.. //

பல பேருக்கு இருந்தா பரவாயில்லை... தலைவர் பேரே அதானே... அதான் அடக்கி வாசித்தேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// அழகை ஆராதிப்பதில் மனவாடுகளை அடிச்சுக்க ஆள் கிடையாது... //

மனவாடுகள் - தெலுங்கர்கள் என்று மட்டும் புரிகிறது... யாராவது விரிவான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்...//////

மனவாடுனா தெலுங்குல நம்ம ஆளுன்னு அர்த்தம்.... அவங்களுக்குள்ள புதுசா சந்திச்சிக்கிட்டா மனவாடான்னு கேட்டுப்பாங்க.....

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மனவாடுனா தெலுங்குல நம்ம ஆளுன்னு அர்த்தம்.... அவங்களுக்குள்ள புதுசா சந்திச்சிக்கிட்டா மனவாடான்னு கேட்டுப்பாங்க..... //

ஓஹோ... நன்றி...

சென்னை பித்தன் said...

super 'bloodymary!'

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

சிம்பிளா சொல்லணும்ன்னா சூப்பர்

அதுவும் கடைசியா சொன்ன போதொபதேசம் ரொம்ப நல்லா இருக்கு

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா?

தேர்தல் என்றாலும் பிரபா ஒயின்ஷாப் திறக்குமில்லே....

வழமை போலவே சரக்கு ஜாஸ்தி...போதை தூக்கல் பாஸ்..

கேட்ட பாடலில் மனதை பறி கொடுத்து விட்டேன்.

தீர...தீர...எனத் தொடங்கி அந்த அழகி, அவள் பின்னே வரும் பிரமாண்டமான காட்சியமைப்புக்கள் என எல்ல்வாற்றையும் பார்த்து வியந்தேன்.

ilavarasan said...

தத்துவங்களும்,பித்துவங்களும் அருமை

நிரூபன் said...

பூனம் பாண்டே தான் இப்போதைய தீபாவளி வெடி போல இருக்கே;-)))

Dr. Butti Paul said...

காஜல் மயமா இருக்கே, சாரு நம்ம கட்சி போல.

N.H.பிரசாத் said...

இந்த வார சரக்கு சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ said...

சரி இப்போ சொல்லுங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க...? ஏன்னா நாங்க ஸ்டிக்டு.....

MANO நாஞ்சில் மனோ said...

ஜொள்ளு ஹி ஹி ஜூப்பரு!!!!
அப்பிடியே இப்பாலிக்கா தள்ளிவிடுங்க...

அப்பு said...

வணக்கம் பிரபாகரா... நான் லேட்டு... அனாலும் உங்க விஷயங்கள் டாப்பு

Anonymous said...

இந்த வார புகைப்படம் அருமை +++ ....
ட்வீட் அருமை ++++....
போதொபதேசம் அருமை ++++...
தத்துவம் அருமை +++...

bala said...

தத்துவம்:
தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே...!

unmai prabha

Anonymous said...

ஓட்டு? கொஞ்சம் ஆபாசமோ? சரி விடுங்க பாஸ்..

Anonymous said...

///தத்துவம்:
தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே.../// அப்ப உங்களுக்கு தைரியம் இல்லையா பாஸ்? பின்ன விஷால் டயலாக்கு எல்லாம் பயபுடுரீங்ககளே?

Anonymous said...

//அதிலும் சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு வரும் முதல் தீபாவளி.#ஒருவேளை எனக்கு வயசாயிடுச்சோ.//// என்னன்னே ஒன்னுக்கு ஒன்னு முரண இருக்கு? இப்பதானே சம்பாதிக்க ஆரம்பிச்சி இருக்கீங்க, அப்புறம் என்ன பெரிய வயசாச்சி?

அஹமது இர்ஷாத் said...

ந‌ல்லாருக்குங்க‌..க‌ல‌வை தொகுப்பு.. வ‌ய‌சைப் பார்த்து எழுத்தில் இவ்வ‌ள‌வு முதிர்ச்சியா என்று ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டேன்...வாழ்த்துக்க‌ள்.