20 January 2011

புதிர்ப்போட்டி

முஸ்கி 1: யாரும் கேள்வியைக் கூட படிக்காமல் தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்னு அசடு வழிந்தபடி பின்னூட்டம் போடாதீர்கள். குறைந்தபட்சம் ஒரு முயற்சியாவது செய்து பார்க்கலாமே.

முஸ்கி 2: இந்த இரு புதிர்க் கேள்விகளும் நானே சிந்தித்தவை அல்ல, ஒரு புத்தகத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். எனினும் விடைகளை படித்து உணர்ந்திருக்கிறேன்.

முஸ்கி 3: இரண்டு கேள்விகளுக்குமே சரியான விடை சொல்பவர்களுக்கு மட்டும் வழக்கம் போல ஏதாவதொரு நல்ல மின்-புத்தகம் பரிசாக அனுப்பப்படும். போட்டி சுவாரசியம் கருதி அதுவரை பின்னூட்டங்கள் மட்டறுக்கப்படும்.

சரி, புதருக்குள் போவோம்... ச்சே ச்சே ஸ்பெல்லிங் மிஸ்டேக்ப்பா... புதிருக்குள் போவோம்...

1. சரக்கு சந்தானம் சிறு வயதிலிருந்தே எப்பொழுதும் எடக்கு மடக்காக பேசுவான். அது அவனுடைய சுபாவமாகிவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு பெரியவர் அவன் வீட்டுக்கு போயிருந்தார். அப்பொழுது ஊரில் அவருக்கு தெரிந்தவர்களைப் பற்றியெல்லாம் விசாரித்தார்.

நம்ம புருஷோத்தமன்தான் இறந்துவிட்டாரே...! அவரது நான்கு பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்களா...? இப்பொழுது என்ன செய்துக் கொண்டிருக்கின்றனர்...? என்று கேட்டார்.

ஏன் அவர்கள் அனைவருமே பூரண நலத்துடன்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்...! என்றான் சந்தானம்.

மூத்தவன் என்ன செய்கிறான்...? பெருசு

அவன் ஜவுளி வியாபாரி இல்லையே... சரக்கு

அப்படியென்றால் ஜவுளிக்கடை வைத்திருப்பது இரண்டாவது பிள்ளையா...? பெருசு

இரும்பு வியாபாரி மளிகைக்கடைக்காரனை விட ஒருவயது தான் பெரியவன்...! சரக்கு

அப்படியா...? பெருசு

ஆமாம், கடைசி பிள்ளை புருஷோத்தமனுக்குச் செல்லப்பிள்ளை ஆயிற்றே...! அதனால்தான் அவனை தம்முடன் நகைக்கடையிலேயே வைத்திருந்தார்... சரக்கு

சரக்கு சந்தானம் விளக்கிச் சொன்னதிலிருந்து, எந்தப் பிள்ளை எந்த வியாபாரம் பார்க்கிறான் என்று யூகித்துச்சொல்லுங்கள்....?

2. குவாட்டர் கோவிந்தன் சற்று ஓய்வு கிடைத்தாலும் சீட்டாட உட்கார்ந்துவிடுவான். அதற்கேற்றாற்போல அவன் எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு நண்பர்களான சந்தானம், மூர்த்தி, நெப்போலியன் முதலானோர் அவனுக்குக் கைகொடுக்கத் தயாராக இருப்பார்கள். நான் ஒருநாள் கோவிந்தன் வீட்டுக்கு சென்றிருந்தபோது, பக்கத்து அறையில் ஒரே இரைச்சல். எட்டிப் பார்த்தேன் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, கோவிந்தன் சந்தானத்துக்கு எதிரில் இல்லை. நெப்போலியன் மூர்த்தியின் வலப்புறம் இல்லை. மூர்த்தி சந்தானத்துக்கு இடப்புறம் இல்லை.

கோவிந்தனுக்கு இடப்புறம் யார் இருந்தது...? கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்களேன்.

கேரக்டர் உபயம்: விக்கி உலகம் வெங்கட்

டிஸ்கி: அட்ராசக்க சிபி மீது யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. நேற்று முன்தினம் எழுதிய பதிவு இன்ட்லியில் பாப்புலர் ஆகவில்லை. இன்னும் சில வாக்குகளே தேவைப்படுங்கின்றன. அதையும் கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க: -

Post Comment

75 comments:

suneel krishnan said...

முதலாவது மகன்-இரும்பு
இரண்டாம் -மளிகை
மூன்றாம்-ஜவுளி
நான்காம்-நகை

suneel krishnan said...

கோவிந்தனுக்கு இடது புறம் சந்தானம்

Madurai pandi said...

முதல் கேள்வி விடை

முதல் பையன் : இரும்பு வியாபாரி
இரண்டாவது பையன் : மளிகைக்கடைக்காரன்
மூணாவது பையன் : ஜவுளி வியாபாரி
நாலாவது பையன் : நகைக்கடைகாரன்

இரண்டாம் கேள்விக்கு விடை :
மூர்த்தி

--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

தமிழ் செல்வன் இரா said...

vadai yenakke

தமிழ் செல்வன் இரா said...

vadai yenakke

sathishsangkavi.blogspot.com said...

இன்னிக்கு வடை எனக்கு...

middleclassmadhavi said...

1) 1வது மகன் - இரும்பு வியாபாரம்
2வது மகன் - மளிகை வியாபாரம்
3வது மகன் - ஜவுளி வியாபாரம்
4வது மகன் - நகைக்கடை

2)கோவிந்தனுக்கு இடப்புறம் இருந்தது மூர்த்தி

எப்பூடி.. said...

1.இரும்பு வியாபாரி
2.மளிகை கடைக்காரன்
3.ஜவுளிக்கடைக்காரன்
4.நகைக்கடைக்காரன்

note -: இவர்களில் யாருமே இரட்டையர்கள் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன், சரியா?

...................................


கோவிந்தனுக்கு இடதுபுறம் மூர்த்தி.

அஞ்சா சிங்கம் said...

ஆள விடுங்கடா சாமி காலங்காத்தால என்ன சரக்கு அடிக்க வச்சிடாதீங்க ..........

விஜய் said...

முதல் புதிர்

1வது மகன் -- இரும்பு வியாபாரி
2வது மகன் -- மளிகை
3வது மகன் -- ஜவுளி
4வது மகன் -- நகை


இரண்டாம் புதிர்

கோவிந்தனுக்கு இடது புறம் இருந்தது மூர்த்தி

Unknown said...

மூத்தவன் இரும்பு வியாபாரி, அடுத்தவன் மளிகை வியாபாரி.அடுத்தவன் ஜவுளி வியாபாரி, இளையவன் நகை வியாபாரி,


முர்த்தி

Unknown said...

For first question... 1st son irumbu 2nd son maligai 3rd son javuli 4th son nagai for second question napoleon

Speed Master said...

காலங்காத்தால கடுப்புகள கிளப்பிட்டு

ரஹீம் கஸ்ஸாலி said...

அப்பா....இந்த ஆட்டத்துக்கு நான் வரல....இதுக்கு வேறு யாராவது மூளைக்காரங்க வருவாங்க....வந்ததுக்கு அடையாளமா ஓட்டும், பின்னூட்டமும் போட்டுட்டு நான் கிளம்பறேன்....வரட்டா....

Unknown said...

யோவ் ஏன்யா இப்படி காலங்கத்தாலே

Unknown said...

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்களேன்.///

இருந்தா கொடுப்போம்ல

அரபுத்தமிழன் said...

புதிர்ன்னாலே நமக்கென்னவோ புல்லரிக்குதுண்ணே

புடிங்க விடைகளை :)

1.இரும்பு 2.மளிகை 3.ஜவுளி 4.நகை க்கடைகள்

நெப்போலியன் NORTH SIDE

கோவிந்தன் SOUTH SIDE

சந்தானம் EAST SIDE

மூர்த்தி WEST SIDE

Admin said...

புதிர் 1:

முதல் மகன் - இரும்பு
இரண்டாவது மகன் - மளிகை
மூன்றாவது மகன் - ஜவுளி
நான்காவது மகன் - நகை

புதிர் 2:

கோவிந்தனுக்கு இடப்புறம் இருந்தது மூர்த்தி

FARHAN said...

காலைலயே இப்பிடியா ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் கேள்வியின் ஆரம்பப் பகுதியில் பிழை உள்ளது. இரண்டாவது கேள்வியில் பெயரை மாற்றி போட்டிருக்கிறீர்கள், முதலில் அவற்றை சரி செய்யவும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்பூடி எஸ்கேப்பு

Unknown said...

மேட்டர் கிடைக்கலியா?

NKS.ஹாஜா மைதீன் said...

அப்புறமா வந்து சொல்றேன்....

Geetha6 said...

அச்சோ சோ !!!

முத்துசிவா said...

1.முதல் பிள்ளை -இரும்பு கடை
இரண்டாம் பிள்ளை - மளிகை கடை
மூன்றாம் பிள்ளை - ஜவுளிக் கடை
நான்காம் பிள்ளை - நகைக்கடை

2. கோவிந்தனுக்கு இடப்புறம் அமர்ந்திருந்தது மூர்த்தி

தர்ஷன் said...

முதலாவது கேள்வி கொஞ்சம் குழப்பம்தான்

முதலாம் மகன் - இரும்பு வியாபாரி
இரண்டாம் மகன் - மளிகைக் கடைக்காரன்
மூன்றாம் மகன்- ஜவுளி வியாபாரி
நான்காம் மகன் - நகைக்கடையில் உதவியாக இருக்கிறான்

கோவிந்தனுக்கு இடப்புறம் இருந்தது மூர்த்தி

சரியா பிரபாகரன்

Admin said...

பதில் 1:

1- இரும்பு கடை
2- மளிகை கடை
3- ஜவுளி கடை
4- நகை கடை

பதில் 2:

மூர்த்தி

Unknown said...

என் புள்ளங்கள கடத்திட்டாங்களே என்ன பண்ணுவேன்

>>>செத்துப்போன புருஷோத்தமன் சொன்னது ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

1.
மளிகைக்கடைக்காரன் - மூத்தவன்
இரும்பு வியாபாரி - இரண்டாமவன்
ஜவுளிக்கடை - மூன்றாமவன்
நகைக்கடை - நாலாவது மகன்.

2.நெப்போலியன்

உமர் | Umar said...

முதல் மகன் இரும்பு வியாபாரி.
இரண்டாம் மகன் மளிகை வியாபாரி
மூன்றாம் மகன் ஜவுளி வியாபாரி
நான்காம் மகன் நகைக்கடை.

-----

கோவிந்தனுக்கு இடதுபுறம் இருந்தது மூர்த்தி.

---
விடைகள் போதுமா? விளக்கம் அனுப்பவா?

முத்துசிவா said...

தலைவா... நீங்க ஓட்டு போடுங்க ஓட்டு போடுங்கன்னு கேக்குறது, பிரியாணி வாங்கி குடுத்து வலுக்கட்டாயமா j.k.ritheesh படத்த பாக்க சொல்ற மாதிரி இருக்கு.. தயவு செஞ்சி இது மாதிரி இனீமே பதிவுல போடாதீங்க....

Raja said...

answer to first question
the first son-irunbu kadai
second son-maligai kadai
Third son- javulu kadai
Forth son-nagai kadai

answer to Second question
left side to govindan was sandanam

Raja

Unknown said...

பிரசன்ட் மற்றும் ஓட்டு...

Unknown said...

நான் போய் முதல்ல சரக்கு அடிச்சிட்டு வரேன், இப்பயே கண்ண கட்டுது...

தினேஷ்குமார் said...

எதோ எனக்கு தெரிந்தது பிரபா

முதல் கேள்விக்கு

இரும்புவியாபாரி
மளிகைக்கடை
ஜவுளிக்கடை
தங்கம்

சரி ரெண்டாவதுக்கு போவோமா

கோவிந்தனுக்கு இடப்புறம் மூர்த்தி வலப்புறம் சந்தானம் எதிரே நம்ம நெப்போலியன்

சி.பி.செந்தில்குமார் said...

சரக்கு இல்லைன்னா இப்படி பதிவு போட்டுக்கலாமா? ஓக்கே ஓக்கே..

சி.பி.செந்தில்குமார் said...

>>>“அட்ராசக்க” சிபி மீது யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. நேற்று முன்தினம் எழுதிய பதிவு இன்ட்லியில் பாப்புலர் ஆகவில்லை.


யாருக்கும் கோபம் இல்லைன்னாலும் வர வெச்சுடுவீங்க போல.. ஏன் ? ஏன் இந்த கொலை வெறி?

Ram said...

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

Ram said...

1.
முதல்-இரும்பு
இரண்டு-மளிகை
மூன்று-ஜவுளி
நான்கு-நகை(அப்பா செத்ததுக்கப்பறம் கடைய இழுத்து மூடியிருந்தா எனக்கு தெரியாது..)
2.மூர்த்தி

aru(su)vai-raj said...

1. முதல் பிள்ளை இரும்பு வியாபாரி
ரெண்டாவது மளிகை கடை
மூணாவது ஜவுளி
நாலாவது நகைக்கடை

2. அது மூர்த்தி தானே..

அந்நியன் 2 said...

உங்கள் புதிரை விடுவிக்க நான் ரெடி... ஆனால் இப்போ வேலை பழு அதிகம் என்பதால் மூளையை வேலைப் பக்கம் செலுத்துகிறேன்.நேரம் கிடைக்கும் போது வந்து சொல்றேன் அது வரைக்கும் பதிலை சொல்லிட வேண்டாம் சரியா பிரபா.

(அப்பாடா..ஒரு வழியா தப்பிச்சாச்சு யாருக்கும் தெரியாமல் கொல்லைப் பக்கமா ஓடிவிடவேண்டியதுதான்)

வெங்கட் said...

நெ 1 :

1st Son : இரும்பு
2nd Son : மளிகை
3rd Son : ஜவுளி
4th Son : நகை

நெ 2 :

கோவிந்தனுக்கு இடப்புறம் யார் இருந்தது...?

" சந்தானம் "

எம் அப்துல் காதர் said...

அய்யா பிரபா நான் வீட்டுக்கு முழுசா போகணும். ஒட்டு போட்டுட்டேன். வரட்டா!! ஹி.. ஹி..

Devaraj said...

1, மூத்தவன் - இரும்பு வியாபாரி..
இரண்டாவது பிள்ளை - மளிகைக்கடைக்காரன்..
மூன்றாவது பிள்ளை - ஜவுளிக்கடை வியாபாரி..
கடைசி பிள்ளை - நகைக்கடை வியாபாரி..

2, கோவிந்தனுக்கு இடப்புறம் இருந்தது மூர்த்தி..........

Correcta machi....

Anonymous said...

மூர்த்தி

Philosophy Prabhakaran said...

@ dr suneel krishnan, Madurai pandi, தமிழ் செல்வன், சங்கவி, middleclassmadhavi, எப்பூடி.., அஞ்சா சிங்கம், விஜய், உயிர் வளர்பவன்..., புகழேந்தி, Speed Master, ரஹீம் கஸாலி, நா.மணிவண்ணன், அரபுத்தமிழன், Abdul Basith, FARHAN, தமிழ்வாசி - Prakash, கே.ஆர்.பி.செந்தில், NKS.ஹாஜா மைதீன், Geetha6, முத்துசிவா, தர்ஷன், விக்கி உலகம், சே.குமார், கும்மி, Raja, பாரத்... பாரதி..., இரவு வானம், தினேஷ்குமார், சி.பி.செந்தில்குமார், தம்பி கூர்மதியன், aru(su)vai-raj, அந்நியன் 2, வெங்கட், எம் அப்துல் காதர், Devaraj

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ தமிழ் செல்வன், சங்கவி
// இன்னிக்கு வடை எனக்கு... //

ரெண்டு பேருக்கும் வடை கிடையாது... பின்னூட்டங்கள் மட்டறுக்கப்ப்படும்ன்னு போட்டிருந்தேனே கவனிக்காம இப்படியா பல்பு வாங்குறது...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// ஆள விடுங்கடா சாமி காலங்காத்தால என்ன சரக்கு அடிக்க வச்சிடாதீங்க .......... //

உங்ககிட்ட சரக்கு இல்லைன்னுரத டீசண்டா சொல்றீங்களா...

Philosophy Prabhakaran said...

@ Speed Master, ரஹீம் கஸாலி, நா.மணிவண்ணன், FARHAN

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை நண்பர்களே... வழக்கமான வருகையாளர்கள் நீங்களே இப்படி பண்ணலாமா...

Philosophy Prabhakaran said...

@ தமிழ்வாசி - Prakash
// முதல் கேள்வியின் ஆரம்பப் பகுதியில் பிழை உள்ளது. இரண்டாவது கேள்வியில் பெயரை மாற்றி போட்டிருக்கிறீர்கள், முதலில் அவற்றை சரி செய்யவும்... //

ஏன் இந்த பொழப்பு... நான் கூட சீரியஸா கேள்வியில பிழை இருக்குன்னு நினைச்சு பதறிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// மேட்டர் கிடைக்கலியா? //

நீங்க மட்டும் தாண்ணே என்னோட வேதனையை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க... சொல்லப்போனா சரக்கு கூட இருக்கு... ஆனா அதை உட்கார்ந்து டைப்படிக்கவும் மார்கெட்டிங் செய்வதற்கும் நேரமில்லை...

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// அப்புறமா வந்து சொல்றேன்.... //

எப்புறமா...? நான் விடையெல்லாம் சொல்லி முடிச்ச அப்புறமாவா...?

Philosophy Prabhakaran said...

@ Geetha6
// அச்சோ சோ !!! //

ஏன் மேடம் பதறுறீங்க... சீக்கிரமா சொல்லுங்க...

Philosophy Prabhakaran said...

@ விக்கி உலகம்
// என் புள்ளங்கள கடத்திட்டாங்களே என்ன பண்ணுவேன்

>>>செத்துப்போன புருஷோத்தமன் சொன்னது ஹி ஹி //

ஹா... ஹா... மூணு பிள்ளைகளுக்கு மட்டும் நீங்க வச்ச பெயர்களை பயன்படுத்திக்கொள்ள நான்காவது பிள்ளைக்கு மட்டும் பெயர் கிடைக்கவில்லை... பிறகு நெப்போலியன் என்று சூடிக்கொண்டேன்... நெருப்பு நெப்போலியன் என்று வைத்துக்கொள்வோமா...?

Philosophy Prabhakaran said...

@ முத்துசிவா
// தலைவா... நீங்க ஓட்டு போடுங்க ஓட்டு போடுங்கன்னு கேக்குறது, பிரியாணி வாங்கி குடுத்து வலுக்கட்டாயமா j.k.ritheesh படத்த பாக்க சொல்ற மாதிரி இருக்கு.. தயவு செஞ்சி இது மாதிரி இனீமே பதிவுல போடாதீங்க.... //

ஹா... ஹா... ஹா... பொதுவா அந்த மாதிரி போடுறதில்லை.... ஆனா அந்த குறிப்பிட்ட இடுகைக்கு பிரபலமாக ஒரு சில வாக்குகள் மட்டுமே தேவைஎன்ற நிலையில் தவிர்க்க முடியவில்லை...

Philosophy Prabhakaran said...

@ பாரத்... பாரதி...
// பிரசன்ட் மற்றும் ஓட்டு... //

இங்க ஒரு கலவரமே நடந்துட்டு இருக்கு... நீங்க பாட்டுக்கு வந்து உங்க வேலையை மட்டும் பாத்துட்டு போறீங்களே... இது நியாயமா...?

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// நான் போய் முதல்ல சரக்கு அடிச்சிட்டு வரேன், இப்பயே கண்ண கட்டுது... //

அப்படின்னா பிரபா ஒய்ன்ஷாப்லையே அடிங்க... தரமா இருக்கும்...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// யாருக்கும் கோபம் இல்லைன்னாலும் வர வெச்சுடுவீங்க போல.. ஏன் ? ஏன் இந்த கொலை வெறி? //

ஹி... ஹி... சும்மாதான்... ஏதாவது டிஸ்கி போடனுமில்ல....

Philosophy Prabhakaran said...

@ அந்நியன் 2
// உங்கள் புதிரை விடுவிக்க நான் ரெடி... ஆனால் இப்போ வேலை பழு அதிகம் என்பதால் மூளையை வேலைப் பக்கம் செலுத்துகிறேன்.நேரம் கிடைக்கும் போது வந்து சொல்றேன் அது வரைக்கும் பதிலை சொல்லிட வேண்டாம் சரியா பிரபா. //

நீங்க எப்போவேணும்னாலும் விடையை சொல்லுங்க... ஆனா உங்களுக்கு வடை கிடைக்காது பரவாயில்லையா...

Philosophy Prabhakaran said...

@ எம் அப்துல் காதர்
// அய்யா பிரபா நான் வீட்டுக்கு முழுசா போகணும். ஒட்டு போட்டுட்டேன். வரட்டா!! ஹி.. ஹி.. //

நான் என்ன உங்களை கடிச்சா குதறிட்டேன்... சரி போங்க போங்க...

Philosophy Prabhakaran said...

சரியான விடைகள்:

1. மூத்தவன் - இரும்பு வியாபாரி
இரண்டாவது பிள்ளை - மளிகைக்கடைக்காரன்
மூன்றாவது பிள்ளை - ஜவுளிக்கடை வியாபாரி
கடைசி பிள்ளை - நகைக்கடை வியாபாரி

2, கோவிந்தனுக்கு இடப்புறம் இருந்தது மூர்த்தி
தெளிவாகப் பார்க்க: http://i56.tinypic.com/mvtgko.jpg

Philosophy Prabhakaran said...

@ Madurai pandi, middleclassmadhavi, எப்பூடி.., விஜய், உயிர் வளர்பவன்..., அரபுத்தமிழன், Abdul Basith, முத்துசிவா, தர்ஷன், கும்மி, தினேஷ்குமார், தம்பி கூர்மதியன், aru(su)vai-raj, Devaraj

இரண்டு கேள்விகளுக்கும் சரியான விடை சொல்லி போட்டியில் ஜெயிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்... போட்டியில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

Philosophy Prabhakaran said...

@ dr suneel krishnan, புகழேந்தி, சே.குமார், Raja, வெங்கட்

முதல் கேள்விக்கு சரியான பதிலை கூறினாலும் இரண்டாவது கேள்விக்கு தவறாக பதில் அளித்துள்ளீர்கள்... இருக்கட்டும், போட்டியில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்... உங்களுக்கும் பரிசுப்பொருள் வந்துசேரும்...

Philosophy Prabhakaran said...

@ dr suneel krishnan , Madurai pandi, விஜய், புகழேந்தி, அரபுத்தமிழன், Abdul Basith, முத்துசிவா, தர்ஷன், சே.குமார், கும்மி, Raja, Devaraj

தயவு செய்து அவங்கவங்க மெயில் ஐடிக்களை குறிப்பிடுங்கள்... அப்போ தான் மின்-புத்தகத்தை அனுப்ப முடியும்...

வருண் said...

dr suneel krishnan said...

முதலாவது மகன்-இரும்பு
இரண்டாம் -மளிகை
மூன்றாம்-ஜவுளி
நான்காம்-நகை

நானும் கண்டுபிடிச்சேன். ஆனா ஏற்கனவே பலர் சொல்லீட்டாங்களே!

Philosophy Prabhakaran said...

@ வருண்
// நானும் கண்டுபிடிச்சேன். ஆனா ஏற்கனவே பலர் சொல்லீட்டாங்களே! //

நீங்க ரொம்ப லேட்... போட்டி முடிஞ்சுபோச்சு... கமென்ட் மாடரேஷன் வச்சிருந்து இப்பதான் எல்லா கமெண்ட்டையும் வெளியிட்டேன்...

Madurai pandi said...

ஈஈஈஈ !! நானும் போட்டில ஜெயிச்சுட்டேன்....

தம்பி!! என்னோட மெயில்-id maduraipandi1984@gmail.com

--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

தர்ஷன் said...

என்னுடைய mail id - sridhrsh777@yahoo.com

ராம் குமார் said...

1வது மகன்-இரும்பு
2வது மகன்-மளிகை
3வது மகன்-ஜவுளி
4வது மகன்-நகை

மூர்த்தி மூர்த்தி மூர்த்தி

Admin said...

My Mail ID : basith27@gmail.com

சாமக்கோடங்கி said...

இரும்பு,மளிகை,ஜவுளி,நகைக்கடை.. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஒரு வீட்டுல ரொம்பக் கஷ்டப்படறது மூத்த பிள்ளைகள் தான்..

கொடுமையடா...

அப்புறம், மூர்த்திக்கு வலது பக்கத்தில் கோவிந்து, கொவிந்துக்கு வலது புறத்தில் சந்தானம், சந்தானத்துக்கு வலது புறத்தில், நெப்போலியன்,அவனுக்கு வலது புறத்தில் மூர்த்தி..

ஐயோ ராமா..

'பரிவை' சே.குமார் said...

nanba my mail id: kumar.rms@hotmail.com

'பரிவை' சே.குமார் said...

nanba my mail id: kumar.rms@hotmail.com

'பரிவை' சே.குமார் said...

nanba my mail id: kumar.rms@hotmail.com

'பரிவை' சே.குமார் said...

MY Mail Id : kumar.rms@hotmail.com