30 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 30122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

என்னுடைய வலைப்பூவின் வலதுபக்கத்தில் ‘படித்ததில் பிடித்தது’ என்றொரு பகுதி இருப்பதை பார்த்திருக்கலாம். அங்கே பகிரப்படும் இடுகைகளை ஒரு சிலர் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். 2013 முழுவதும் அப்படி நான் படித்து பிடித்து பகிர்ந்த இடுகைகளின் இணைப்புகளை சேமித்து வைத்திருக்கிறேன். அந்த சேமிப்பில் இருந்து முத்தான பத்து இடுகைகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளேன். நல்ல எழுத்தை வாசிக்க விரும்புபவர்கள் பயன் பெறட்டும். அதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் :- இந்த செக்ஷனில் லக்கி, அதிஷா, சமுத்ரா, வா. மணிகண்டன், சேட்டைக்காரன் போன்ற ஜாம்பவான்களின் (ராஜன், டுபுக்கு மன்னிக்க) இடுகைகளை நான் ஏதோ பரிந்துரைப்பது போல வெளியிடுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, அவர்களுடைய பதிவுகள் நீங்கலாக என்னுடைய முத்து பத்து (வரிசை படுத்தவில்லை, ஷார்ட் லிஸ்ட் செய்வதற்கே நாக்கு தள்ளிவிட்டது) :-


இரண்டு படங்கள் பார்த்தேன். பிரியாணி, கல்யாண சமையல் சாதம். இரண்டும் இணைய விமர்சகர்களின் கூற்றை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம். அல்லது விமர்சனங்களை படித்துவிட்டு பார்த்ததால் எதிர்பார்ப்பு விகிதம் குறைந்து, படம் நன்றாக இருப்பதாக தெரிந்திருக்கலாம்.

முதலில் கல்யாண சமையல் சாதம். இது ஒரு மாதிரி கார்ப்பரேட் ஆசாமிகளுக்கும், மேல்தட்டு (பொருளாதார ரீதியாக) வர்க்கத்திற்கும் மட்டும் பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம் போல தெரிகிறது. காசுக்கு கஷ்டப்படுபவர்கள் படத்தைப் பார்த்தால் வயிற்றெரிச்சலுக்கு உத்தரவாதம். என் போன்ற ஏழைகளுக்கும், பழைய பஞ்சாங்க ஆசாமிகளுக்கு ஒத்துவராது. அந்த வகையில் எனக்கு நிறைய காட்சிகள் எரிச்சலூட்டியது. ஆயிரத்தெட்டு கதாபாத்திரங்கள். சதா லொட லொடவென்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் நிறைய மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. பிரசன்னாவிற்கு முக்கியமான கட்டத்தில் எழுச்சி ஏற்பட மறுக்கிறது. அந்த சிக்கலை வைத்தே வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வார்த்தைகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். லேகா வாஷிங்க்டன் முகம் க்ளோசப்பில் மட்டுமல்ல, லாங் ஷாட்டில் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. அட்லாஸ்ட், மனதுவிட்டு சிரிக்க வைத்ததால் க.ச.சா ஒரு ஃபீல் குட் படம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அடுத்து பிரியாணி. வெளியான சமயம் சென்னையில் இருந்திருந்தால் முதல் நாளே பார்த்திருப்பேன். அதன்பிறகு, விமர்சனங்களை படித்து சற்று சுதாரித்துக்கொண்டாலும், மந்தி டக்கர் மட்டும் மனதிற்குள் குடிகொண்டு மக்கர் செய்துக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்துவிட தயாரானோம். ‘னோம்’ என்றால் நானும் சிங்கமும். அவரும் மந்தி டக்கருக்கு விழுந்திருப்பாரோ என்னவோ...? பிகு பண்ணாமல் வந்துவிட்டார். படம் ஃபிகரு, ஜொள்ளு என நன்றாகத் துவங்கி ஆங்காங்கே சில சுமார் ஜோக்குகள் என நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. மந்தி டக்கர் வருகிறார். சரியாக பத்து நிமிடங்கள் இருக்கலாம். கிறங்கடித்துவிட்டு போய்விட்டார். மந்திக்கு குரல் கொடுத்தவர் யாரென்று விசாரிக்க வேண்டும். அப்புறம், படம் அசுர வேகத்தில் தடதடக்கிறது. எல்லாம் சரி, இறுதி இருபது நிமிடங்கள் மட்டும் படு கேவலமான சொதப்பல். க்ளைமாக்ஸில் யாருமே யூகிக்கமுடியாத ஒரு ட்விஸ்டை வைக்க வேண்டுமென வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறார். அதற்காக இப்படியா பூமாலையை போட்டு குதறுவது...? பிரேம்ஜி நாசராக நடிப்பதை எல்லாம் ஸ்கூல் பசங்க கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசி இருபது நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பிரியாணி சரோஜா லெவலுக்கு இல்லையென்றாலும் ஒகே ரகம்.

மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது வேறு வழியில்லாமல் மசாலா படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று அவர்களுடைய ரசிகர்கள் லாபி பண்ணுவது சமகாலத்தில் அதிகரித்துவிட்டது. அதனை சாதகமாக்கிக் கொண்டுதான் கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 comments:

sethu said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மற்றபடி போன வாரத்துக்கு சேர்த்து
சரக்கு நிறைய இல்ல ஆனாலும் நிறைவே

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி.படிக்காது விடுபட்டவைகளைத்
தொடர்ந்து படிக்க இது மிகவும் உதவியாய் இருக்கிறது
பட விமர்சனமும் இயல்பாக இருந்தது.வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Jayadev Das said...

\\கோலிவுட்டான்கள் \\ புதிய வார்த்தை, இணைய கலைச்சொல் சேகரிப்பவர்கள் கவனிக்க!!

Anonymous said...

வேலைஸ்ரீ கல்யாணஸ்ரீ கொழந்தகுட்டிஸ்ரீ மூனும் சேர்ந்தா வாழ்க்கைஸ்ரீ வாழ்க்கைஸ்ரீ வாழ்க்கைஸ்ரீ அப்புறம்?பாடைஸ்ரீ சுடுகாடுஸ்ரீ சாம்பல்ஸ்ரீ கருமாந்திர வாழ்க்கைஸ்ரீ

வவ்வால் said...

Praba,

Now a days you seems to be under threat, any "domestic violence" on you :-))

அனுஷ்யா said...

நன்றி # ம.ம.பொ

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

புரியல. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். வேர்க்குறாப்புல இருக்கு

கும்மாச்சி said...

சிறந்த பத்து பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Ponmahes said...

இந்த பதிவை ஒயின்ஷாப் ல போடுறதுக்கு பதிலா ..ரெண்டு படங்களோட விமர்சனமா போட்டிருக்கலாம்...ஏன்னா...இந்த சரக்கு மப்பு ஏறவே இல்ல டா தம்பி...


எழுதிய வரைக்கும் அருமை... வாழ்த்துக்கள்.....

வவ்வால் said...

பிரபா,

வூட்டுக்கு பயந்துக்கிட்டூ அடக்கமா எழுதுறாப்போல தோன்றியதை சொன்னேன்,வேறொன்னுமில்லை.

க.ச.சா எல்லாம் ரசிச்சுசிரிக்கனும்னா "அம்மாஞ்சி" மனநிலை தேவை, அடியேனின் அவதானிப்பு மட்டுமே!

கலாகுமரன் said...

//கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் //
சொல்லாடல் ரஸித்தேன்..

unmaiyanavan said...

://மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது வேறு வழியில்லாமல் மசாலா படத்தில் லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று அவர்களுடைய ரசிகர்கள் லாபி பண்ணுவது சமகாலத்தில் அதிகரித்துவிட்டது. அதனை சாதகமாக்கிக் கொண்டுதான் கோலிவுட்டான்கள் இப்படியெல்லாம் காதுகளில் சாமந்தி சொருகுகிறார்கள் என்று நினைக்கிறேன்//"

உண்மை தான். சரியாக சொன்னீர்கள். இப்பொழுதெல்லாம், லாஜிக் அப்படின்னா என்ன என்று கேட்கிற அளவில் தான் நம் தமிழ் படங்கள் இருக்கிறது.

தேன் நிலா said...

படித்ததில் பிடித்த பத்து பதிவுகளும் அருமை.. வழக்கம்போலவே விமர்சனும்...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பிரபாகரன்..!

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

Vijayan Durai said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ:)
//என்னுடைய வலைப்பூவின் வலதுபக்கத்தில் ‘படித்ததில் பிடித்தது’ என்றொரு பகுதி இருப்பதை பார்த்திருக்கலாம். அங்கே பகிரப்படும் இடுகைகளை ஒரு சிலர் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.//

தொடரட்டும் நின் பணி ! லிஸ்ட்ல எவ்ளோ பதிவுகள் பாஸ் இருந்தது :)