21 October 2011

Paranormal Activity 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த மாதம் Paranormal Activity படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இந்தப்படம் அதன் prequel. அதாவது முந்தய படத்தின் கதைக்கு முன்பே நடந்த சம்பவங்களின் தொகுப்பு. கிறிஸ்டி – டேனியல் தம்பதிகள், அவர்களுடைய கைக்குழந்தை, டேனியலின் பதின்ம வயது மகள் (மூத்த தாரத்து வாரிசு போல), கூடவே ஒரு நாய் இவர்கள் ஒரு பங்களாவில் வசிக்கின்றனர். கிரிஸ்டியின் தங்கையாக முதல் பாகத்தில் வரும் கேட்டி அக்காளுக்காக ஆசையாக ஒரு நெக்லஸ் வாங்கித்தருகிறார். திடீரென வீட்டில் இருந்து அந்த நெக்லஸ் காணாமல் போய்விட கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திகில் ஸ்டார்ட்ஸ்....

முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது ரொம்பவே பொறுமையை சோதிக்கிறார்கள். ஆரம்பித்து இருபது நிமிடம் வரை ரொம்ப போர். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக விஜய் டிவி பாஷையில் அமானுஷ்ய சம்வங்கள் நிகழ்கின்றன. வேலைக்காரப்பெண் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துக்கொள்கிறார். ஆனால் டேனியல் அதை நம்ப மறுத்து அவளை வெளியேற்றுகிறார். முதல் பாகத்தைப் போலவே திகில் ஒவ்வொரு இரவிலும் கூடிக்கொண்டே போகிறது. இரவில் குழந்தைக்கு துணையாக இருக்கும் நாய் ஒருநாள் மூர்க்கமாக தாக்கப்படுகிறது. டேனியலும் அவரது மகளும் நாயை நள்ளிரவில் மருத்துவனைக்கு அழைத்துச்செல்ல, வீட்டில் கிறிஸ்டியும் கைக்குழந்தையும் தனியாக... இதற்கு மேல் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே சமயத்தில் வெளியான இந்தப்படம் வெறும் மூன்று மில்லியன் செலவில் தயாராகி நூற்றியைம்பது மில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் முதல் பாகம் அளவிற்கு மிரட்டவில்லை. ஒருவேளை வேறு இயக்குனர் இயக்கியது கூட காரணமாக இருக்கலாம். அல்லது அதிக கேரக்டர்களை உலவ விட்டதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இரவு தனியாக பார்த்தால் குறைந்தபட்ச பயம் தொற்றிக்கொள்ளும் என்பது உறுதி. 

படத்தின் இறுதியில் கதையை முதல் பாகத்தொடு முடிச்சு போட்டிருக்கிறார்கள். முந்தய பாகத்தின்படி October 9, 2006 இரவு பத்து மணிக்கே போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் பெண் அதே இரவு பன்னிரண்டு மணியருகில் உயிரோடு வருவதாகவும், குழந்தையை தூக்கிக்கொண்டு மறைவதாகவும் காட்டப்படுகிறது. அப்படியென்றால் வருவது உயிரற்ற பெண்ணா...? பேயா...? அவளும் அவள் எடுத்துச் சென்ற கைக்குழந்தையும் எங்கே...? இதுபோன்ற கேள்விகளுக்கு இன்று வெளியாகும் Paranormal Activity 3 பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

இன்று இரவு தேவி திரையரங்கில் Paranormal Activity 3 படம் பார்க்க இருக்கிறேன். பதிவர்கள் யாராவது (பயப்படாமல்) உடன் வர விரும்பினால் அழைக்கவும் – 80158 99828.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

Unknown said...

நல்லா சொல்லி இருக்கய்யா.....கடைசி மேட்டரு Free of charge? ஹிஹி!

Prem S said...

உங்கள் திரைவிமர்சனங்கள் அனைத்தும் அருமை "கோ "வை தவிர

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

முதல் பாகம் பார்த்ததில்லை, இரண்டாம் பாகம் பார்த்திருக்கிறேன், முதலாவதையும் மூன்றாவதையும் பார்க்க வேண்டும்.

நாய் நக்ஸ் said...

Present thalai...

சென்னை பித்தன் said...

Paranormal Activity 3 பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள் படிக்கிறேன்.

N.H. Narasimma Prasad said...

சூப்பர் பதிவு பிரபா. எனக்கும் பேய் படங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பயமா இருக்குமே? என்ன பண்றது?

பாலா said...

இரண்டாம் பாகம் பார்க்கும்போது, எனக்கும் அதிகம் பயம் தோன்றவில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விமர்சனம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
நல்லா சொல்லி இருக்கய்யா.....கடைசி மேட்டரு Free of charge? ஹிஹி!//////


யாருக்கு...?

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் அருமை...!!!

சி.பி.செந்தில்குமார் said...

படம் தேறாது போல

Anonymous said...

படம் டைம்பாஸ்..முதல் படத்தில் உள்ள ஈர்ப்பு அடுத்த ரெண்டில் இல்லை...
நல்லா விமர்சிக்கிறீங்க...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// கடைசி மேட்டரு Free of charge? //

ஒருவேளை வந்திருந்தா free of charge தான்... ஆனால் யாரும் வரலையே #சமாளிஃபிகேஷன்

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// உங்கள் திரைவிமர்சனங்கள் அனைத்தும் அருமை "கோ "வை தவிர //

ஆஹா இன்னும் ஞாபகத்துல வச்சிருக்கீங்களா...

Philosophy Prabhakaran said...

@ Dr. Butti Paul
// முதல் பாகம் பார்த்ததில்லை, இரண்டாம் பாகம் பார்த்திருக்கிறேன், முதலாவதையும் மூன்றாவதையும் பார்க்க வேண்டும். //

dont miss the first part...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Present thalai... //

Thanks thalai...

Philosophy Prabhakaran said...

@ சென்னை பித்தன்
// Paranormal Activity 3 பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள் படிக்கிறேன். //

இதோ எழுதுகிறேன் சார்...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// சூப்பர் பதிவு பிரபா. எனக்கும் பேய் படங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பயமா இருக்குமே? என்ன பண்றது? //

நீங்க அந்தமாதிரியெல்லாம் கப்பித்தனமா பயப்பட மாட்டீங்கன்னு தெரியும் பிரசாத்... சும்மா பாருங்க...

Philosophy Prabhakaran said...

@ பாலா
// இரண்டாம் பாகம் பார்க்கும்போது, எனக்கும் அதிகம் பயம் தோன்றவில்லை. //

சொல்லப்போனால் எந்த பாகத்திலும் எதுவும் இல்லை... நாம் படம் பார்க்கும் சூழ்நிலையிலும் நம் கற்பனையிலும் தான் திகில் இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நல்ல விமர்சனம்..... //

நன்றி...

// யாருக்கு...? //

எனக்கு (படிக்காதவன் விவேக் ஸ்டைல்)

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// விமர்சனம் அருமை...!!! //

நன்றி...

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// படம் தேறாது போல //

தல இது புதுசு இல்ல... ஏற்கனவே தேறின படம்...

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// படம் டைம்பாஸ்..முதல் படத்தில் உள்ள ஈர்ப்பு அடுத்த ரெண்டில் இல்லை...
நல்லா விமர்சிக்கிறீங்க... //

என்ன தல சொல்றீங்க... படம் பார்த்துட்டீங்களா...