8 March 2013

ஆல்ப்ஸ் மலைக்காற்று

அன்புள்ள வலைப்பூவிற்கு,

“மந்த்ரா என்று சொன்னதும் உன் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்குமானால் நீயும் என் தோழனே...!”

- Philosophy Prabhakaran

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் திரையுலகத்தையே மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்க வைத்தவர், மிரட்சியில் மலைக்க வைத்தவர் - மந்த்ரா. நாயத்துக்கு நாமெல்லாம் ஆந்திராவின் வரைபடத்தை நடுஹாலில் மாட்டிவைத்து தினமும் கும்பிட வேண்டும். மந்த்ராவை பெற்றெடுத்த பூமி அது ! ஆம், பாலாறு ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி பாய்கிறது.


தமிழகத்தில் ஒரு நடிகர் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இந்தப்படம் என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையில் அவருடைய முதல் படம் தான் திரையுலகிற்கே திருப்பமாக அமைந்தது. ப்ரியமான மந்த்ரா தமிழர்களின் நெஞ்சங்களில் தில்ருபாவாக குடியேறினார். ஆனால், நடிகரின் திராபையான நடிப்பில் படம் தோல்வி. விளைவு, அடுத்து வெளிவந்த லவ் டுடே படத்தில், “காதலுங்குறது வானத்துல பறக்குற புறா இல்ல, கடல்ல மெதக்குற சுறா மாதிரி" என்று டாகுட்டரின் அரிய தத்துவங்களை கேட்க வேண்டிய துர்பாக்கிய கதாபாத்திரம்.

பெண்களை பழித்துப் பேசியே பழக்கப்பட்ட சமுதாயம், மந்த்ராவிற்கு ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தியது. அந்த கிராதகர்களின் முகத்தில் கரியை பூசுவதற்காக தன் பெயரையே ராசி என்று மாற்றிக்கொண்டார் அந்த மகராசி !

பெயரை மாற்றியதும் பெரிய இடத்து மாப்பிள்ளை தேடி வந்தார். ஆனால் பொருத்தமாக அமையவில்லை. கட்டம் போட்ட சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரர் மந்த்ராவோடு ஆட்டம் போட்டால் பொருத்தமாகவா இருக்கும்? மறுபடியும் திருப்புமுனை நடிகர் திருப்பிப் பார்த்தார், ம்ஹூம்.தேடினேன் வந்தது என்று தேடாமலே ஒரு வாய்ப்பு வந்தது. சராசரி சினிமா தான். ஆனால், அதில் ஆல்ப்ஸ் மலைக்காற்று என்று ஒரு பாடல். அதுவரைக்கும் ஆல்ப்ஸ் போன்ற பிரம்மாண்ட மலைகளை பார்த்திராத இளைய சமுதாயம் இன்பத்தில் திக்குமுக்காடியது. பனி படர்ந்த மலைப்பகுதியில் படமாக்கப்பட்ட அந்த பாடல் பல இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்தது. மியாமி கடலலைகள் சென்னைக்கே வந்துவிட்டதை போலொரு புத்துணர்வு !

தல - மந்த்ரா ! குட் காம்பினேஷன் ரெட்டை ஜடை வயசில் அமைந்தது. பேச்சிலர்களின் தேசிய கீதம் கேட்டிருக்கிறீர்களா ? தனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும், அவளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வேன் என்று பாடுவார் அஜீத். அந்த பாடலுக்கான விடை யாரென்று நினைக்கிறீர்கள் ? ஷாத்ஷாத் மந்த்ராவே தான். கும்முன்னு இருக்கலாம் குஷ்பூ, உள்ளத்தை அள்ளலாம் ரம்பா, அன்னநடையில் கலக்கலாம் நக்மா, ஆனா அத்தனையும் மந்த்ராவைப்போல வருமா ! என்று ஒரு புதுக்கவிஞன் அன்றே பாடினான். ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட்டை பார்த்தால் உன் நினைப்பு என்ற வரிகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் பிரதிபலித்தார் தல. காத்திருந்தது தமிழனுக்கு எதிர்பாராத சோதனை. ஜகபதி பாபு மந்த்ராவை கையோடு ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அப்பொழுதும் வட சென்னை தமிழர்கள் கள்ள ரயிலேறி ஆந்திராவிற்கு சென்று கலைச்சேவையை தொடர்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வப்போது தமிழுக்கு தலைக்காட்டினாலும், சவலைப்பிள்ளையாக ஏங்கியது கோலிவுட்.

தல அஜித்துக்கும் ராசிக்கும் அப்படி ஒரு ராசி ! அஜித்தின் ராஜா படத்தில் அதிரடியாக குத்தாட்டம் போட்டு தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அவரது மீள் வருகையின் போது தமிழகத்தில் எப்போதுமில்லாத அளவு வெற்றிலையின் விலை சிகரத்தை தொட்டது.எனினும் இரண்டாவது ஆட்டத்தை தொடர முடியாதபடி, குடும்ப வாழ்க்கைக்குள் குதித்துவிட்டார் மந்திரம். கடைசியாக மந்த்ரா நடித்த தமிழ்ப்படம் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி மட்டுமே தமிழனுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. நேற்று வரை !

இதோ ! இப்போது துவண்டு போன தமிழ் ரசிக நெஞ்சங்களை துள்ளி எழ வைப்பதற்காக மீண்டும் வருகிறார் மந்த்ரா ! நாளை வெளியாகவிருக்கும் ஒன்பதுல குருவில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுகிறார். செய்தியை கேட்டதிலிருந்து என் மனது இமயமலைக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் மாறி மாறி பயணித்துக்கொண்டிருக்கிறது...!


தொடர்புடைய சுட்டி: நக்மாயிசம்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 comments:

குட்டன் said...

//அதுவரைக்கும் ஆல்ப்ஸ் போன்ற பிரம்மாண்ட மலைகளை பார்த்திராத இளைய சமுதாயம் இன்பத்தில் திக்குமுக்காடியது. //

அம்மாடியோ!

குட்டன் said...

கணினி முழுத்திரையில் பார்த்தால்தான் ஆல்ப்ஸ் மலை நல்லாத் தெரியுது!

sharfu said...

//அப்பொழுதும் வட சென்னை தமிழர்கள் கள்ள ரயிலேறி ஆந்திராவிற்கு சென்று கலைச்சேவையை தொடர்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்.//

i think it implies u.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இதோ ! இப்போது துவண்டு போன தமிழ் ரசிக நெஞ்சங்களை துள்ளி எழ வைப்பதற்காக மீண்டும் வருகிறார் மந்த்ரா ! ///

ஆமா, இப்பவே நெஞ்சம் துள்ளுது பிரபா....

வீடு சுரேஸ்குமார் said...

ஏம்பா..தம்பி..!வீடியோ HD போடப்படாதா...? ஆல்ப்ஸ் மலை மங்கலா தெரியுது...!

வீடு சுரேஸ்குமார் said...

கமெண்ட்டை காணோம்...!

இப்படிக்கு

மந்தரா மலைகள்....ச்சே பாறைகள்!

வவ்வால் said...

பிரபா,

காலம் மாறிப்போச்சு இன்னும் மந்த்ராயணம் வாசிச்சுக்கிட்டு இருக்கீரே,விட்டா ஜெயமாலினி போன்ற கலையுலக தொன்ம சிகரங்களை நினைச்சும் உருகுவீர் போல :-))

ஹி...ஹி ப்ரியம் படத்தில சுலோமோஷன்ல அதிர அதிர ஓடிவருவதை எல்லாம் நினைச்சா கொஞ்சம் கிலியா தான் இருக்கும் :-))

கோவை ஆவி said...

என்னாது, டைம் பாஸ் புக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துடுச்சா??

ஆரூர் மூனா செந்தில் said...

/// பனி படர்ந்த மலைப்பகுதியில் படமாக்கப்பட்ட அந்த பாடல் பல இளைஞர்களை பனித்துளி பார்க்க வைத்தது. ///

நான் கூட உன்னைப் போலவே என் பனித்துளி பார்த்தேன். ஹி ஹி ஹி.

ஸ்கூல் பையன் said...

நிறைய தகவல்கள் சொல்லிருக்கீங்க... எதுக்கும் தலைப்புல 18+னு போட்டுவச்சுக்கோங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அவ்வப்போது தமிழுக்கு தலைக்காட்டினாலும், சவலைப்பிள்ளையாக ஏங்கியது கோலிவுட்.//////

அதே காலகட்டத்தில் ராதிகா சௌத்ரி என்ற ஒரு மாபெரும் நடிகை களத்தில் இருந்தார், சின்ன டாகுடரின் ப்ரியமானவளே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருப்பார், பெரிய டாகுடர்,மந்த்ராவையும், ராதிகா சௌத்ரியையும் வைத்து மிகப்பிரம்மாண்டமாக ஒரு படத்தை (சிம்மாசனம்) எடுத்தார் என்ற பிரம்மாண்ட சரித்திர குறிப்பை இங்கே கடும் கண்டனத்துடன் பதிவு செய்கிறேன்.

தனிமரம் said...

ஹீ இந்த மந்தரா மயக்கம் சிறப்பாக இருந்த காலம் ஒரு காலம் பாஸ்§ ஆனால் கண்ணன் வருவான் படத்தில் அவரின் நடிப்பை மறக்க முடியாது!ம்ம்

Philosophy Prabhakaran said...

ராதிகா செளத்ரி ! ம்ம்ம் ஞாபகம் வருகிறது பன்னிக்குட்டி ரா.செளவை இன்னும் சில படங்களில் கூட பார்த்திருக்கிறேன்... பிரபு தேவாவின் டைம் படத்தில் நடித்ததாக ஞாபகம்...

நல்ல ஃபிகரு தான்... ஆனா மந்த்ரா அளவுக்கு கிடையாது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ராதிகா சௌத்ரி மந்த்ரா அளவுக்கு நல்ல பிகர் இல்லைதான், இருந்தாலும் மந்த்ராவுடன் ஒப்பிடும் அளவுக்கு வளமையுடையவர்.

sethu said...

valaiulaga vennira aadai moorthiku vandhanam

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மந்த்ரா பற்றிய சில மேலதிக தகவல்கள்:
மந்த்ரா தமிழில் அறிமுகம் ஆவதற்கு ஒருவருடத்திற்கு முன்பிருந்தே லலிதா ஜுவல்லரி விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்தார். மந்த்ராவின் முழுப்பக்க போர்ட்ரெயிட் படங்களுடன் கூடிய லலிதா ஜுவல்லரி விளம்பரங்கள் தமிழ்ப்பத்திரிக்கை உலகை பரபரப்பாக ஆக்கிரமித்தன. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையேதான் மந்த்ரா அறிமுகமானார்.
அவரது தோல்விக்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது மிக மோசமான உடல் அமைப்பே. அவரது இடுப்பும் தொடையும் அவரது மேல்பாக உடலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத அளவுக்கு மெலிந்திருந்தன. டைட் ட்ரஸ் அணிந்து நடந்து வந்தால் இடுப்பிற்குக் கீழே போலியோ அட்டாக் ஆனவர் போலவே இருந்தார். (லலிதா ஜுவல்லரிக்காரர்கள் தந்திரமாக போர்ட்ரெயிட் படங்களுடன் நிறுத்திக் கொண்டதன் அர்த்தம் அப்போது விளங்கியது).
நமது பாடல்களுக்கு நடனம் ஆட வளமான பின்புறமும், தொடைகளும் அவசியம், அதனாலேயே மந்த்ராவால் தொடர்ந்து சோபிக்க முடியவில்லை.

Philosophy Prabhakaran said...

மேலதிக தகவல்களுக்கு நன்றி பன்னிக்குட்டி...

நானும் சில தகவல்கள் அறிந்தேன்... மந்த்ரா ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக இரண்டு, மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார்... பின்னர் அவர் மிகவும் குறைந்த வயதிலேயே (13 அல்லது 14) பெரியமனுஷியாக நடிக்க வேண்டிய சூழல் அதற்காக bust cream எனப்படும் வளர்ச்சிக்கான க்ரீமின் உதவியை நாடியிருக்கிறார்.... அதுதான் நீங்கள் குறிப்பிட்ட பொருத்தமில்லாத உடல் அமைப்பிற்கு காரணம்... மந்த்ராவின் மலைபோன்ற புகழுக்கும், பின்னர் அவருடைய சரிவுக்கும், இரண்டுக்குமே அந்த க்ரீம் தான் காரணம்...

kannaimambathey y said...

என்னையா? ரெண்டு பெரும் போட்டி போட்டு information கொடுக்கறீங்க. விட்டா , அவங்க அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, யாரு? என்ன செய்தார்கள் போன்ற அறிய பல தகவல்களை தருவீர்களோ?.

K.s.s.Rajh said...

////காதலுங்குறது வானத்துல பறக்குற புறா இல்ல, கடல்ல மெதக்குற சுறா மாதிரி" என்று டாகுட்டரின் அரிய தத்துவங்களை கேட்க வேண்டிய துர்பாக்கிய கதாபாத்திரம்.
//// ஹி.ஹி.ஹி.ஹி........

Anonymous said...

அந்தமான்லயிருந்து ஐரோப்பாவிற்கு கப்பல் திரும்பிரோச்சுன்னு நினைச்சேன்...

18+++...நாங்க...நீங்க?

செங்கதிரோன் said...

weekend effect puriyuthu boss

கும்மாச்சி said...

எங்கள் கன்னுக்குட்டி மந்த்ராவின் நல்ல படத்தை போடாமல் மலைகளைபற்றி எழுதி மோசம் செய்த பிரபாகரனின் செயலை அகில உலக மந்த்ரா ரசிகர் மன்றத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

palani said...

ஒன்பதுல குரு படத்தில் மந்தராவின் ஸ்டில்லை பார்த்து எனக்கும் என் நண்பரருக்கும் ஒரு பெரிய சந்தேகம் .அது செழுமைக்கு காரணம் இயற்கையா அல்லது செயர்கையா..? என்று.தனி இரு வராக (பி.பா , ப.ரா) வந்து எங்கள் சந்தேகத்தை தீர்த்த மைக்கு கோடானு கோடி நன்றிகள்.

Sam said...

<<<<>>>>

ஹிஹி... நானும் "அந்த" பனித்துளியை பார்த்தவன்தான்.