4 December 2010

எம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை

வணக்கம் மக்களே....

எந்திரன் படத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவே இந்தப் பதிவு. பதிவிற்கு போவதற்கு முன்னால் ஒரு புதிர் கேள்வி. எந்திரன் படத்தின் கதையின் படி சனாவின் வயது என்ன...? விடை பதிவின் இறுதியில்... யாரும் ஸ்க்ரோல் பண்ணாதீங்க மக்களே.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவம். தொலைகாட்சியின் ஆட்சி, அதாங்க ரிமோட் கண்ட்ரோல் அந்த கருமாந்திரம் என் தந்தையின் கையில் இருந்தது. மனிதர் மக்கள் தொலைக்காட்சிக்கும் மாக்கள் (டிஸ்கவரி) தொலைக்காட்சிக்கும் தாவிக்கொண்டிருந்தார். இன்ட்லியில் எழுபது வாக்குகள் வாங்கச் சொன்னால் கூட வாங்கிவிடலாம், ஆனால் இவரிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கடினம். திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும்போது டபக்கேன்று கே டி.வி வைத்துவிட்டார். அதில் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. போச்சுடா இனி படம் முடியும் வரை சேனல் மாறாதென்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் லவ்வுகிறார்கள். ஆனால் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒருதலைக் காதல். தன் காதலுக்கு இணங்க மறுக்கும் ஹீரோயினை வில்லன் கடத்திக் கொண்டுபோய் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார். ஹீரோ அங்கே வில்லனுக்கு தெரியாதபடி மாறுவேஷம் (!!!) போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார். ஆனால் ஹீரோயினுக்கே ஹீரோவை அடையாளம் தெரியவில்லை. வில்லன் கண் அசரும் நேரத்தில் ஹீரோ தனது அடையாளத்தை ஹீரோயினிடம் நிரூபிக்கிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அதற்குள் வில்லன் இருவரையும் பிடித்துவிடுகிறான்....

என்ன மேலே படித்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா...? இது தான் நம்ம எந்திரன் படத்தோட இரண்டாம் பாதியில் வரும் கதை. இதே கதைதான் அந்த எம்.ஜி.ஆர் படத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோயினாக புரட்சித்தலைவலி... ச்சே சாரி... புரட்சித்தலைவி. வில்லனாக நடிகர் அசோகன். அப்பாவிடம் என்ன படமென்று கேட்டதற்கு நீரும் நெருப்பும் என்று சொன்னார். யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. பின்னர் கூகிள் கூடையில் தேடித் பார்த்ததில் ஒரு இணைப்பில் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். வெள்ளையாக இருப்பவர் நல்லவர், கறுப்பாக இருப்பவர் கெட்டவர் (அவ்வ்வ்வ்வ்....). மேலே சொன்ன எந்திரன் கதைக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் (விஜயகாந்தை சொல்லவில்லை) எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளை எம்.ஜி.ஆர் தான் ஜெ.வை காதலிக்கிறார். வில்லன் கடத்திக்கொண்டு போன தகவல் அறிந்ததும் மாறுவேடம் பூணுகிறார். வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோ ஜப்பான் நாட்டை சேர்ந்த வைர வியாபாரியாக உள்ளே நுழைகிறார்.

வைர வியாபாரியாக தலைவர் பண்ணும் அட்டகாசங்கள் எல்லாம் செம காமெடி. அசோகனிடம் வந்து யங் பிங் மங் சங்... என்று ஏதேதோ உளறுகிறார். ஜப்பானிய மொழியில் பேசுறாராம். அதைவிட தலைவர் நடக்கும் நடை இருக்கிறதே. அப்பப்பா....! அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஜப்பான் நாட்டுக்காரர்கள் அந்தக் காட்சியை பார்த்தால் தங்கள் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக வழக்கு தொடர்ந்துவிடுவார்கள். இங்கே இணைப்பை கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் மனதுவிட்டு சிரிக்கலாம். (எப்பா எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யாரும் கோவிச்சிக்காதீங்கப்பா... ச்சும்மா தமாஷ்....)

எந்திரன் படத்தை ஆர்வமாக பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாம் பாதியில் சிட்டி மற்றும் அவரது அடிமை ரோபோக்கள் ஐஸை ஹைனஸ் என்று அழைப்பார்கள். நான் முதலில் இதனை “HYNUS” என்று புரிந்துக்கொண்டேன். ஏதாவது கிரேக்கக்கடவுளின் பெயராக இருக்கும் அல்லது சுஜாதா கொசுவுக்கு ரங்குஸ்கி என்று பெயர் வைத்தது போல ஐஸுக்கும் ஏதாவது பெயர் வைத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் ஒருநாள் கூகிளில் தேடிப்பார்த்தும் “HYNUS” என்ற வார்த்தையை பற்றிய எந்தக் குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. சென்ற வாரம் ட்விட்டரில் நண்பர் ஒருவர் அது “HYNUS” இல்லைப்பா “HIGHNESS” என்று தகவல் சொன்னார். நீங்க என்ன சொல்றீங்க....?

இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆரம்பத்தில் கேட்ட புதிருக்கான விடை 23 வயது. எப்படி என்று நிச்சயம் கேட்பீர்கள். ஐஸின் பிறந்தநாள் காட்சியில் சிட்டி சொல்லும் வசனம், நீ இந்த பூமிக்கு வந்து இன்னையோட 2 லட்சம் மணிநேரம் ஆகுது.

So,
2,00,000 Hours / 24 = 8333.33 Days

8333.33 / 365 = 22.83 Years

Approximately 23 Years…

பாஸ்... பாஸ்... பேச்சு பேச்சா இருக்கணும். மொதல்ல அந்த கல்ல கீழே போடுங்க.

இப்படித்தான் நம்ம நண்பர் ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி எந்திரன் படத்தில் ஒரு இயக்கப் பிழையை கண்டுபிடித்திருக்கிறார். எவ்வளவோ தேடி பார்த்தேன் அந்த பழைய லிங்க் கிடைக்கவில்லை. ஒருவேளை நீக்கிவிட்டாரோ என்னவோ. அதாவது ரெட் சிப்பை சிட்டிக்கு செலுத்தும்போது ஒரு வசனம் பேசுவார் வில்லன். பின்னர் க்ளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் சிட்டி தனது மெமரியில் இருந்து அதே காட்சியை ஒளிபரப்பி காட்டும். ஆனால் இந்த முறை வில்லன் வசனத்தை வேறுவிதமாக சொல்லுவார். எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணுறாங்க பாருங்க.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

53 comments:

அன்பரசன் said...

//So,
2,00,000 Hours / 24 = 8333.33 Days

8333.33 / 365 = 22.83 Years

Approximately 23 Years…//

கணக்குல புலியோ.

எல் கே said...

கால்குலட்டர் புலி

ஆமினா said...

//புதிருக்கான விடை 23 வயது. //
பரவாயில்லையே... அரிய கண்டுபிடிப்பு. நான் கூட இப்படிலாம் யோசிச்சு கூட பாக்கல. :))

nis said...

///வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள்.///
super

கணக்கில அசத்துறீங்க

அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை.

Unknown said...

டைமுக்கு தூங்கப்போனா இந்த மாதிரி எல்லாம் யோசனை வராது.

Unknown said...

உங்கள் வழிகாட்டலுக்கு (melanam matter)நன்றி.

கண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....
இது ஒரு கொடிய பயணம்.
http://vikkiulagam.blogspot.com

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )
இடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

நீரும் நெருப்பும் இயக்குனர் இப்போது உயிருடம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால்....அவரும் எந்திரன் கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருப்பார்.

karthikkumar said...

HIGHNESS எதுக்காக அப்படி ஒரு பேரு ஐஸ்க்கு. அப்டின்னா

ரஹீம் கஸ்ஸாலி said...

எந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம்

Unknown said...

கே டிவி எல்லாம் பார்த்தா அப்படித்தான் தோணும், ஷங்கரு சுஜாதா கதைங்கறாரு, அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா? ஒன்னும் புரியலியே?

Chitra said...

இப்படி வேற ஐடியா கொடுத்தாச்சா? "உலகம் சுற்றும் வாலிபன்" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல...... ha,ha,ha,ha.....

Prasanna said...

என்னைய்யா இப்படி ஆரம்பிச்சிட்டீங்க :) பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' (இதுவும் நம்ம படங்கள் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன்)என்று அழைப்பார்களே அதுமாதிரி..

எப்பூடி.. said...

எந்திரனுக்கும் நீரும் நெருப்புக்குமிடயிலுள்ள மிகப்பெரும் வித்தியாசம் என்ன தெரியுமா? எந்திரன் ரஜினியின் படங்களிலேயே மிகப்பெரும் வெற்றிப்படம், நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம்.

Srinivas said...

Red chip maattum bothu, Bohra vl tel, Pazhi Dr.vasikaranukku...

In climax, bohra vl tel, Pazhi Andha vasikaranukku....

Dr ku badil Andha replace aayduchu!!!

Thalaivar padathula idhellam kandukka koodadhu...

Unknown said...

பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல

எஸ்.கே said...

அந்த கடைசி டவுட் எனக்கும் வந்தது அப்ப நான் பெரிசா எடுத்துக்கலையே!

சாமக்கோடங்கி said...

//பிரபாகர் சார்.... சூப்பரா எழுதி இருக்கீங்க...ஆனா இந்தக் கதை தான் தமிழ் நாட்டின் ஐம்பது சதவிகத்திற்கும் மேற்பட்ட படங்களின் கதை என்று நினைக்கிறேன்..//
பின் குறிப்பு: நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்..

சாமக்கோடங்கி said...

//follow பட்டனை அமுக்கினா Request URI=too large அப்படீன்னு error message வருதுப்பா...

கொஞ்சம் பாருங்க..

சாமக்கோடங்கி said...

ஆ.. இப்ப ஒத்துகிச்சு பா..

NaSo said...

உங்களுடைய ஆராய்ச்சி இதேபோல் தொடர எனது வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

//2,00,000 Hours / 24 = 8333.33 Days

8333.33 / 365 = 22.83 Years

Approximately 23 Years…//

என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்..!! எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..!! :))

சிவராம்குமார் said...

எல்லாம் நல்லா இருக்கு, ஆனா MGRல ஆரம்பிச்சு அம்மா, கேப்டன் எல்லாரையும் ஒரே பதிவுல கலாச்சிட்டீங்க...

அந்நியன் 2 said...

தலை சுத்துது ....நல்ல சிந்தனை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்....

சி.பி.செந்தில்குமார் said...

செம பிரபா

சி.பி.செந்தில்குமார் said...

எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது?

ஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

எப்புடி புடிச்சிருக்கீங்க பாருங்க எம்.ஜீ.ஆர் படத்துல இருந்து எந்திரன் கதையை.. வாழ்த்துக்கள்..

pichaikaaran said...

நல்ல ஆராய்ச்சி..
சரி.. தேர்வு என்ன ஆச்சு ?

Ram said...

உடுங்க பாஸ்.. கோடிகணக்குல பண்ணும்போது இப்படி தப்பு வரது எல்லாம் சாதாரணம்................. இருந்தாலும் இதெல்லாம் ஓவர்...
வயதுனு சொன்னா நாம இந்த உலகத்துக்கு வந்து இத்தனை வருடம்..
அந்த வயது முடியும் போது பிறந்த நாள் கொண்டாடுறோம்...
உங்க கணக்குபடி பாத்தா... 22.83 Years இப்படி வர கூடாது..
அப்படியே வேறுபாடு இருந்தாலும் அது அதிகமாக தான் இருந்திருக்கும்.. குறைவாய் இருந்திருக்காது.. அதாவது 23.10, 23.05 இந்த மாதிரி... எங்கோ தப்பு நடந்திருக்கு...

Jayadev Das said...

சிட்டி, குழந்தை பிறப்பதையே வினாடிகளில் துல்லியமாகச் சொன்னவர். அதனால் அவர் குறிப்பிட்டுள்ள வயதை நாம் கேள்வியே கேட்க முடியாது. ஆனா ஒரு லாஜிக் படி பாத்தா, ஐஸு தனது எம்.பி.பி.எஸ். முதமாண்டோ, இரண்டாமாண்டோ படிக்கிறார் [ஏன்னா இரட்டை குழந்தைகள் எத்தனை விதம்னு நான்காமாண்டிலா படிக்கப் போகிறார்கள்!] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்![எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா !]

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன், LK, ஆமினா, nis, விக்கி உலகம், ரஹீம் கஸாலி, karthikkumar, இரவு வானம், Chitra, Prasanna, எப்பூடி.., Srinivas, நா.மணிவண்ணன், எஸ்.கே, சாமக்கோடங்கி, நாகராஜசோழன் MA, சேலம் தேவா, சிவா என்கிற சிவராம்குமார், அந்நியன் 2, T.V.ராதாகிருஷ்ணன், சி.பி.செந்தில்குமார், பதிவுலகில் பாபு, பார்வையாளன், தம்பி கூர்மதியன், Jayadev Das

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ அன்பரசன்
// கணக்குல புலியோ //

Calculator உபயம்...

Philosophy Prabhakaran said...

@ nis
// அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை //

ஐஸுக்கு மட்டும் கூடுரதுக்கு பதிலா குறைஞ்சுட்டே போகுமாம்...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// கண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....
இது ஒரு கொடிய பயணம் //

கலக்குங்க... செம பார்ம் போல...

Philosophy Prabhakaran said...

@ ரஹீம் கஸாலி
// தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )
இடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள் //
வாராவாரம் எனக்கு முன்பு என்னுடைய ரேங்கை பார்த்து சொல்வதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

// எந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம் //
யாராவது இந்த மாதிரி கேட்பார்கள் என்று முன்பே தெரியும்... நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் தலைப்பில் மோனை நயம் பொருந்திவந்ததால் இப்படி வைத்தேன்...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா? //

சுஜாதா isaac asimov கதைகளில் இருந்து காப்பி அடித்த கதையை ஏற்கனவே எனது பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Chitra
// "உலகம் சுற்றும் வாலிபன்" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல... //

அடடே நான் அந்த படத்தை பார்த்ததில்லையே...

Philosophy Prabhakaran said...

@ Prasanna
// பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' என்று அழைப்பார்களே அதுமாதிரி.. //

ஆ... நீங்கள் தான் உருப்படியான தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம் //

அடடே அப்படியா... இப்போதான் உண்மை புரியுது... நீங்க எங்க அப்பாவை விட வயசுல பெரியவர் போல இருக்கே...

Philosophy Prabhakaran said...

@ Srinivas
// Red chip maattum bothu, Bohra vl tel, Pazhi Dr.vasikaranukku...
In climax, bohra vl tel, Pazhi Andha vasikaranukku....
Dr ku badil Andha replace aayduchu!!!
Thalaivar padathula idhellam kandukka koodadhu... //

சரியாக சொன்னீர்கள்... உங்கள் ஞாபக சக்திக்கு எனது பாராட்டுக்கள்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல //

இனி பதிவுல பிகர் படமே போடக்கூடாது போல... நீங்க என்ன விட மோசமா இருக்குறீங்களே...

Philosophy Prabhakaran said...

@ சாமக்கோடங்கி
// நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்.. //

அப்படியா... ஆச்சர்யம் தான்... ஆனால் வயதளவில் நான் உங்களுக்கு தம்பிதான்...

Philosophy Prabhakaran said...

@ சேலம் தேவா
// என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்..!! எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..!! :)) //

கல்லூரிக்கு போனவங்கன்னு சொல்லுங்க... ஆனா படிச்சவங்கன்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்... நான் அழுதுடுவேன்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// ஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் //

நன்றி நண்பரே... இரண்டாம் இடத்தை பிடித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க வேண்டும்... சரியா...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// தேர்வு என்ன ஆச்சு ? //

அது செவ்வாய்க்கிழமை தான்... ஆனால் அதற்கு முன்னதாகவே நானும் அம்பேத்கர் படம் பார்க்க முடிவு செய்துவிட்டேன்... ஞாயிறு காலை பார்க்கப்போகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன் & Jayadev Das
நீங்க ரெண்டு பெரும் என்னவிட மிகப்பெரிய ஆராய்ச்சியாளரா வருவீங்க போல...

// 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும் //
இந்தியகல்வி முறையின் படி ஒருவர் +2 முடிக்கும்போது 17 அல்லது 18 ஆகியிருக்கும்... அப்படியே என்றாலும் சனாவுக்கு 20 வயதே ஆகியிருக்க வேண்டும்...

Riyas said...

VERY INTERESTING POST..

Jayadev Das said...

பிரபாகரன் சார், எந்திரன் படத்தில் சனாவின் [ஐஸ்] முழுப் பெயர் தெரியுமா? அவங்கப்பா பேரு தெரியுமா? அவர் எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா? ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா? இவையெல்லாம் எனக்குத் தெரியுமே!!! ஐஸ் காதல் ரத்து பண்ண கொண்டு வரும் இருபது ரூபாய் பத்திரத்தில் கீழ்க் கண்ட விவரங்கள் உள்ளன.

Annanagar 4 -வது குறுக்குத்தெரு Everest Apartments குடியிருப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா என்கிற சனாவிற்க்கும் பெசன்ட் நகரைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் ஏற்ப்பட்ட காதல் அவரது அக்கறையின்மையால் இன்று ஆகஸ்ட் 18 2009 முதல் ரத்து செய்யப் படுகிறது என்பதை அனைவரும் அறியவும்.

இது முதல் பக்கம்,அதற்க்கு அடுத்த பக்கம் [அதான் காற்றில் பறக்குமே] என்ன தெரியுமா? எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்! [ஆராய்ச்சி பண்றதுல எப்படியும் உங்களை விஞ்ச வேண்டும் என்ற ஒரே நோக்கில் உள்ளேன். ஹா.. ஹா..].

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
கலக்கிட்டீங்க ஜெயதேவ்... உங்களோட ஆராய்ச்சி வியக்க வைக்கிறது... எனினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுவதற்கு எனக்கு ஓரிரு நாட்கள் நேரம் தேவைப்படுகிறது.... அதன்பின்பு விரிவான பதிலிடுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
அருமை ஜெயதேவ்... இருப்பினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று எனக்கு தெரிந்துவிட்டது... எந்திரன் படத்தின் டி.வி.டி. வைத்திருக்கிறீர்கள்... அதில் குறிப்பிட்ட காட்சி வரும்போது அதை snapshot எடுத்திருக்கிறீர்கள்... பின்னர் அந்த snapshotஐ zoom செய்து பார்த்திருக்கிறீர்கள்...

நானும் உங்களைப்போல முயற்சி செய்தேன்... என்னிடம் உள்ள பிரிண்ட் அந்த அளவிற்கு தெளிவான பிரிண்ட் இல்லை ஆதலால் குறுக்குத்தெரு, கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா, சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் போன்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிய மற்றவை மங்கலாக தெரிந்தன... உங்களிடம் தெளிவான பிரிண்ட் உள்ளது என்று எண்ணுகிறேன்...

அடுத்த பக்கத்தை நீங்கள் படித்ததும் அப்படியே.... உங்களுடைய இந்த dedication உண்மையிலேயே வியக்க வைக்கிறது... Hats Off to you...

Jayadev Das said...

கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் சொல்லாம இந்த லிங்கை பாருங்க. சூப்பரா தெரியுது. அந்த பத்திரம் வரும் இடத்தில் Pause பண்ணிட்டு படிங்க. அருமையா படிக்கலாம். Pause பட்டனை தட்டுவது கடினம் என்றால் Space Bar-ஐப் பயன்படுத்தவும். இந்த கடிதத்தை வெளியிட வேண்டாம். நான் இன்னமும் முழுதாக டவுன்லோடு பண்ணவில்லை. பணிய பின்பு வெளியிடுங்கள். நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், அதில் டவுன்லோடு பண்ணுவது ரொம்ப சுலபம், YouTube- ல் வந்து முடித்த அடுத்த கணமே Temp Folder- ல் .flv வடிவில் தயாராக இருக்கும், அதை அப்படியே Home Folder -க்கு அனுப்பிவிடுவேன்.!! ஹா....... ஹா....... ஹா....... ஹா....... ஹா.......

http://www.youtube.com/watch?v=2EhdyBRWRnE

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
பார்த்தேன் ரசித்தேன்... அடடே, இவ்வளவு அருமையான எந்திரன் பட பிரிண்ட் வெளிவந்துவிட்டதா... எனக்கு எந்த தளத்திலும் கிடைக்கவில்லையே... எப்படியோ என்னால் யூடியூபில் இருந்து பொறுமையாக பதிவிறக்கிக் கொண்டிருக்க முடியாது...