18 November 2011

கொல்லிமலை ரகசியம்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு இரவில், செல்வின் (அதாங்க அஞ்சாசிங்கம்) அவரது நண்பரின் திருமண நிகழ்விற்காக நாமக்கல், கொல்லிமலை செல்ல இருப்பதாக சொல்ல, எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடுங்க என்றேன்.

வெள்ளிக்கிழமை இரவு பதினோரு மணிக்கு ரயில். இரவு பத்தரைக்கு செல்வினையும் அவரது நண்பர்களையும் எக்மோர் சரவண பவனில் சந்தித்தேன். அவர்கள் டாஸ்மாக்கை கடந்துதான் சரவண பவனுக்கு வந்திருக்கிறார்கள் என்பது முகத்திலேயே தெரிந்தது. பாம்பின கால் பாம்பறியும் என்பதுபோல செல்வின் குறிப்பறிந்து ஒளியூடுருவும் பகார்டியை வாட்டர் பாட்டிலில் மிக்ஸ் செய்து தயாராக வைத்திருந்தார். சிறிது நேரத்தில் செல்வினுடைய நண்பர்கள் எங்களுடைய நண்பர்களாக மாற, மிதமான பகார்டி போதையுடன் பயணம் இனிதே தொடங்கியது.

சனிக்கிழமை காலை ஆறரை மணி. சேலம் மாநகராட்சி எங்களை அன்புடன் வரவேற்றது. ரயிலுக்கு காலைக்கடனை செலுத்திவிட்டு வெளியே வந்தால் ரயில் நிலையத்தின் எதிரே பூட்டிய டாஸ்மாக் எங்களை ஏளனம் செய்தது. கடமைக்காக காலை டிபனை முடித்துக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் செல்ல வேண்டி ஒரு ஜாக்கி பஸ்ஸில் ஏறினோம். (அட லோக்கல் பஸ்ஸுங்க) ம்ம்ம் சேலத்தில் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது. பேருந்தில் சில இருக்கைகள் மட்டுமே பெண்களுக்காம். அந்த ஊர் பெண்கள் ஆண்களை எழுப்பிவிட்டு உட்காரக்கூட தெரியாத அப்பாவிகளாக இருக்கின்றனர். அங்கேயும் கண்டக்டர்கள் கோபமுகம் காட்டவே செய்கிறார்கள்.

நாமக்கல் கோட்டை - மலை உச்சியில் சரசம் செய்யும் ஜோடியை யாரும் ஜூம் செய்து பார்க்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
சேலத்திலிருந்து நாமக்கல் வரை ஒருமணிநேர பேருந்து பயணம். செல்வின் குமுதம் ரிப்போர்ட்டர் வாங்கி தானைத்தலைவி சோனாவின் வாழ்க்கை வரலாற்றுக் காவியத்தை படித்தபடி வந்தார். நாமக்கல் – "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது" என்று பாடிய கவிஞரின் ஊர். சென்னை வெயிலுக்கு சற்றும் சளைக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை கொஞ்சம் தாமதமாக, நாமக்கல் கோட்டைக்கு சென்றோம். உச்சி வெயிலில் பல ஜோடிகள் ஆன்மிக ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். ம்ம்ம் பரவாயில்லை பீப்பிள்... நாமக்கல் டெவலப் ஆகியிருக்கு அப்படின்னு நினைச்ச நாங்க அடுத்த சீன்லையே ஏமாந்தோம்.

கட் பண்ணா நாமக்கல் டாஸ்மாக். எல்லா ஊர்லயும் டாஸ்மாக் மட்டும் ஒரே மாதிரி தான் இருக்கு. ரொம்ப சீரியஸாக ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மழை டாஸ்மாக் கூரையையும் தாண்டி பொழிந்தது. அங்கே இங்கே என்று மழைநீர் ஒழுகாத ஒரு ஓரத்தில் ஒண்டியபடி கொஞ்சம் ப்ளாக் வோட்காவை உள்ளே இறக்கினோம். இப்போது மழை குறைந்திருந்தது. மதிய உணவிற்கு தயாரானோம். நாமக்கல் பஸ் ஸ்டான்ட் அருகே உள்ள புஷ்பா ஓட்டலில் கேபிள் சங்கர் சாப்பிட்டால் ஒரு சாப்பாட்டுக்கடை பதிவு ரெடி. அதிலும் அந்த எண்ணையில் பொறித்த கோழி டிவைன். 

வெண்ணை போல் ஒருவன் - கோட்டையிலிருந்து நாமக்கல் நகரம்
மாலையில் சரோஜா படத்தில் வரும் கேரவன் ரேஞ்சில் எங்களுக்காக ஒரு மாருதி ஆம்னி தயாராகி வந்தது. நானும் தோஸ்த் படா தோஸ்த்களும் கொல்லிமலை நோக்கி புறப்பட்டோம். மலையில் ஏற ஆரம்பிக்கும்போதே கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. மலைகிராமமான செம்மேட்டில் இரவு உணவு பார்சல்களை வாங்குவதற்காக தரையிரங்கினோம். அந்த பரோட்டா கடையில் இருந்த ஆண்ட்டியைப் பற்றி தனி அத்தியாயமே எழுதலாம். பார்சல் தயாராகும் நேரத்தை வீணடிக்க வேண்டாமெனக் கருதி செவ்வனே மீண்டும் சுருதி ஏற்றினோம். இரவு தங்குவதற்கான இடம் தேடும் படலம் தொடங்கியது. ஒரு அயர்ச்சியான தேடலுக்குப் பிறகு மலைவீடு என்ற லாட்ஜை கண்டுபிடித்தோம். 

நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம். சனிக்கிழமை இரவு வேற சும்மா விடுவோமா...? இந்தமுறை கிரேக்க கடவுள் மார்பியஸை நம்பியதால் நான் ஆத்திகனானேன். டிவியில் எம்.ஆர்.ராதா நடித்த திரைப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க, மார்பியஸ் மூன்று லார்ஜ்களை தாண்டியது. நான்காவது லார்ஜை பிளாஸ்டிக் கிளாஸில் ஊற்றிய நிமிடம் வரை நினைவில் இருக்கிறது. அதற்குப்பின் என்ன நடந்ததென்பது கனவுகளின் கடவுளான மார்பியஸுக்கே வெளிச்சம்...!

ஐயர் ஓட்டலில் ஆஃப்பாயில் கேட்டு புரட்சி...!

புலியிடம் பால் கறந்த பிரபல பதிவர்...!

மற்றும் கொல்லிமலை எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்...!

அடுத்த பாகத்தில்... காத்திருங்கள்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

38 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam: 2
Indli: 2
Udance: 2

Very Good Experience, recorded with humour.

Enjoyed very much.

Thanks for sharing.

vgk

Philosophy Prabhakaran said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
// Tamilmanam: 2
Indli: 2
Udance: 2 //

அடேங்கப்பா என்னா புள்ளி வெவரம்...!

// Very Good Experience, recorded with humour.

Enjoyed very much. //

ம்ம்ம் நன்றி...

கணேஷ் said...

சரளமான நடையில் பயண அனுபவத்தைச் சொல்லியிருக்கீங்க... ரொம்பவே ரசிச்சேன். (இப்ப என் ப்ளாக்ல சத்தம் கேக்காது பிரபா. முடியறப்ப வாங்க...) நன்றி.

கணேஷ் said...

-கொல்லிமலை அனுபவம்தானே சொல்லியிருக்கீங்க. ரகசியம் எங்க..? அடுத்த பதிவிலயா?

bandhu said...

தண்ணி அடிச்ச வேகத்த பாத்தா கொல்லி மலை ஒழுங்கா போய் திரும்பி வந்தீங்களா?

சி.பிரேம் குமார் said...

//கடமைக்காக காலை டிபனை முடித்துக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் செல்ல வேண்டி ஒரு ஜாக்கி பஸ்ஸில் ஏறினோம். (அட லோக்கல் பஸ்ஸுங்க)//என்ன ஒரு வில்லத்தனம்.

சி.பிரேம் குமார் said...

வலைத்தளத்தின் புது வடிவம் அருமை

பார்வையாளன் said...

" நாமக்கல் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய கவிஞரின் ஊர்."

இந்த பாடலை பாடிய கணியன் பூங்குன்றனார் நாமக்கல்லில் பிறந்தவரா ?!!!?*&*?

ஆச்சர்யமான புதிய தகவல். மிகவும் நன்றி

அருண்மொழித்தேவன் said...

Nice post :)

NAAI-NAKKS said...

:)

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// இப்ப என் ப்ளாக்ல சத்தம் கேக்காது பிரபா. முடியறப்ப வாங்க... //

கண்டிப்பா வர்றேன் சார்...

// கொல்லிமலை அனுபவம்தானே சொல்லியிருக்கீங்க. ரகசியம் எங்க..? //

அது சொலவடை...

Philosophy Prabhakaran said...

@ bandhu
// தண்ணி அடிச்ச வேகத்த பாத்தா கொல்லி மலை ஒழுங்கா போய் திரும்பி வந்தீங்களா? //

ஒழுங்கா வந்ததுனால தானே இப்படி பதிவெழுதி உங்களை சாவடிச்சிட்டு இருக்கோம்...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// வலைத்தளத்தின் புது வடிவம் அருமை //

நண்பர் ஒருவர் வடிவமைத்து கொடுத்தார்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
//
இந்த பாடலை பாடிய கணியன் பூங்குன்றனார் நாமக்கல்லில் பிறந்தவரா ?!!!?*&*?

ஆச்சர்யமான புதிய தகவல். மிகவும் நன்றி //

என்ன தலைவரே... அவருடைய புனைப்பெயரே நாமக்கல் கவிஞர் தானே... சின்ன வயதில் ஸ்கூல் புக்ஸில் படித்த ஞாபகம்...

Philosophy Prabhakaran said...

@ அருண்மொழித்தேவன்
// Nice post :) //

:))) உண்மையிலேயே நல்லா எழுதியிருக்கேனோ... வராதவங்க கிட்ட இருந்தெல்லாம் வாழ்த்து கிடைக்குது...

விக்கியுலகம் said...

பாருய்யா கிரேக்க கடவுள் மட்டும் உனக்கு காட்சி தந்து இருக்காரா..என்ன கொடும சார் இது...ஹிஹி...பயண அனுபவம் அல்ல இது சரக்கு அனுபவம்...ஹிஹி!

பொன்மலர் said...

Second Photo is Nice.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/கொல்லிமலை எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்...!

அடுத்த பாகத்தில்... காத்திருங்கள்...

//
காத்திருகோம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்


விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

வெளங்காதவன் said...

பிராந்தியில் மிகவும் கவர்ந்தது!

:)

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// பாருய்யா கிரேக்க கடவுள் மட்டும் உனக்கு காட்சி தந்து இருக்காரா..என்ன கொடும சார் இது...ஹிஹி...பயண அனுபவம் அல்ல இது சரக்கு அனுபவம்...ஹிஹி! //

தலைவரே... நீங்க உலக கடவுள்கள் பலரையும் பார்த்திருப்பீங்களே...

Philosophy Prabhakaran said...

@ பொன்மலர்
// Second Photo is Nice. //

நன்றி மேடம்... அப்பவே செல்வின் சொன்னார்...

Philosophy Prabhakaran said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா
// இன்று என் வலையில் //

உஸ்ஸ்ஸ்ஸப்பா...

Philosophy Prabhakaran said...

@ வெளங்காதவன்
// பிராந்தியில் மிகவும் கவர்ந்தது! //

முதல்முறையா வெறும் ஸ்மைலி மட்டும் போடாம ஏதோ சொல்லியிருக்கீங்க... என்ன நடக்க போகுதோ...

சென்னை பித்தன் said...

கலக்கல் ஆரம்பம்.அ தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

அப்பு said...

பிரபா
சாதாரண விஷயத்தை என்ன அசாதரணாம எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்.

Arun J Prakash said...

நல்லா என்ஜாய் செய்திங்க போல, படிக்கும் போதே தெரியுது இது ஒரு சந்தோஷ அனுபவமாக இருந்திருக்கும் என்று.
படிக்கும் போதே நான் ரசித்தேன்.

MANO நாஞ்சில் மனோ said...

சீரியஸாக ஜனநாயக கடமையை ஆற்ற தயாராகிக்கொண்டிருந்த வேளையில் திடீரென மழை டாஸ்மாக் கூரையையும் தாண்டி பொழிந்தது.//

அய் ஒரு மழைக்குள்ளே இன்னொரு மழையா ஹி ஹி, காட்டு காட்டுன்னு காட்டியாச்சா, டாஸ்மாக் மட்டும்தானா வேற "அந்த" அயிட்டமும் உண்டா ஐ மீன் ஆட்டுக்கால் கறி உண்டான்னு கேட்கவந்தேன் ஹி ஹி...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் சிவா இந்தப் பதிவை படிக்கலையா தம்பி..

Ondipuli said...

Padithen Rasithen

கோகுல் said...

எங்க ஊர் உங்க பார்வையில் இன்னும் நல்லாருக்கு.

மழை பெய்யலையோ?போன வாரம் நான் போனப்போ செம மழை.உங்களுக்கு வெயில்.
கொஞ்சம் மழை.கொஞ்சம் வெயிலடிக்கும் ஊருங்க நம்ம ஊரு(சொர்கமே என்றாலும்)

Anonymous said...

நல்லதொரு அனுபவ பதிவு...தொடருங்கள் அப்பப்பம்..-:)

அவ்வளவா கலர் மாற்றம் நல்லாயில்லை...(யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ....-:)நான் ரேடியோ நிப்பாட்டிட்டேன்...)

Thirumalai Kandasami said...

next part,,Hang over - story huh..?

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

கொல்லிமலை ரகசியம் உங்களுக்கு மட்டுமே வெளிச்சம்

ஷர்புதீன் said...

2nd part-ula tasmac undaa?!

சி.பி.செந்தில்குமார் said...

நாமக்கல் வந்தும் அருகே இருக்கும் ஈர்ரோட்டுக்கு தகவல் சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்

பார்வையாளன் said...

சகோதரா .. ஒரு சிறிய வேண்டு கோள் .

நாமக்கல் – ”கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று பாடிய கவிஞரின் ஊர்

என மாற்றி விடுங்கள். நாமக்கல் கவிஞர் இந்த பாடலை பாடினார். அவர் இயற்பெயர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை..

யாதும் ஊரே பாடியவர் கணியன் பூங்குன்றன் என்ற சங்க புலவர் .. அவருக்கும் நாமக்கல் கவிஞருக்கும் சம்பந்தம் இல்லை..

ஒரு சிறப்பான கட்டுரையில் பிழை இருக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் இதை சொல்கிறேன்.

jayaram thinagarapandian said...

Ensoy dude..