14 January 2011

கோலி அப்டேட்ஸ் – பொங்கல் ஸ்பெஷல்

பொங்கல் படங்களின் ரிசல்ட்
சிறுத்தையும், ஆடுகளமும் இன்றே பொங்கல் ஆடுகளத்தில் நுழைந்துவிட்ட நிலையில் நாளை கலைஞரின் இளைஞன் வர இருக்கிறது. (காவலன் வந்தால் வரலாம்). இந்நிலையில் கடந்த ஒருவாரமாக நமது வலைப்பூவில் கடந்த ஒருவாரமாக நடைபெற்ற பொங்கல் ரேசில் ஜெயிக்கப்போவது...? கருத்துக்கணிப்பில் மொத்தம் 234 வாக்குகள் (தொகுதி நிலவரமோ...?) பதிவாகி இருக்கின்றன. அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள்...
ஆடுகளம்  106 (45%)
காவலன்   78 (33%)
சிறுத்தை   50 (21%)

யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கலை. சில வாசகர்கள் ஏன் இளைஞன் படத்தை கருத்துக்கணிப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்காக வருந்துகிறேன்.

ஆரண்ய காண்டமும் நடுநிசி நாய்களும்
இந்தப் பொங்கலுக்கு வந்ததெல்லாம் முழுநீள கமர்ஷியல் படங்களாக வந்திருக்கிறது. எனக்கென்னவோ எந்தப் படத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. நம்ம பதிவர்களோட விமர்சனங்களை படித்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். தெலுங்கில் சுருதி நடித்த... அது என்னவோ ஒரு படம் பேர் விளங்கலை விட்டுத் தொலைங்க (பேரா முக்கியம்) அந்தப் படம் வந்திருக்கிறது. இருந்தாலும் பக்கத்தில் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் ஆகாததால் அதையும் பார்க்க முடியவில்லை. அடுத்து என்ன படம் பார்க்கலாம் என்று சிந்தித்தால் ஆரண்ய காண்டம் படமும் நடுநிசி நாய்களும் கூடிய விரைவில் வெளிவர இருக்கும் எனது எதிர்பார்ப்பு படங்கள். ம்ம்ம்... காத்திருப்போம்.

செல்வராகவன் மீண்டும் ஒரு காதல் கதை
ரஜினியின் அடுத்த படம் எப்போது என்று கேட்பது போல திரையுலகினரை பொறுத்தவரையில் அடுத்த மனைவி யார் என்று கேட்கலாம் போல. சரி விட்டுத்தள்ளுங்கள், அது அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். சோனியா அகர்வாலுடன் விவாகரத்து பெற்ற நிலையில் திரையுலகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு பெண்ணை விரும்புவதாக செல்வா தனது சமீப பேட்டிகளில் கூறி வந்தார். இப்போது அவரது காதலி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவரது பெயர் கீதாஞ்சலி. லண்டனில் திரைப்பட தயாரிப்பு பற்றி படித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் திருமணம் என்று சொல்லப்படுகிறது. பிரபுதேவா நயன் திருமணம் கூட ஜூன் மாதம் தானே...?

காவலன் பொங்கல் பொங்குமா...?
காவலன் படம் பற்றிய செய்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்துக் கொண்டிருக்கிறது. பதினைந்து கோடி பணம் கொடுத்தால் ரிலீஸ் செய்யலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கடைசி செய்தி அறிந்தேன். இந்நிலையில் படம் நாளைக்கு வெளிவரலாம், வராமலும் போகலாம் என்பதே இப்போதைய நிலவரம். விஜயகாந்த் ஒருபக்கம் விஜயிடம் வலிய வந்து நான் உதவட்டுமா என்று கேட்டாராம். ஏற்கனவே இருக்குற அரசியல் சிக்கல் போதாதுன்னு இது வேறயா. அதெல்லாம் வேண்டாம்ங்கன்னு மறுத்துட்டாராம் டாக்டர்.

மங்காத்தா புதிய தகவல்கள்
தகவல் 1: மங்காத்தாவின் கதை கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றிய கதையாம். கேட்கவே புதுமையாக இருக்குல்ல.
தகவல் 2: மங்காத்தா படத்தில் அங்காடித் தெரு அஞ்சலியும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார். சிறிய வேடம் என்றாலும் தல படம் என்று ஒப்புக்கொண்டாராம்.

டிஸ்கி: கடைசியாக கிடைத்த தகவலின்படி ஆடுகளம் அமர்க்களமாக இருக்கிறது. சிறுத்தை பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

Post Comment

37 comments:

Unknown said...

முத கோலி என்னோடது

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

Ram said...

//தகவல் 1: மங்காத்தாவின் கதை கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றிய கதையாம். கேட்கவே புதுமையாக இருக்குல்ல.
//

சாரி சார்.. இது பழைய தகவல்..

//இந்தப் பொங்கலுக்கு வந்ததெல்லாம் முழுநீள கமர்ஷியல் படங்களாக வந்திருக்கிறது//

ஒருவேலை காவலன் வந்தா அது முழுநீள காமெடி படமா இருக்குமோ.!!!

ஆதவா said...

பொங்கலுக்கு வந்த படங்கள்ல ஆடுகளம் நல்லாருக்காமே.???

எதுக்கும் பார்த்துடுங்களேன்!!

நடுநிசி நாய்கள் நான் எதிர்பார்க்கும் படம்!!

ஆதவா said...

அடடே/// டிஸ்கி படிக்கலை!!

Harini Resh said...

ஆடுகளம் தான் என் எதிர்பார்ப்பும்

வரட்டும் பார்த்துவிட்டே சொல்லலாம்

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழர் திருநாளாம் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்

Unknown said...

ஆடுகளம் அமர்க்களமாம் .ஒரு நாளைக்கு எத்தன பதிவு போடுவீங்க .வேற வேல வெட்டி கிடையாதா . எவருடைய ப்ளாக்ல் புதிதாக என்ன வெளியிட போகிறார்கள் என்பதை கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருப்பீர்களோ

ஆர்வா said...

தெலுங்கில் சுருதி நடித்த... அது என்னவோ ஒரு படம் பேர் விளங்கலை விட்டுத் தொலைங்க

அந்த படம் பேரு அனகனகா ஓ தீருடு... (சித்தார்த், ஸ்ருதி).. முதல் முறையா டிஸ்னி இந்தப்படத்தை தயாரிச்சிருக்கு.. கிராஃபிக்ஸ் எல்லாமே கலக்கலா வந்திருக்கு.. பாருங்க...

நான் இன்னைக்கு ஆடுகளம் போறேன்.. பார்த்திட்டு சொல்றேன்.. பொங்கல் வாழ்த்துக்கள்

Unknown said...

பொங்கல் வாழ்த்துக்கள் பிரபாகரன்..

நானும் பொங்கல் ரிலீஸ் படங்களை உடனே பார்க்கற ஐடியா இல்லை.. ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்..

aavee said...

"மிரப்பக்காய்" (மிளகாய் ) அப்புடீன்னு ஒரு தெலுங்கு படம் ( ரவி தேஜா நடிச்சது ) கூட வருது. பொங்கல் படங்களிலேயே அது நல்லா இருக்கும்னு பேசிக்கிறாங்க.

நம்ம சிறுத்தை கூட ரவி தேஜா நடிச்ச "விக்ரமார்குடு" படத்தோட ரீமேக் தான்.

அஞ்சா சிங்கம் said...

தமிழ்மணம் ஒட்டு போடமுடியவில்லை இன்ட்லி போட்டாச்சு ...............

NKS.ஹாஜா மைதீன் said...

#ஆடுகளம் 106 (45%)
காவலன் 78 (33%)
சிறுத்தை 50 (21%)#


உங்கள் கணக்குப்படி காவலன் கொஞ்சம் பொங்கி இருக்கே!!!

Anonymous said...

சிறுத்தை முந்தும் போல இருக்கு.பொங்கல் வாழ்த்துக்கள் ..

Anonymous said...

//சிறுத்தை பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை// do you want m y foto...

Anonymous said...

ஆடுகளம் பொங்கல் காலை எட்டு மணிக்கு சத்யம்ல பாத்துட்டு சொல்றேன்.

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம், sakthistudycentre-கருன், தம்பி கூர்மதியன், ஆதவா, Harini Nathan, ரஹீம் கஸாலி, நா.மணிவண்ணன், கவிதை காதலன், பதிவுலகில் பாபு, கோவை ஆவி, அஞ்சா சிங்கம், NKS.ஹாஜா மைதீன், kanthasamy, சிவகுமார்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ sakthistudycentre-கருன்
// உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்... //

சொல்லிக்கொடுத்த எனக்கேவா... நடக்கட்டும் நடக்கட்டும்...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// சாரி சார்.. இது பழைய தகவல்.. //

அப்படிங்களா... சரிவிடுங்க... நான் இப்போதான் படிச்சேன்...

// ஒருவேலை காவலன் வந்தா அது முழுநீள காமெடி படமா இருக்குமோ.!!! //

நமக்கு எப்பவுமே விஜய் படம்னாலே காமெடி தானே...

ப்ரோபைல் படம் புதியதா... இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப்ல நிக்கிற போட்டோவா பாத்து போட்டிருக்கலாமே...

Philosophy Prabhakaran said...

@ ஆதவா
// பொங்கலுக்கு வந்த படங்கள்ல ஆடுகளம் நல்லாருக்காமே.???

எதுக்கும் பார்த்துடுங்களேன்!! //

இல்லைங்க... பாக்குறா மாதிரி ஐடியா இல்லை... முடிவு பண்ணிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ஒரு நாளைக்கு எத்தன பதிவு போடுவீங்க .வேற வேல வெட்டி கிடையாதா . எவருடைய ப்ளாக்ல் புதிதாக என்ன வெளியிட போகிறார்கள் என்பதை கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருப்பீர்களோ //

அது ஒன்னும் இல்லை... ரொம்ப நாள் கழிச்சு லீவ் கிடைச்சுருக்கா... வீட்டுல பொழுது போகலை... அதான் ஒரு இன்ஸ்டன்ட் இடுகை...

Philosophy Prabhakaran said...

@ கவிதை காதலன்
// அந்த படம் பேரு அனகனகா ஓ தீருடு... (சித்தார்த், ஸ்ருதி).. முதல் முறையா டிஸ்னி இந்தப்படத்தை தயாரிச்சிருக்கு.. கிராஃபிக்ஸ் எல்லாமே கலக்கலா வந்திருக்கு.. பாருங்க... //

அப்படிங்களா... தகவல் தந்ததற்கு மிக்க நன்றி...

Philosophy Prabhakaran said...

@ கோவை ஆவி
// "மிரப்பக்காய்" (மிளகாய் ) அப்புடீன்னு ஒரு தெலுங்கு படம் ( ரவி தேஜா நடிச்சது ) கூட வருது. பொங்கல் படங்களிலேயே அது நல்லா இருக்கும்னு பேசிக்கிறாங்க. //

சாரிங்க தெலுங்கு படம் எல்லாம் பாக்குறது இல்லை... எப்படியும் அது ஹிட்டாச்சுன்னா டாகுடர் அல்லது பயம் ரவி ரீமேக்குவாங்க நான் அப்போ பாத்துக்குறேன்...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// உங்கள் கணக்குப்படி காவலன் கொஞ்சம் பொங்கி இருக்கே!!! //

அது என்னோட கணக்கு இல்லை... என் தளத்திற்கு வந்த வாசகர்களோட கணக்கு...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// do you want m y foto... //

அவ்வ்வ்வ்...

// ஆடுகளம் பொங்கல் காலை எட்டு மணிக்கு சத்யம்ல பாத்துட்டு சொல்றேன். //

நல்லா பாருங்க... புத்தாண்டு முதல் படமே இப்படியான்னு யோசிக்க வைக்காம இருந்தா சரி...

டக்கால்டி said...

Good... Kalignarin ilaignan padatthai vittathaala unga veetu ration ah nirutthida poraanga...

Parthu soothaanama nadanthukkanum boss

ராஜகோபால் said...

நான் ஆவளுடன் எதிர்பார்த்த காவலன் கம்பி நீட்டித்தால் கவலையாக வுள்ளது.
கடவுள் அருளால் காவலன் இந்த பொங்கலுக்கு வெளிவந்து எங்களிடம் சொல்லடிவாங்க வேண்டும்.
காவலன் பார்த்து கண்கள் குளமாக பொங்கலை கொண்டாடுங்கள்.

கட்டி கரும்பே வா
கல்கண்டு நிலவே வா
பொங்கி வரும் பொங்கலில்
நீ சக்கரை பாகாக இருக்க
உன்னை பொங்கவைக்கும்
நெருப்பாய் நாம் இருக்க
தாகம் தீர்க்க வா
தனியொரு ஆளாக வா
எம் கடமையாற்ற காவலனே நீ வா.
- பொங்கல் வாழ்த்து காவலனுக்காக மட்டும்

எப்பூடி.. said...

எனக்கு ஏனோ மங்காத்தாமீது அவளவாக நம்பிக்கை ஏற்ப்படவில்லை.


//கடைசியாக கிடைத்த தகவலின்படி ஆடுகளம் அமர்க்களமாக இருக்கிறது.//

இது முன்னரே எதிர்பார்த்ததுதான்.

எப்பூடி.. said...

காவலன் இன்னைக்கு ரிலீஸ் என்கிறார்கள், பார்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

நல்லாத்தான் இருக்கு உங்க அப்டேட்ஸ்///

Philosophy Prabhakaran said...

@ டக்கால்டி, ராஜகோபால், எப்பூடி.., சி.பி.செந்தில்குமார்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ டக்கால்டி
// Good... Kalignarin ilaignan padatthai vittathaala unga veetu ration ah nirutthida poraanga... //

ரொம்பத்தான் கலாய்க்கிறீங்க... ஆனா நான் சொன்னதுல எந்த அரசியல் உள்குத்தும் இல்லை... தப்பா எடுத்துக்காதீங்க...

Philosophy Prabhakaran said...

@ ராஜகோபால்
// நான் ஆவளுடன் எதிர்பார்த்த காவலன் கம்பி நீட்டித்தால் கவலையாக வுள்ளது.
கடவுள் அருளால் காவலன் இந்த பொங்கலுக்கு வெளிவந்து எங்களிடம் சொல்லடிவாங்க வேண்டும்.
காவலன் பார்த்து கண்கள் குளமாக பொங்கலை கொண்டாடுங்கள். //

உங்கள் விருப்பம் போலவே காவலன் வெளிவந்துவிட்டது... மகிழ்ச்சிதானே...

பை தி வே... காவலன் பற்றிய கவிதை கலக்கல்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// எனக்கு ஏனோ மங்காத்தாமீது அவளவாக நம்பிக்கை ஏற்ப்படவில்லை. //

தமிழ் சினிமாவில் எதையுமே உறுதியாக நம்ப முடியவில்லை... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

கவிதை பூக்கள் பாலா said...

"இந்தப் பொங்கலுக்கு வந்ததெல்லாம் முழுநீள கமர்ஷியல் படங்களாக வந்திருக்கிறது. எனக்கென்னவோ எந்தப் படத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. நம்ம பதிவர்களோட விமர்சனங்களை படித்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்."

Unknown said...

மங்காத்தா அப்போ அடித்து ஆடலாம்!!

Selmadmoi gir said...

பொங்கல் வாழ்த்துக்கள்
sueper sir