11 March 2013

பிரபா ஒயின்ஷாப் - 11032013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா ? என்னுடைய தன்னம்பிக்கை மட்டம் குறைந்துக்கொண்டிருந்தது. படுக்கையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவினேன். ராஜூ முருகனின் வட்டியும் முதலும். அதை படிக்கக்கூடிய மனநிலை அப்போது இல்லை. வேறொரு சுஜாதா புத்தகத்தை எடுத்தேன். சுமார் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். எனக்குள் ஒரு ஊக்க மருந்து ஊசி ஏற்றப்பட்ட உணர்வு. நல்லதோ, கெட்டதோ, மொக்கையோ மனதில் தோன்றுவதை எழுது என்று என்னை உந்தித்தள்ளுகிறது. அதனால் தான் அவர் வாத்தியார் என்றழைக்கப்படுகிறார் போல.


*****

சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரை, சுஜாதா பாமரர்களுக்கு மட்டுமே மேதை என்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்கிபீடியா போன்ற சோர்ஸில் இருந்து, நாட்கள், வாரங்கள், மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பதில் சொல்வாராம். ஹாய் மதனும் அப்படித்தானாம். மேலும் சுஜாதா பெருசா எதையும் சாதிக்கவில்லை. சாகித்திய அகாடமி வாங்கவில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று நிறைய புலம்பல்கள். அய்யா... மதன் எழுதிய வரலாற்று புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா ? அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா ? சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் ? கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் ? நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.

கணையாழியில் சுஜாதா எழுதியது:
பிரபலமான எழுத்தாளர் நல்ல சிறுகதை எழுத முடியாது; அது காப்பியாக இருக்க வேண்டும்.பிரபல நடிகர் நன்றாக நடிக்க முடியாது; நடித்தால் அது மார்லன் பிராண்டோவைக் காப்பி அடித்தது. நண்பர் கமல்ஹாசன் ஒருமுறை, “நான் சின்ன தப்பு பண்ணாக்கூட ஏன் சார் அத்தனை க்ரிடிக்கலாக இருக்காங்க?” என்று கேட்டார். காரணம் கமல்ஹாசன் என்பது ஒரு எஷ்டாப்லிஷ்மென்ட். அதைச் சாடுவது நவீன மனிதனின் முக்கியமான பொழுதுபோக்கு.

பொதுவாக என்னை பேட்டி காண வருகிறவர்கள் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி ‘நீங்கள் இதுவரை சாதித்தது என்ன?’ ஒரே ஒரு ஆத்மிக்குத்தான் அதற்கு ‘நான் உன்னை பேட்டிக் காண வராம நீ என்னை பேட்டி காண வந்திருக்கிறாயே, அதான்யா சாதனை' என்று பதிலளித்தேன்.

சுஜாதாவை சாடும் பழமை பேசிகளுக்கான பதில் அது.


*****

அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமையல் போட்டி நடந்தது. கலந்துக்கொண்ட பன்னிரண்டு அணிகளில் இரண்டு மட்டுமே ஆண்கள் அணி. நியாயமாக பெண்களை அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவே அனுமதித்திருக்க கூடாது. ஆண்கள் மட்டும் சமைத்து அதை பெண்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ட்ரிபியூட். ஆனால் அதன் ‘பின்' விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் பெண்களையே சமைக்க விட்டுவிட்டார்கள். கேலிகள் ஒருபுறம், மகளிர் தினத்தன்று என்னுடைய நல்வாழ்வில் பங்காற்றிய மகளிரை எண்ணிப்பார்த்தேன். (i mean counting). என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.


*****

இதோ அதோ என்று ஒருவழியாக விஸ்வரூபம் ஆரோ 3Dயில் பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறக்கும்போது மட்டும் ஏதோ நம் தலைக்கு மேல் பறப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மற்றபடி சிறப்பாக எதுவுமில்லை அல்லது விஸ்வரூபம் அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ற படமில்லை. எப்படியோ பார்த்தாகிவிட்டது, இனி பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்காது. அதற்காக நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்யலாம். இன்னமும் ஆரோ 3Dயில் பார்த்தே தீருவேன் என்று செவ்வாய் இரவுகளில் தேவுடு காப்பவர்கள், C5, 6, 7 அல்லது C12, 13, 14 போன்ற இருக்கைகள் கிடைக்குமாறு பார்த்து முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில் பல கோணங்களில் இருந்தும் ஸ்பீக்கர்கள் மிக அருகாமையில் அங்குதான் உள்ளன.


*****

நேற்று என்னுடைய மாமனாரோடு ஆல்பட் திரையரங்கில் வசந்த மாளிகை ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி கண்டேன். கர்ணன் பார்த்தபோது அவருக்கு நான்தான் அவருடைய மருமகன் என்று தெரியாது. நான் என்னுடைய பர்ஸை பிரித்தபோது அதில் அவருடைய மகளின் புகைப்படத்தை பார்த்திருப்பாரோ என்று கொஞ்சம் பதறினேன். அப்போது பலே பாண்டியா நடிகர் திலகம் போல மாமா அவர்களே என்று பம்மிக்கொண்டிருந்தவன் இப்போது என்ன மாமா செளக்கியமா ? என்று பருத்திவீரன் கார்த்தி மாதிரி கெத்து காட்ட முடிகிறது. வசந்த மாளிகை பார்த்ததைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைத்தேன். அங்கே கண்ட எழுச்சியை சில வரிகளில் அடக்குவது சாத்தியமில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

*****

ஹி ஹி ஹி... கேப்பி சிவராத்திரி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 comments:

கும்மாச்சி said...

பிரபா சுஜாதாவை பற்றிய அந்த கெக்கேபிக்கே பதிவை நானும் படித்தேன். சுத்த பேத்தலான பதிவு. உங்களது கருத்து சரியே.

aavee said...

சுஜாதாவை பற்றி பேசியவர்களுக்கு சரியான சாட்டையடி..

பிரபா, நீங்க முன்பே 7.1 இல் அல்லது டால்பி ஒலியில் பார்த்திருந்தால் ஆரோவில் மேல் இருந்து வரும் ஒலி மட்டும் கூடுதலாய் கேட்கும்..

அடுத்த பதிவு வசந்த மாளிகையா? கலக்குங்க..

உலக சினிமா ரசிகன் said...

பிரபா...அவன் மன நிலை பிறண்டவன்.
அவன் தமிழ்நாட்டில் பிறந்த யாரையாவது கொண்டாடி இருக்கானா ?
வெள்ளைக்காரன் மலத்தை சந்தனமாக பூசும் கூட்டத்தில் ஒருவன் அவன்.
சரியான கல்லடி கொடுத்தீர்கள்...
அந்த வெறி நாய்க்கு.

விஸ்வரூபத்தை ஆரோ 3டியில் பார்க்க வேண்டும் என்ற வேகம் தங்கள் பதிவைப்படித்த பின்னும் குறையவில்லை.

வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்திக்கொண்டுதான் வர வேண்டும்.
இல்லையென்றால் வீட்டில் போஜனம் ஸ்டாப்பாகி விடும்.

வசந்தமாளிகை பதிவுக்கு வெயிட்டிங்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பிரபாகரன்! உங்களுடைய வலைப் பதிவிற்கு அதிகமாக வந்ததில்லை
2012 இல் அதிகமாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்.அந்தமான் பயணக் கட்டுரையில் இருந்து தொடர்ந்து படித்து வருகிறேன்.எழுத்து நடையில் ஒரு தனித் தன்மை காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் எழுதப்பட்டுள்ளவை சுவாரசியமாக உள்ளது.
"பிரபா ஒயின்ஷாப் - "
இந்த தலைப்பிற்கு காரணம் ஏதேனும் உள்ளதா?
நன்றி.

Philosophy Prabhakaran said...

நன்றி கும்மாச்சி...

நன்றி கோவை ஆவி... 7.1 படம் எதையும் இதுவரை பார்த்ததில்லை...

Philosophy Prabhakaran said...

உசிர... வசந்த மாளிகை பார்த்தபோது உங்களை நினைத்துக்கொண்டு தான் பார்த்தேன்...

நீங்கள் இதுவரை விஸ்வரூபம் ஆரோ 3D பார்க்கவில்லையா ? நீங்கள் பறந்துவந்த வேகத்தில் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டுமே...

Philosophy Prabhakaran said...

நன்றி TNM சார்...

பிரபா ஒயின்ஷாப் தலைப்பு நகைச்சுவை காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது... தவிர, பலவகை சரக்குகள் கிடைக்கும் என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்...

Prem S said...

//இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. //

உண்மை தான் பழைய கிக் இல்லை

Unknown said...

மேமாதம் முடியட்டும் பிறகு வரும் பதிவைப் பார்க்கலாம்!

Anonymous said...

//வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும்//

பண்,புண்....நடத்துய்யா!!

Ponmahes said...

//கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் ? நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.

அப்பறம் ஏன் இங்கிலீஷ் படத்த வெச்சு படம் எடுத்தா மட்டும் copy ன்னு சொல்றீங்க .
அதையும் reference ன்னு சொல்லலாம் அல்லவா பிலாசபி ..

//என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.


எல்லாம் அந்த மருவத்தூர் ஆதி பராசக்திக்குத் தான் வெளிச்சம் ....

//இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா ?


அது என்ன உங்கள பத்தி நீங்களே எழுதிக்கிறது பேரு என்ன trend ஆ இல்ல strategy ஆ ??????தெளிவு படுத்தவும்

Philosophy Prabhakaran said...

மே மாதம் முடிந்ததும் பதிவு வருதான்னு பார்க்கலாம் அய்யா...

Philosophy Prabhakaran said...

// அப்பறம் ஏன் இங்கிலீஷ் படத்த வெச்சு படம் எடுத்தா மட்டும் copy ன்னு சொல்றீங்க .
அதையும் reference ன்னு சொல்லலாம் அல்லவா பிலாசபி .. //

கருத்தை சொல்வதற்கும், தகவலை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது... உதாரணத்திற்கு காந்தியை கோட்சே சுட்டார் என்று ஆங்கில புத்தகத்தில் இருக்கிறது என்றால் அதையே தான் தமிழிலும் சொல்ல வேண்டும்... ஏனெனில் அது தகவல் / செய்தி...

கருத்து கூட ஒன்றிற்கு மேற்பட்டோருக்கு ஒத்துப்போகலாம்... ஆனால் கருத்தை வெளிப்படுத்தும் விதம், காட்சியமைப்பு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் காப்பி எனப்படுகிறது...

மேலும், புத்தகங்கள் எழுதுபவர்கள் இறுதியில் reference புத்தகங்களை வரிசை படுத்தியிருப்பார்கள்... திரைப்படங்களில் அப்படிச் செய்வதில்லை...

Unknown said...

சொக்கன் எழுதிய மொஸாட் என்கின்ற இஸ்ரேல் உளவுத்துறை பற்றிய புத்தகம், ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திலிருந்து சில தகவல்களைப் பெற்று எழுதியது ஆனால் அதிக விற்பனையானது...!சொக்கனின் புத்தகம்தான் யாரோ எழுதிய கில்மா கதையை பாக்கியராஜ் சொன்னால் அது மிக சுவராஸ்யமாக இருக்கும். சரித்திர தகவல்களை மதன் சொன்னால் சிறப்பு..!சுஜாதாவும் அப்படியே யாரோ சொல்லிய மொக்கை செய்தியை, தகவல்களை சுஜாதா தன் பாணியில் எழுதினால் படிக்க சுவாரஸ்யம்..!

'பரிவை' சே.குமார் said...

அருமையா சொல்லியிருக்கீங்க...

அருமை.