14 December 2011

புலியிடம் பால் கறந்த பிரபல பதிவர்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தய பாகங்கள்:
மதிய உணவை முடித்துக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் குகையை நோக்கி புறப்பட்டோம். யாருக்கும் வழி தெரியாத காரணத்தினால் ஒரு வழிப்போக்கரிடம் கேட்டோம். பன்னிரண்டு கிமீ கடக்கச் சொன்னார். அவர் சொன்னபடி கடந்துவிட்டு மறுபடியும் ஒருவரிடம் வழி கேட்டோம். சமணர் குகையா...? அது பத்து கிமீ முன்னாடியே போயிருக்குமே என்றார். ஒருவேளை முன்னர் வழி சொன்னவர் பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது புளியம்பட்டிக்கு வழி சொல்லியிருப்பாரோ. மறுபடியும் திரும்பிச்சென்றால் தாமதமாகி விடுமென சமணர் குகை திட்டம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக வியூ பாயிண்ட். எனக்கு ஹைட்டுன்னா ரொம்ப பயம். மொட்டை மாடியில இருந்து கீழே எட்டிப்பார்க்க கூட பயப்படுவேன். (அதுக்கு பின்னாடி ஒரு கருப்பு சரித்திரமே இருக்கு). இந்த லட்சணத்துல மலையுச்சியிலிருந்து கீழே பாக்குறதுன்னா சும்மாவா. தயங்கித் தயங்கி எட்ட நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன்.

செருப்பு அணிந்து நிற்பவர் (போலி) பகுத்தறிவாளர் செல்வின்...!
சமணர் குகை சமாச்சாரத்தில் ஏமாற்றம் அடைந்த நமக்கு ஆறுதல் தரும் விதமாக இன்னொரு பழமையான கோவில் அருகிலிருப்பதாக தகவல் கிடைத்தது. அமானுஷ்யமான அந்த வனப்பகுதியில் சில தூரம் நடந்து உள்ளே சென்றால் பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது அந்த கோவில். ரகசிய அறை ஏதாவது இருக்கிறது என்று தேடிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பினோம்.

கிட்டத்தட்ட எங்கள் பயணம் முடியும் தருவாயில் இருந்தது. மலை அடிவாரத்தை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தும். அதற்குள் எங்களிடம் இன்னும் கொஞ்சம் திரவ உணவு மீதமிருப்பது நினைவுக்கு வர, ஒரு கொண்டையூசி வளைவு தற்காலிக பாராக மாறியது. இந்த பயணத்திற்கு பிறகு எந்த சரக்கடித்தாலும் சரி, மிக்ஸிங் மட்டும் போவொண்டோ தவிர வேற எதுவும் கிடையாது என்று சபதமெடுத்துக்கொண்டேன்.

பதிவின் தலைப்பை படிக்கவும்...!
மறுபடி நாமக்கல் நகரத்திற்குள் நுழைந்தோம். மறுபடி டாஸ்மாக், மறுபடி புஷ்பா ஹோட்டல், மறுபடி எண்ணையில பொரிச்ச கோழி. மறுநாள் அதிகாலை செல்வினின் நண்பருக்கு திருமணம். ஏழு மணிவரைக்கும் எல்லோருமே மட்டை. அப்புறம் சாவகாசமாக எழுந்து சுதாரித்துக் கொண்டு திருமண மண்டபத்திற்கு விரைந்தோம். அங்கே ஒரு அழகான பெண். ஆமாங்க, பரந்துவிரிந்த அந்த மண்டபத்திலேயே அந்த ஒரு பொண்ணு தான் உருப்படி. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள், அதை பக்கத்திலிருந்த அவளுடைய அம்மாவும் நோக்கியதால் ஜகா வாங்கிக்கொண்டேன். பின்ன என்னவாம், நானே கெஸ்ட்டோட கெஸ்ட். ஏற்கனவே உள்ளூர்ல வாங்குனதெல்லாம் பத்தாதுன்னு வெளியூர் போயி வேற வாங்கணுமா...?

கடைசியாக நாமக்கல் கோட்டையிடமும், டாஸ்மாக்கிடமும் விடைபெற்றுக்கொண்டு மனதை கள்ளாக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

டிஸ்கி: அவர் பால் தான் கறக்கிறாரா அல்லது வேறு ஏதாவது செய்கிறாரா என்று யாராவது கேட்டு சொல்லுங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

அனுஷ்யா said...

//மிக்ஸிங் மட்டும் போவொண்டோ தவிர வேற எதுவும் கிடையாது என்று சபதமெடுத்துக்கொண்டேன்.//

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா ....பின்றான்ப்பா பின்றான்ப்பா.....

அனுஷ்யா said...

இன்னிக்கும் நாதான் மொதல் டிக்கெட்டு... அந்த தங்க செயின் எனக்குதானே...(ஏய் ஆசிட் ஊத்திருவேன்...)

Unknown said...

/////////டிஸ்கி: அவர் பால் தான் கறக்கிறாரா அல்லது வேறு ஏதாவது செய்கிறாரா என்று யாராவது கேட்டு சொல்லுங்கள்...!/////////
பக்கத்துல இருந்தது நீங்கதான் உங்களுக்குத் தான் முழுசாத் தெரிஞ்சிருக்கும்.

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// இன்னிக்கும் நாதான் மொதல் டிக்கெட்டு... அந்த தங்க செயின் எனக்குதானே...(ஏய் ஆசிட் ஊத்திருவேன்...) //

உண்மையிலேயே நான்தான் தினமும் முதல் பின்னூட்டம் போடுகிறேன்... போட்டுவிட்டு டெலீட் செய்துவிடுவேன்... ஃபாலோ-அப்புக்காக... அதனால் தங்க செயின் எனக்குத்தான்...

Philosophy Prabhakaran said...

@ அப்பு
// உங்களுக்குத் தான் முழுசாத் தெரிஞ்சிருக்கும் //

முழுசாவா...??? நீங்க எதைச் சொல்றீங்க...

Sivakumar said...

அஞ்சாசிங்கம் அசல் புலிப்பால கறக்காம...என்னய்யா இது சேட்டை?

Sivakumar said...

நாட்ல இந்த பகுத்தறிவாளருங்க தொல்ல தாங்க முடியலப்பா..

Sivakumar said...

உங்ககூட நாலு நாள் வெளியூர் வந்தா நாப்பது பதிவு போடுவீங்க போல இருக்கே. ராஸ்கோல்ஸ். ஈரோடு வேறயா.....ரைட்டு!

Sivakumar said...

எங்கய்யா யுடான்ஸ் திரட்டி? சென்னை பதிவர் சந்திப்புக்கும் நீரு போகல. பன்முகக்கலைஞருக்கு எதிரா பய புள்ள ஏதோ ப்ளான் பண்ணுதே!

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// எங்கய்யா யுடான்ஸ் திரட்டி? சென்னை பதிவர் சந்திப்புக்கும் நீரு போகல. பன்முகக்கலைஞருக்கு எதிரா பய புள்ள ஏதோ ப்ளான் பண்ணுதே! //

waiting for udanz.com... ன்னு ரொம்ப நேரமா பம்மாத்து காட்டுச்சு... கழட்டி ஓரமா போட்டிருக்கேன்...

Unknown said...

சார் இது என்னமோ சரக்குக்கான பயணம் போல...இதுக்கு எதுக்குய்யா இருக்குற கோயிலெல்லாம் இழுக்குறீங்க ஹிஹி!...அவரு வண்டலூர்ல செய்யவேண்டிய வேலைய அங்க போய் செய்யிறாரா ஹிஹி~

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// சார் இது என்னமோ சரக்குக்கான பயணம் போல...இதுக்கு எதுக்குய்யா இருக்குற கோயிலெல்லாம் இழுக்குறீங்க ஹிஹி!...அவரு வண்டலூர்ல செய்யவேண்டிய வேலைய அங்க போய் செய்யிறாரா ஹிஹி~ //

நான் என்னத்த விக்கி கண்டேன்... செல்வின் தான் ஏதோ புராதன ஆராய்ச்சி செய்யணும்ன்னு ஆசைப்பட்டாரு...

Anonymous said...

///பன்னிரண்டு கிமீ கடக்கச் சொன்னார். அவர் சொன்னபடி கடந்துவிட்டு மறுபடியும் ஒருவரிடம் வழி கேட்டோம். சமணர் குகையா...? அது பத்து கிமீ முன்னாடியே போயிருக்குமே என்றார்.///அவரும் உங்களை போல தான்.................. சரக்கடிச்சுட்டு போய்க்கொண்டு இருந்திருப்பாரோ ;):)

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
வருகையினை உறுதிப்படுத்துகிறேன்!
கருத்துக்களோடு பின்னர் வருகின்றேன்.

arul said...

Hi Prabha,

If you have time please see our first comedy short film attempt.


"Mokkai paiyyan sir"

http://www.youtube.com/watch?v=1-kY1Va-KOA&feature=channel_video_title

Anonymous said...

அந்த பொண்ணு நோக்கினாள் என்றால் ஒரு அர்த்தம் இருந்தது, அவள் அம்மாவும் நோக்கினால் என்றால்? உமக்கும் ஆன்ட்டியோநோக்கியோ வியாதி இருக்கா? ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு.

Prem S said...

வாழ்க்கைய என்ஜாய் பண்றீங்க பாஸ் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தப் புலி ஆம்பளைப் புலி மாதிரி தெரியுதே? அப்போ அந்தாளு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஆரூர் முனா செந்திலு said...
அந்த பொண்ணு நோக்கினாள் என்றால் ஒரு அர்த்தம் இருந்தது, அவள் அம்மாவும் நோக்கினால் என்றால்? உமக்கும் ஆன்ட்டியோநோக்கியோ வியாதி இருக்கா? ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு.////

இதுக்கும் ஒரு சங்கமே இருக்கும் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//செருப்பு அணிந்து நிற்பவர் (போலி) பகுத்தறிவாளர் செல்வின்...!//

அப்போ ஒரிஜினல் பகுத்தறிவாளர்னா ஷூ போட்டிருக்கனுமோ? ஷூ வாங்க முடியாத பகுத்தறிவாளன் என்ன பண்ணுவான்? இந்த முதலாளித்துவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்த பயணத்திற்கு பிறகு எந்த சரக்கடித்தாலும் சரி, மிக்ஸிங் மட்டும் போவொண்டோ தவிர வேற எதுவும் கிடையாது என்று சபதமெடுத்துக்கொண்டேன்.///

வாழ்க உம் தேசபக்தி....

Philosophy Prabhakaran said...

@ கந்தசாமி.
// அவரும் உங்களை போல தான்.................. சரக்கடிச்சுட்டு போய்க்கொண்டு இருந்திருப்பாரோ ;):) //

ஒருவேளை அப்படி இருக்குமோ...

Philosophy Prabhakaran said...

@ arul
// Hi Prabha,

If you have time please see our first comedy short film attempt.


"Mokkai paiyyan sir" //

நைட் வந்து பார்க்கிறேன் தல...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// அந்த பொண்ணு நோக்கினாள் என்றால் ஒரு அர்த்தம் இருந்தது, அவள் அம்மாவும் நோக்கினால் என்றால்? உமக்கும் ஆன்ட்டியோநோக்கியோ வியாதி இருக்கா? ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு. //

எனக்கு அப்படியொரு வியாதி இருக்குறது வேற விஷயம்... ஆனா அந்த பொண்ணோட அம்மா பார்த்தது என்னை இல்லை... நான் அந்த பொண்ணை பார்த்ததை... அதாவது வில்லி லுக்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு. //

உங்க வயசுக்கு ஆண்ட்டின்னா அவங்க கிழவியால்ல இருப்பாங்க...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் அந்தப் புலி ஆம்பளைப் புலி மாதிரி தெரியுதே? அப்போ அந்தாளு...... //

அதான் தல... அதேதான்...

// இதுக்கும் ஒரு சங்கமே இருக்கும் போல? //

சங்க தலைவரே நீங்கதானே...

// அப்போ ஒரிஜினல் பகுத்தறிவாளர்னா ஷூ போட்டிருக்கனுமோ? ஷூ வாங்க முடியாத பகுத்தறிவாளன் என்ன பண்ணுவான்? இந்த முதலாளித்துவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்... //

நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க...

// வாழ்க உம் தேசபக்தி.... //

ம்ஹூம் மிக்சிங்கில் மட்டும்தான் தேசபக்தி... சரக்கு எப்பவும் சீமைச்சரக்கு தான்...

Riyas said...

ம்ம்ம் நல்ல சரக்கனுபவம்! சாரி, பயண அனுபவம்..

Anonymous said...

<<< பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply To This Comment]

/// ஆரூர் முனா செந்திலு said...
அந்த பொண்ணு நோக்கினாள் என்றால் ஒரு அர்த்தம் இருந்தது, அவள் அம்மாவும் நோக்கினால் என்றால்? உமக்கும் ஆன்ட்டியோநோக்கியோ வியாதி இருக்கா? ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு.////

இதுக்கும் ஒரு சங்கமே இருக்கும் போல? >>>

சங்கத் தலைவரே நீர் தானய்யா, நாலு பேர் முன்னாடி உம்முடைய பெயர் டேமேஜ் ஆகக்கூடாதுன்னு மறைச்சா எப்படி?

Anonymous said...

<<< Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// ஹி ஹி ஹி எனக்கும் இருக்கு. //

உங்க வயசுக்கு ஆண்ட்டின்னா அவங்க கிழவியால்ல இருப்பாங்க.. >>>

இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உங்க ஊர்ல 30+ அங்கிள்னா நீ என்ன துவக்கப்பள்ளி மாணவனா?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply To This Comment]

யோவ் அந்தப் புலி ஆம்பளைப் புலி மாதிரி தெரியுதே? அப்போ அந்தாளு....../////////////

என்னையா இது அநியாயமா இருக்கு . ஆள் பக்கத்தில் இல்லை என்கிற தையிரியமா?

இரு இரு புலி மட்டும் இல்லை பன்னிகுட்டி மாட்டுனாலும் பால் கறக்கப்படும்...ஜாக்கிரதை .........

யுவகிருஷ்ணா said...

interesting narration. Keep it up Prabha...

Sivakumar said...

//அஞ்சா சிங்கம் said...

என்னையா இது அநியாயமா இருக்கு . ஆள் பக்கத்தில் இல்லை என்கிற தையிரியமா?

இரு இரு புலி மட்டும் இல்லை பன்னிகுட்டி மாட்டுனாலும் பால் கறக்கப்படும்...ஜாக்கிரதை .//

ப.கு. கிட்டயேவா. நீ மட்டும் செஞ்சி காட்டுய்யா. சும்மா பேசக்கூடாது.!!

Unknown said...

@Philosophy Prabhakaran

உடான்சை எப்படி தொடர்பு கொல்றதுன்னு தெரிஞ்சா சொல்லுங்க...
என்னோட வலைப்பதிவு லிங்க் கொடுக்கவே முடியலை. ப்ளாக்டு - ன்னு வருது.
அது என் எப்படின்னு கேக்கலாம்னு தேடித் தேடித் பார்க்கிறேன் - ஒரு இ-மெயில் முகவரி கூட இல்லை.
எனக்குத் தெரிஞ்சு தேச துரோக பதிவெல்லாம் எழுதுன மாதிரி நினைவில்லை.
தெரிஞ்சா [எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரிஞ்சா சொல்லுங்க]

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இது ஊர் சுத்திபார்க்க போன பயனமில்லை சரக்கடிக்க போன பயணம் பிச்சிபுடுவேன் பிச்சி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பின்ன என்னவாம், நானே கெஸ்ட்டோட கெஸ்ட். ஏற்கனவே உள்ளூர்ல வாங்குனதெல்லாம் பத்தாதுன்னு வெளியூர் போயி வேற வாங்கணுமா...?//

விடுய்யா விடுய்யா, நமெக்கெல்லாம் இது புதுசா என்ன..!!

கோகுல் said...

நானே கெஸ்ட்டோட கெஸ்ட். ஏற்கனவே உள்ளூர்ல வாங்குனதெல்லாம் பத்தாதுன்னு வெளியூர் போயி வேற வாங்கணுமா...?

//

கெஸ்ட்டோட கெஸ்ட் எனக்கும் கெஸ்டே!


இங்கே நாலு பேர் இருக்காங்க மொத்தம் பத்து பேரு!பின்னிடலாம்!

கோகுல் said...

பால் கறக்குறத்துக்கான காஸ்ட்யூம் மேட்ச் ஆகலையே அன்ஜாசிங்கம் ராமராஜன் படம் பாத்ததில்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலை பார்த்ததும் ஏதோ இலங்கை பதிவருக்கு எதிரான பதிவோன்னு நினைச்சேன், இதானா உங்க டக்கு?

பிரவீன் said...

அன்ஜாசிங்கம் ராமராஜன் படம் பாத்ததில்லையா? ///
.
.
ராமராஜன் ஒரு படத்தில்தான் பால் கரப்பவராக நடித்தார்!டவுசர் போட்டுகினு கரக்காம ரஜினி மாதிரி கான்வாஸ் ஷூ போட்டுகினு கரந்தா நீங்க ஆ ன்னு பாப்பீங்க!இப்படி தொழிலை இழிவுபடுத்தவேண்டாம்!

ராஜன் said...

அப்படியே மசூதி தேவாலயம் ஆகியவற்றை கிண்டல் செய்தும் பதிவு போடும் தில் இருக்கா உனக்கு?

Philosophy Prabhakaran said...

@ ராஜன்
// அப்படியே மசூதி தேவாலயம் ஆகியவற்றை கிண்டல் செய்தும் பதிவு போடும் தில் இருக்கா உனக்கு? //

மிஸ்டர் ராஜன்... எத்தனை பேரு இதே மொன்னையான கேள்வியை தூக்கிட்டு ஓடி வருவீங்கன்னு தெரியல... இதே கேள்வியை இதன் முந்தய பாகத்தில் ஒருத்தர் கேட்டிருந்தார்... அவருக்கு நான் சொன்ன பதிலை படிக்கவும்... முடிந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள்...

http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post_24.html

தனிமரம் said...

புலிப்பால் கறுக்கின்றாரா ??இல்லை வேற ஏதோ செய்வது போல் இருக்கே!ஹீ ஹீ 

Unknown said...

அது பெண்புலியா பாஸ்? மீசை இருக்கிறமாதிரி தெரியுது? :-)
டாஸ்மாக் வேற போயிருக்கீங்க..அதான் ஹி ஹி!

துரைடேனியல் said...

Innum Niraiya Oorkalukku poi innum niraiya pathivu eluthunga Sago. Adikkadi pathivu pakkam vara mudiyala. Sorry!

Arumaiyana pathivu.

Appuram Sago! Phobia pathi surukkamaa oru pathivu potrukken. Padichuttu karuthu sollunga. NANRI.

Unknown said...

பதிவு கலக்கல்.

ட்ரிப் சம என்ஜாய் பண்ணிங்க போல. படிக்கும் போதே தெரிகிறது.

புலி'கிட்ட பால் கறந்தார் சொல்லி மோதல் பயண பதிவுலையே நிறைய எதிர்பார்ப்பு கொடுத்திங்க......... இப்போ இத படிக்கும் பொது தான் தெரிகிறது.........