7 January 2011

2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் – பாகம் 2

வணக்கம் மக்களே...

இந்த ஆண்டில் நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் சில படங்கள் குறித்த பதிவு இது. பதிவின் முதல் பாகத்தை (பத்திலிருந்து ஆறாவது இடம்வரை பிடித்திருக்கும் படங்கள்) படிக்க கீழே கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கவும்...

இப்போது முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் படங்களை பார்ப்போம்...

5. நண்பன் (மூன்று முட்டாள்கள்)
3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக். விஜய் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு இப்போது சூர்யா என்று சொல்லப்படுகிறது. இணையான வேடங்களில் ஜீவா, ஸ்ரீகாந்த். படம் ஷங்கரின் இயக்கத்தில் வர இருக்கிறது என்பதே அதி முக்கியமான விஷயம். முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மீண்டும் தமிழில் இடுப்பழகி இலியானா. இந்தமுறையாவது இலியானாவின் கோலிவுட் பிரவேசம் இனிப்பாக அமையட்டும்.

4. மங்காத்தா
தல படம் என்ற ஒருவரியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்பதே எனது கருத்து. இருப்பினும், நடுநிலையாக பார்த்தால் யூத்துக்களை வைத்து ஜாலியாக படமெடுத்து வந்த வெங்கட் பிரபு சீரியஸாக இறங்கியிருக்கும் முயற்சி. அஜித், அர்ஜுன், பிரேம்ஜி, வைபவ், கணேஷ் வெங்கட்ராமன் என்று ஹிந்தி பட ஸ்டைலில் நட்சத்திர பட்டாளம் நடிப்பது நல்ல விஷயம். கிளிகளுக்கும் பஞ்சமில்லை. த்ரிஷா, சினேகா, லட்சுமி ராய், சோனா என்று ஒரு கூட்டமே இருக்கிறது. யுவனின் இசை படத்திற்கு பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

பில்லா 2
தல நடிப்பில் சூப்பர்ஹிட்டான பில்லா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை இயக்கிய அதே விஷ்ணுவர்தன் இந்தப் படத்தையும் இயக்க யுவன் இசை. எனினும் முதல் பாகத்தில் நடித்த நயன், நமீதா இந்தப் பாகத்தில் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சொல்லப்போனால் இது முதல் பாகத்து கதையின் தொடர்ச்சி அல்ல முதல் பாகத்து கதைக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை. ஹிந்தியில் ஷாருக் நடிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்ட படம்.

3. மாலை நேரத்து மயக்கம் (அ) மருவன் (அ) இரண்டாம் உலகம்
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரான செல்வராகவன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம். மேலும் எனது கனவுக்கன்னி லிஸ்டில் இருந்த ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களே கதை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு கார்த்தி சந்தியா நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட படம் இப்போது புதிய தலைப்போடு தொடங்க இருக்கிறது (தற்போதைய தலைப்பு: இரண்டாம் உலகம்).

சிந்துபாத்
மறுபடியும் ஒரு செல்வராகவன் படம். விக்ரம் நாயகியாகவும் சுப்ரமணியபுரம் சுவாதி நாயகியாகவும் நடிக்க இருப்பதால் எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் கை கோர்க்கிறார். மீண்டும் செல்வராகவனிடம் இருந்து ஒரு சைக்கோ திரில்லர் என்பது மட்டும் கொஞ்சம் சலிப்பூட்டுகிறது.

2. நடுநிசி நாய்கள்
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரில்லர் படம். கால் செண்டர் வாழ்க்கை குறித்த படம் என்பதால் எக்கச்சக்கமாக எதிர்பார்க்கிறேன். படத்தில் பாடல்களும் இசையும் எள்ளளவும் கிடையாது என்பது ஆச்சர்யமான உண்மை. நாயகியாக சமீரா ரெட்டி. நாயகன் புதுமுகம் என்றே தெரிகிறது இருப்பினும் கெளரவ தோற்றத்தில் சூர்யா (எத்தனை படத்தில்தான் கெளரவத் தோற்றத்தில் வருவாரோ)

1. அரவாண்
அங்காடித் தெரு என்ற அருமையான படைப்பை தந்த வசந்த பாலனின் அடுத்த படம். படத்தின் போட்டோ ஷூட் மிரள வைக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்ட பீரியட் படம். மிருகம் மற்றும் ஈரம் புகழ் ஆதியும், பசுபதியும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் என்னுடைய கனவுக்கன்னி தன்ஷிகா நாயகியாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

டிஸ்கி 1: பதிவின் முதல் பாகத்தில் முதலிடம் பிடித்திருக்கும் படத்தை யூகிக்கும் படி சொல்லியிருந்தேன். அதைச் சரியாக யூகித்த ஐத்ரூஸ் மற்றும் Tamil World இருவருக்கும் சேரனின் "டூரிங் டாக்கீஸ்", வடிவேலுவின் "வடி வடிவேலு... வெடிவேலு..." மின்-புத்தகங்கள் மெயில் மூலம் இன்று இருவருக்குள் அனுப்பப்படும்... அவர்கள் இருவரும் தத்தம் மெயில் ஐடிக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

67 comments:

pichaikaaran said...

good

pichaikaaran said...

நடுநிலையாக செயல்பட்டு , அஜித் படத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறீர்கள் . அதற்கு முதலிடம் கொடுத்திருந்தாலும் ஏற்கும்படியே இருந்திருக்கும்

எப்பூடி.. said...

உங்க தெரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் நான்கு திரைப்படங்களும் ஒலக சினிமாப் பதிவர்களால் துவைத்து காயவிடப் படப்போவது உறுதி.

சௌந்தர் said...

இன்னும் ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கா...?

Unknown said...

2011ல் நண்பன் படம் வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த் தனமாகத் தோன்றுகின்றது ...

சேலம் தேவா said...

நீங்க ஒரு வித்தியாசமான ரசிகர்ன்னு நிரூபிச்சிட்டிங்க..!! :-))

Anonymous said...

எல்லாமே கலக்கலான படங்கள்தான்

Anonymous said...

நமக்கு நல்ல தீனி

Unknown said...

//எப்பூடி.. said...
உங்க தெரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் நான்கு திரைப்படங்களும் ஒலக சினிமாப் பதிவர்களால் துவைத்து காயவிடப் படப்போவது உறுதி.//
1.நண்'புண்
2.மங்காட்டா
3.மாலை(மங்'கும்)நேரத்து மயக்கம்
4.நடுநிசி (தெரு) நாய்கள்
5.அரவா(வ)ன்
துவைக்க நான் ரெடி...
காயப் போட நீங்க தயா..........ரா
(கப்பூடி...)

suneel krishnan said...

அரவான் -நானும் எதிர் பார்க்குறேன் ,என் நண்பர் ஒருவர் இந்த படத்தில் துணை இயக்குனராக பனி புரிகிறார் ,அவர் மிகவும் ஸ்லாகித்து கூறி உள்ளார் ,சு .வெங்கடேஷ் அவர்களின் கதை ,கார்த்திக்கின் இசை ,சரித்திர படம் ,வசந்தபாலன் ..நிச்சயம் நல்லா வரும்

டிலீப் said...

நடுநிசி நாய்கள் படம் சூப்பர்
ட்ரைய்லர் பாருங்கள்

கலக்கல் தெரிவு பிரபா

வைகை said...

இந்த படத்துக்கெல்லாம் பதிவர்களுக்கு இலவச டிக்கெட் உண்டா?!

பாலா said...

தல படங்களை மிக அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து போவதால், இந்தமுறை எதிர்பார்ப்பே இல்லாமல் படம் பார்க்க செல்லலாம் என்று நினைக்கிறேன். பில்லா எப்படி உருவானான் என்பதன் பிளாஷ் பேக் கதைதான் பில்லா2 என்று கேள்வி பட்டேன்.

Unknown said...

நல்ல எதிர்பார்ப்புகள்..

Unknown said...

தல படமும் ,அரவான் படமும் என்னுடைய எதிர்ப்பார்ப்பில் உள்ள படங்கள் . ஆனா தல படத்திற்கு முதலிடம் குடுக்காததிற்க்கு கண்டனங்கள்

Speed Master said...

நீங்க ஒரு வித்தியாசமான ரசிகர்ன்னு நிரூபிச்சிட்டிங்க..!!

THOPPITHOPPI said...

வரட்டும் பார்க்கலாம் எது எப்படியென்று

அஞ்சா சிங்கம் said...

நல்ல ரசனை உமக்கு எல்லாமே அதிகம் எடிர்பார்க்கபடும் படங்கள்தான் ..........

Madurai pandi said...

Aravaan padam oduma??? parkalam!!!

Unknown said...

//“தல” படம் என்ற ஒருவரியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்பதே எனது கருத்து//

உண்மைதான்!
ஆனா கொடுமை என்னன்னா இப்படியே படத்தின் டைரக்டர் உட்பட எல்லாரும் நினைத்து விடுவதால்தான் வில்லங்கமே! :-)
நானும் எதிர் பார்க்கிறேன்!

ஜெய்லானி said...

கொஞ்சம் சினிமாவை விட்டு வெளியே வாங்கப்பூ...!! :-)

ராம் குமார் said...

"azhagar saamiyin kuthirai"

viteengalae boss.
ungata ethir paathaen.

most of tamil novel when converted to movie fails in most occasions.

on first view of posters released,i have a thought tat this movie is going to do a big impact in tamil cinema.

secondly,gautham menom,passionate of cinema,shows interest and undertake tat project.

ராம் குமார் said...

Katrathu Tamil Raam in
"THANGA MEENGAL"

one of the expecting movie,not yet come to limelight.

Ram said...

நண்பா ஒரு படத்தின் பெயர் கீழே அப்படத்தின் படத்தை போட கேட்டுகொள்கிறேன்...அதாவது நீங்கள் போட்டிருப்பது நண்பன் படத்துக்கு மங்காத்தா படம் போட்டார் போல் உள்ளது.. பின்பு பின்தொடர்பவர் லிஸ்ட்டை எங்காவது ஓரமாக போடலாம் என நினைக்கிறேன்.. அதே சமயம் பின்தொடர்பவர்கள் லிஸ்ட்டை பெரிதாக வைத்துகொள்ளவேண்டும் என்னும் உங்களது நீங்காத ஆசையை நண்பர்களுக்ககாக விடுத்தது பாராட்டதக்கது..

சரி மேட்டருக்கு வருவோம்..

நண்பன் படம் சங்கர்து தானே அத ஏன் 2011லயே எதிர்பாக்குறீங்க..??
நோ கமெண்ட்ஸ் அடுத்த ரெண்டு படத்துக்கு.. அது தல படம்..
இரண்டாம் உலகம்..!! பாப்போம்..
சிந்துபாத்- விகரமும் நாயகியா.??? செம காமெடி பாஸ்... சுவாதி மை செல்லம்.. என்னோட ஆல் டைம் கனவு கன்னி.. சோ முதல் ஷோ..
நடுநிசிநாய்கள், அரவாண்-கண்டிப்பா பாப்பன்.. ரெண்டுபேருமே எனக்கு பிடித்த டைரக்டர்ஸ்..
இருந்தாலும் நான் 'கோ' படத்தையும் எதிர்பார்க்கிறேன்..

Ram said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்படியோ தயாரிப்பாளர் கல்லா நிரம்பினால் சரி...

idroos said...

Nadunisi naaikal pada herovin peyar veerabakuuvaam.
Ganapathy iyer yaaruppa.

idroos said...

Thala puththakam parisalithamaikku nandri.

idroos007@gmail.com

Sivakumar said...

>சங்கர் படத்தை இந்த ஆண்டு எதிர்பார்க்கிறீங்களா..நடக்கற காரியமா அது...???
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9, லிங்குசாமியின் வேட்டை போன்ற படங்களும் நன்றாக இருக்குமென தோன்றுகிறது.

சி.பி.செந்தில்குமார் said...

thala rasikar/ m m

'பரிவை' சே.குமார் said...

நல்ல எதிர்பார்ப்புகள்.

suriya said...

விக்ரம் நாயகியாகவும் “சுப்ரமணியபுரம்” சுவாதி நாயகியாகவும் நடிக்க இருப்பதால்.......இந்த இடத்தில விக்ரம் நாயகியாகவும் ....என்ற ஒரு பிழை இருக்கிறது திருத்தி கொள்ளுங்கள் !!!

Tamil World said...

hii Frs iam tamil world my id:nsmca83@gmail.com

Anonymous said...

அரவானின் கதை காவல் கோட்டம் என்ற நாவலின் ஒரு பகுதி என்று வசந்த பாலன் சொல்லி இருக்கிறார் . நாவல்ஆஸ்ரியரே இட் திரைபடத்தின் கதை யஸ்ரியர் இருபது மேலும் பார்க்கும் என்னத்தை தோண்டுகிறது

பாரி தாண்டவமூர்த்தி said...

நல்ல தொகுப்பு...
அப்படியே...http://ptm-postbox.blogspot.com/ இதையும் பாருங்க... நான் முதன் முதலா எழுத ஆரம்பித்தது இதுல தான்...பின்னாடி ENGLISH தெரியலனு விட்டுட்டேன்...

Muthu Kumar said...

நண்பா , நீங்கள் ஏன் உங்கள் Blog கிற்கு Google Adsense பயன்படுத்தி கொஞ்சம் பணமும் சம்பாதித்து கொள்ள கூடாது ?? அது நேர்மையான வழிதானே ??

தூயவனின் அடிமை said...

சாரி நண்பரே, திரைப்படம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

சிவகுமாரன் said...

அரவாண் மட்டும் தான் தேறும் பாருங்கள்.

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன், எப்பூடி.., சௌந்தர், ஆகாயமனிதன்.., சேலம் தேவா, ஆர்.கே.சதீஷ்குமார், dr suneel krishnan, டிலீப், வைகை, பாலா, பதிவுலகில் பாபு, நா.மணிவண்ணன், Speed Master, THOPPITHOPPI, அஞ்சா சிங்கம், மதுரை பாண்டி, ஜீ..., ஜெய்லானி, raam, தம்பி கூர்மதியன், தமிழ்வாசி - Prakash, ஐத்ருஸ், விக்கி உலகம், சிவகுமார், சி.பி.செந்தில்குமார், சே.குமார், suriya, Tamil World, Pari T Moorthy, Muthu Kumar, இளம் தூயவன், சிவகுமாரன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// நடுநிலையாக செயல்பட்டு , அஜித் படத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறீர்கள் . அதற்கு முதலிடம் கொடுத்திருந்தாலும் ஏற்கும்படியே இருந்திருக்கும் //

மெய்யாலுமே எனக்கு அஜித் படங்களை விட கெளதம் மேனன், செல்வராகவன் படங்கள் ரொம்பப் பிடிக்கும்... வித்தியாசமான கதைக்களம் என்பதால் அரவானையும் எதிர்ப்பார்க்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ எப்பூடி..
// உங்க தெரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் நான்கு திரைப்படங்களும் ஒலக சினிமாப் பதிவர்களால் துவைத்து காயவிடப் படப்போவது உறுதி. //

ஹி... ஹி... உண்மைதான்... படம் பிடிக்கவில்லை என்றால் நானும் கூட சேர்ந்து துவைப்பேன்...

Philosophy Prabhakaran said...

@ சௌந்தர்
// இன்னும் ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கா...? //

இல்லை நண்பா... இந்த வருஷத்துக்கு இவ்வளவுதான்...

Philosophy Prabhakaran said...

@ ஆகாயமனிதன்..
// 2011ல் நண்பன் படம் வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த் தனமாகத் தோன்றுகின்றது ... //

சரிதான்... வழக்கமாக ஷங்கர் ஒரு படத்தை எடுக்க மூன்றாண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்வாரே...

// 1.நண்'புண்
2.மங்காட்டா
3.மாலை(மங்'கும்)நேரத்து மயக்கம்
4.நடுநிசி (தெரு) நாய்கள்
5.அரவா(வ)ன்
துவைக்க நான் ரெடி...
காயப் போட நீங்க தயா..........ரா
(கப்பூடி...) //

ஏன் இந்த கொலவெறி...?

Philosophy Prabhakaran said...

@ dr suneel krishnan
// அரவான் -நானும் எதிர் பார்க்குறேன் ,என் நண்பர் ஒருவர் இந்த படத்தில் துணை இயக்குனராக பனி புரிகிறார் ,அவர் மிகவும் ஸ்லாகித்து கூறி உள்ளார் ,சு .வெங்கடேஷ் அவர்களின் கதை ,கார்த்திக்கின் இசை ,சரித்திர படம் ,வசந்தபாலன் ..நிச்சயம் நல்லா வரும் //

நீங்களும் எனது ரசனையோடு ஒத்துப்போகிறீர்கள் என்று அறிந்துக்கொன்டத்தில் மகிழ்ச்சி... உங்களுடைய அந்த நண்பருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்... கூடவே நைசாக கதையையும் கேட்டுச் சொல்லுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ டிலீப்
// நடுநிசி நாய்கள் படம் சூப்பர்
ட்ரைய்லர் பாருங்கள் //

இதுவரை பார்க்கவில்லை டிலீப்... நீங்க சொல்லிட்டீங்கல்ல... பாத்துடறேன்...

Philosophy Prabhakaran said...

@ வைகை
// இந்த படத்துக்கெல்லாம் பதிவர்களுக்கு இலவச டிக்கெட் உண்டா?! //

அந்த நெனப்பு வேற இருக்கா... சேரனோ கரு.பழனியப்பனோ படம் எடுத்தால் மறுபடியும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// தல படங்களை மிக அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து போவதால், இந்தமுறை எதிர்பார்ப்பே இல்லாமல் படம் பார்க்க செல்லலாம் என்று நினைக்கிறேன். //

சரிதான்... இன்னும் சொல்லப்போனால் நமக்கு முன்பு படம் பார்த்த அஜித் ரசிகர்களிடம் கருத்து கேட்காமல் இருந்தாலே போதும்...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// ஆனா தல படத்திற்கு முதலிடம் குடுக்காததிற்க்கு கண்டனங்கள் //

ஓவர் தல பாசம் ஒடம்புக்கு ஆகாது மணி...

Philosophy Prabhakaran said...

@ மதுரை பாண்டி
// Aravaan padam oduma??? parkalam!!! //

படம் ஓடுமா இல்லையா என்று எனக்குத் தெரியாது... ஆனால் நிச்சயமாக நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ஜெய்லானி
// கொஞ்சம் சினிமாவை விட்டு வெளியே வாங்கப்பூ...!! :-) //

அறிவுரைக்கு நன்றி நண்பரே... முயல்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ raam
// "azhagar saamiyin kuthirai" //
// Katrathu Tamil Raam in
"THANGA MEENGAL" //

நீங்கள் என்னை விட நிறைய படங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்... தங்க மீன்கள் என்ற படத்தைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.... அழகர்சாமி படம் நாவலை தழுவிய கதை என்பதும் நீங்கள் சொல்லியே தெரிந்துக்கொண்டேன்... நன்றி...

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியன்
// நண்பா ஒரு படத்தின் பெயர் கீழே அப்படத்தின் படத்தை போட கேட்டுகொள்கிறேன்...அதாவது நீங்கள் போட்டிருப்பது நண்பன் படத்துக்கு மங்காத்தா படம் போட்டார் போல் உள்ளது.. //

அதற்காகத்தான் அங்கே ஒரு வரி இடைவெளி விடுகிறேன்... ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை இப்படி இணைத்தே பழகிவிட்டேன்... மாற்றிக்கொள்வது கடினம்...

// பின்தொடர்பவர் லிஸ்ட்டை எங்காவது ஓரமாக போடலாம் என நினைக்கிறேன்.. அதே சமயம் பின்தொடர்பவர்கள் லிஸ்ட்டை பெரிதாக வைத்துகொள்ளவேண்டும் என்னும் உங்களது நீங்காத ஆசையை நண்பர்களுக்ககாக விடுத்தது பாராட்டதக்கது.. //

இந்த அளவுக்கு சிறியதாக ஆக்கியதே எனக்கு வருத்தமாக இருக்கிறது...

// சிந்துபாத்- விகரமும் நாயகியா.??? //

இந்த இடத்தில் திரும்ப திரும்ப தவறு செய்கிறேன் போல... திருத்தி விடுகிறேன்... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ ஐத்ருஸ்
// Thala puththakam parisalithamaikku nandri. //

அது உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு... மெயில் கிடைத்ததும் பதிலளிக்கவும்...

Philosophy Prabhakaran said...

@ சிவகுமார்
// பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9, லிங்குசாமியின் வேட்டை போன்ற படங்களும் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. //

லிங்குசாமியின் படங்களை நான் நம்புவது இல்லை... பாலாஜி சக்திவேலின் படம் வரட்டும் பார்க்கலாம் வகையறா...

Philosophy Prabhakaran said...

@ suriya
// விக்ரம் நாயகியாகவும் “சுப்ரமணியபுரம்” சுவாதி நாயகியாகவும் நடிக்க இருப்பதால்.......இந்த இடத்தில விக்ரம் நாயகியாகவும் ....என்ற ஒரு பிழை இருக்கிறது திருத்தி கொள்ளுங்கள் !!! //

சரி மச்சி மாற்றிவிடுகிறேன்... சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ Tamil World
// hii Frs iam tamil world my id:nsmca83@gmail.com //

நல்லவேளை... கடைசிவரைக்கும் வராமல் போய்விடுவீர்களோ என்று எண்ணி பதறியிருந்தேன்... மெயில் வந்ததும் பதில் போடவும்...

Philosophy Prabhakaran said...

@ Pari T Moorthy
// நல்ல தொகுப்பு...
அப்படியே...http://ptm-postbox.blogspot.com/ இதையும் பாருங்க... நான் முதன் முதலா எழுத ஆரம்பித்தது இதுல தான்...பின்னாடி ENGLISH தெரியலனு விட்டுட்டேன்... //

இது நேற்றுதான் ஆரம்பிச்சா மாதிரி காட்டுது... சரி இருக்கட்டும், அதற்கும் சேர்த்து எனது வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

@ Muthu Kumar
// நண்பா , நீங்கள் ஏன் உங்கள் Blog கிற்கு Google Adsense பயன்படுத்தி கொஞ்சம் பணமும் சம்பாதித்து கொள்ள கூடாது ?? அது நேர்மையான வழிதானே ?? //

நியாயம்தான்... ஏனோ இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை... மேலும் நான் நிலையாக பதிவுலகில் இருப்பதே சந்தேகம்தான் என்ற நிலையில் இப்பொழுதே பணம் சம்பாதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை... மேலும் ad senseஐ பயன்படுத்துவது எப்படி என்று தெரியாது... யாரேனும் சொல்லித்தந்தால் செய்யலாம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அருமை..சூப்பர்..நல்லபதிவு (என்று சொல்லாம் என இருந்தேன். உம்.. விடுங்க..

படித்தபின், பிறவிப்பயனை அடைந்தேன்..ஹி..ஹி..)

Pari T Moorthy said...

வர ஒரு பேருல இருந்தது...இப்ப பெர மாத்திட்டேன். கடைசி பதிவு நேத்து பொட்டது தான்.. நான் கொஞசம் englishல வீக்கு...அதான்...

middleclassmadhavi said...

நான் எல்லாத் திரைப்படங்களையும் பார்ப்பது கிடையாது (நேரமில்லை). எனினும் உங்கள் பட்டியல் ஆவலைத் தூண்டியுள்ளது.

கேரளாக்காரன் said...

Intha Listala Neraya Movie Innum Confirm Kooda Aagala eppadi Neenga ethir Paakka Mudiyum Even Antha Heroes Kooda Ethir Paakka Maattanga


Sindhubath ---- Dropped

Billa& 3 Idiots ---- Still On PreProduction


Appadiye ajit nadaikkaporatha kelappi vitta vettayanayum add pannirunthinganna supera irunthirukkum

Sari OK My mail Id "varunkln@gmail.com" Enakkum Book Anuppirungalen Please

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல லிஸ்ட்டுதான்... நான் ஒரு லிஸ்ட்டு கொடுத்திருந்தேனே போன பதிவுல, அதைப்பற்றி உங்கள் கருத்து?

எம் அப்துல் காதர் said...

தல ரொம்ப சிரமப்பட்டு தொகுத்திருக்கீங்க!! நல்லா இருக்கு.

ம.தி.சுதா said...

கலக்குங்க பிபி ஆனால் படம் கலக்குமோ தெரியாதே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

Philosophy Prabhakaran said...

@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
// Intha Listala Neraya Movie Innum Confirm Kooda Aagala eppadi Neenga ethir Paakka Mudiyum Even Antha Heroes Kooda Ethir Paakka Maattanga //

கரெக்டுதான்... இருந்தாலும் எனக்கு ஒரு அதீத ஆர்வம்...

// Appadiye ajit nadaikkaporatha kelappi vitta vettayanayum add pannirunthinganna supera irunthirukkum //

மூன்று முட்டாள்களில் அஜித்தா... வேண்டவே வேண்டாம் சாமி...

// Sari OK My mail Id "varunkln@gmail.com" Enakkum Book Anuppirungalen Please//

நீங்க இவ்வளவு பணிவா கேக்குறதால அனுப்பி வைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நல்ல லிஸ்ட்டுதான்... நான் ஒரு லிஸ்ட்டு கொடுத்திருந்தேனே போன பதிவுல, அதைப்பற்றி உங்கள் கருத்து? //

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் நண்பரே... கடந்த இடுகையில் கூட நீங்கள் கொஞ்சம் தாமதமாக பின்னூட்டம் இட்டிருந்ததால் பதிலளிக்க தவறிவிட்டேன்...

// 5. வேலாயுதம்
4. தில்லுமுல்லு
3. தாளமில்லா ராகம்
2. தளபதி
1. வேட்டைக்கார புலி ///

இதுதானே உங்க லிஸ்ட்...

இதுல வேலாயுதம் தெலுங்கு பட ரீமேக்... சத்தியமா ஊத்திக்கும்...

தில்லு முள்ளு ன்னுற பேர்ல மாறுபடி ஒரு படம் எடுக்கப் போறாங்கன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது...

தாளமில்லா ராகம் - இது தலைவர் ஜே.கே. ரித்தீஷ் நடிக்கிற படம்தானே... இது இன்னும் கன்பார்ம் ஆகலை... ஆயிடுச்சுன்னா நிச்சயமா முதல்நாள் முதல்ஷோ முதல் பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கிற முதல் ரசிகன் நானாத்தான் இருப்பேன்...

தளபதி, வேட்டைக்கார புலி - தில்லு முள்ளுவுக்கு சொன்ன அதே பதில்...

மொத்தத்துல நீங்க சொன்ன அஞ்சுல மூணு நான் இதுவரை கேள்விப்பட்டிராத படங்கள்...