21 November 2013

கோவை நேரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகளுக்கு விமர்சனம் எழுதிய நேரம், ஆளாளுக்கு என் பொஸ்தவத்தையும் அடிச்சு தொவச்சு கும்மு கும்மு’ன்னு கும்முங்க ஏட்டய்யான்னு ஏகப்பட்ட ஈமெயில்கள். அதிலும் வலைப்பதிவர் ஜீவானந்தம் அவருடைய புத்தகத்தை கூரியரில் அனுப்பவே செய்துவிட்டார். அவருடைய வலைப்பூவின் பெயரே புத்தகத்தின் பெயரும் கூட – கோவை நேரம். கோவில்கள், சுற்றுலா தளங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

பதிவுலகில் ஜீவா என்னுடைய நெருங்கிய நண்பர் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. அதிகம் பழகவில்லை. மானசீக நண்பர் என்று வைத்துக்கொள்ளலாம். விவரமான மனிதர். கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் வெட்டி வியாக்கியானம் பேசிக் கொண்டிராமல் பிழைப்புவாதத்திற்கு எது தேவையோ அதை நோக்கி காய் நகர்த்தக் கூடியவர். ஏன் கோவில்கள் என்ற வறட்சியான வகையறாவை தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டேன். எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அப்படி கேட்கவில்லை. பதிப்பகத்தார்களுக்கு தெரிந்திருக்கும். அல்லது கிழக்கு பதிப்பக அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படி விற்பனையாவதில்லை. அதனால் தான் அப்படி கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் வெளிப்படையானது. கோவில்களை பற்றி எழுதியிருப்பதால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இளவயதில் கோவில்களை பற்றி எழுதியிருக்கிறார் என்று நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கூட கெளரவித்தார்கள். அதுதான் அவர் கூறிய பதில். போதும். அவரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டு புத்தகத்தை விமர்சிக்கலாம்.

சங்கவியைப் போலவோ மற்ற பதிவர்களைப் போலவோ ஜீவாவின் புத்தகம் துக்கடா தாளில் அச்சிடப்படவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஆனால் வேறு சில விஷயத்தில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்ப்பதற்கு முன்பு புத்தகத்தில் உள்ள கொஞ்சூண்டு நல்ல விஷயங்கள் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

புத்தகத்தின் முதல் பாதி கோவில்களைப் பற்றியது. தமிழகத்தில் உள்ள அதிகம் பிரசித்தி பெறாத பன்னிரண்டு சிறிய கோவில்களை பற்றி சுருக்கமாய் எழுதியிருக்கிறார். பிற்பகுதி சுற்றுலா தளங்கள் பற்றியது. போலவே தமிழகத்திலுள்ள அதிகம் பிரசித்தி பெறாத சிறிய சுற்றுலா தளங்கள் பற்றியது. முதல் பாதியில் ஸ்தல வரலாறு, ஊர்களின் பெயர்க்காரணம் என சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. மற்றும் கோவிலை அருகிலிருக்கும் டவுனிலிருந்து எப்படி சென்றடையலாம் என்று எளிதாக சொல்லியிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மலை வையாவூர் பற்றி புத்தகத்திலிருந்து :- ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்தபோது ஒரு இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறு கைக்கு மலையை மாற்றிக்கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்னும் பொருளில் மலை வையாவூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கெடாவெட்டு பகுதிக்கு போகலாம். ஒரு புத்தகம் எழுதுபவர் எழுத்தாளராக இருக்க வேண்டும். ஆனால் ஜீவா புத்தகத்திலும் வலைப்பதிவராகவே இருக்கிறார். அதுதான் பிரச்சனை. வலைப்பதிவில் எழுதியவற்றை புத்தகமாக வெளியிடும்போது அவற்றை பட்டி பார்த்து டிங்கரிங் செய்ய வேண்டுமென பதிவுலக ஆசான்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜீவா அப்படி எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. 

வலைப்பதிவுகளில் டிஸ்கி, முஸ்கி போன்ற கந்தாயங்கள் பார்த்திருப்போம். அதையெல்லாம் கூட புத்தகத்தில் நீக்காமல் அப்படியே வெளியிட்டு தொலைத்திருக்கிறார். அப்புறம் ஆங்காங்கே அடைப்புகுறிகளுக்குள் சிபி ஸ்டைல் சுய எள்ளல்கள். சுற்றுலா பகுதியில் ‘அம்மணிகள்’ என்ற வார்த்தை அடிக்கடி தென்படுகிறது. அங்கே அம்மணிகள் குளிக்கிறார்கள், இங்கே அம்மணிகள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள், குளிர்ச்சியாக இருக்கிறது, எச்சச்ச கச்சச்ச என ஒரே அம்மணி புராணம். நீ ரொம்ப யோக்கியமா ? என்று கேட்கப்பிடாது. அம்மணிகளை பற்றி எழுதுவதில் பிரச்சனையில்லை. கோவில், சுற்றுலா தளங்கள் பற்றிய புத்தகம் என்று சொல்லிவிட்டு அம்மணிகளை பற்றி எழுதினால் என்ன அர்த்தம். வேண்டுமென்றால் அம்மணிகள் பற்றி ஒரு தனி புத்தகம் போட்டுக் கொல்லலாமே ? தவிர, இவையெல்லாம் ஏதோ வலைப்பதிவில் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு படித்துவிடலாம். காசு கொடுத்து யாராவது வாங்கிப் படித்தால் அவருடைய மனநிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். 

புத்தகம் முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்கள். ஒரு பக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதில் குட்டி குட்டியாக நான்கு அல்லது ஆறு புகைப்படங்கள் உள்ளன. அவற்றை நீக்கிவிட்டால் அரை பக்கத்திற்கு மட்டுமே எழுத்துகள் உள்ளன. இத்தனைக்கும் புகைப்படங்கள் பெரும்பாலும் அநாவசியமானதாகவே இருக்கின்றன. வெவ்வேறு ஆங்கிளில் ஒரே கோவில், சுற்றுலா தளங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், டூப்ளிகேட் மினரல் வாட்டர் பாட்டில், மீன் வறுத்தெடுக்கும் எண்ணைச்சட்டி என பல அரிய புகைப்படங்களை காண முடிகிறது.

எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அடடா அபாரம்...! மொத்தமே இரண்டரை பக்கங்கள். அதில் இரண்டு பக்கங்களுக்கு புகைப்படங்கள். மீதமுள்ள அரை பக்கத்தில் ஒரு பாரதியார் பாடலிலிருந்து சில வரிகள். நல்லவேளை பாரதியார் தற்போது உயிரோடு இல்லை. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் இல்லம் குறித்த கட்டுரையும் அல்மோஸ்ட் அப்படித்தான்...!

மொத்தத்தில் ஜீவாவின் கோவை நேரம் புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள், அச்சு பிச்சு சமாச்சாரங்கள், ஜல்லியடித்தல்கள் போன்றவற்றை நீக்கிவிட்டால் ஒரு பத்து பக்கங்கள் மட்டும் உருப்படியாக இருக்கலாம். அவ்வளவுதான்...! ஜீவா அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இதே புத்தகத்தை கலரில் கொண்டுவர இருப்பதாக கூறினார். தயவு செய்து அந்த முயற்சியை கைவிட்டுவிடுவது நல்லது. நமக்கு...!

கோவை நேரம்
ஜீவானந்தம்
கோவை பதிவர் பிரசுரம்
விலை ரூ.110/-

ஆன்லைனில் வாங்க

அடுத்து வருவது: இரண்டாம் உலகம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 comments:

sethu said...

புத்தக விமர்சனத்தை படித்ததும்
பதிவுலக சுப்புடு என்று எல்லோராலும் அன்போடு (?)
அழைக்கப்படுவீர்கள் என்று
எச்சரிக்கிறேன்

aavee said...

நேர்மையாக இருந்தது விமர்சனம். நானும் ஜீவாவிடம் இதைத்தான் கூறினேன்.

அனுஷ்யா said...

அவசர அவசரமாக அடுத்தடுத்த பதிவுகள் வருவதால் பிரபா டச் மிஸ்ஸாக தொடங்குகிறது.. நிதானம் நிதானம்...

அனுஷ்யா said...

எல்லாம் சரியாக அமைந்தால் இன்னும் ஒன்றரை வருடத்தில் "எவளுக்கு என்ன விலை?" என்ற என்னால் இன்னதென்று வகைப்படுத்த முடியாத ஒரு தொகுப்பிற்கு நீங்கள் எழுதவேண்டியிருக்கும். பார்க்கலாம். நடக்காத பட்சத்தில் தொடராக மயிலிறகில் போட்டுவைக்கிறேன்.. be ready

Anonymous said...

வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

ரெம்ப நல்லா விமுர்சனம் பண்ணிக்கிறேபா... எழ்த்து நட சோக்கா கீதுபா... வாத்துக்கள்...
டைமு கெட்சா நம்ப கடையாண்ட ஒரு விசிட்டு குடுபா...

வவ்வால் said...

பிரபா,

எனக்கென்னமோ நீர் எழுதி ,கோவை ஜீவா எடிட் செய்து பதிவு வெளியானாப்போல தோனுது அவ்வ்!

ஏன்னா பதிவுலக மக்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் "பக்குவம்" என்னனு எனக்கு ஓரளவுக்கு தெரியும் என்பதால் சொல்கிறேன்.

குறைந்த பட்சம் ஜீவாவின் முன் அனுமதியாவது வாங்கியிருப்பீர்னு நினைக்கிறேன் ,என்ன சரியாத்தான் சொல்லுரேனா :-))

ஆனால் நல்ல விமர்சனம். இதில் மெய்யாகவே கவனத்தில் கொள்ள வேண்டியது ,பதிவில் இருப்பது போல புத்தகத்திலும் இருக்கக்கூடாது என்பது.

வழக்கமான புத்தகம் எனப்பார்க்காமல் பதிவுலக அனுபவங்களின் தொகுப்பு எனப்பார்த்தால் அப்படி இருக்கலாம், கூடவே சுவையான பின்னூட்டங்களும் சேர்த்து போட்டால் கூட தப்பில்லை என்பேன்.

ஹி...ஹி எனக்கு பின்னூட்டங்களோடு புக்கு போடனும்னு ஒரு ஐடியா வேற இருக்கு அவ்வ்!

#//பதிப்பகத்தார்களுக்கு தெரிந்திருக்கும். அல்லது கிழக்கு பதிப்பக அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படி விற்பனையாவதில்லை.//

உண்மையில் ஆன்மீக புத்தகங்களுக்கு எவர் கிரீன் மார்க்கெட் உண்டு, ஆனால் "எழுதுபவர்களின்" புகழைப்பொறுத்து தான் விற்பனை அமையும், கத்துக்குட்டிகள் ஆன்மீக புத்தகம் போட்டால் போணியாகாது என்பது பொதுவான நிலை.

"சுகி சிவம்" எழுதிய நூல்கள் எல்லாம் பலப்பதிப்புகள் கண்டு ஓடிக்கிட்டிருக்கு.

கிழக்கு பெரும்பாலும் "இலவச கண்டெண்ட்" கொடுக்கும் எழுத்தாளர்களை புடிச்சு புக்கு போடும் என்பதால் , அப்படி ஆகி இருக்கலாம்.

Unknown said...

எனக்கு ஆன்மீகம் பிடிக்கும் என்றாலும்...ஜோசியம்,ஆன்மீகம்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம் படிப்பது இல்லை பார்ப்பது கூட அலுப்பாக இருக்கும் உண்மையில் சுயமுன்னேற்ற புத்தகங்களும்,ஆன்மீக புத்தகங்களும் சீக்கிரம் விற்று விடுகின்றது என்பதுதான் உண்மை மட்டமான காகிதத்தில் போடுவது கூட 20,30 ரூபாய் வரை விற்கின்றது அதே வகையறா கதை புத்தகங்கள் 15 ரூபாயைத் தாண்டுவதில்லை....

Unknown said...

அப்புறம் இன்னுமொரு விசயம்...நீ சரியான பார்ம்ல இருக்கின்ற..உன்னை நம்பி ரெகுலரா படிக்கின்ற வாசகர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள் இதை என்னிடமே நிறைய நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள் உன் ரசனைக்கு உட்பட்ட பிடித்த நல்ல சினிமா,நல்ல புத்தகங்கள் என்று மட்டும் விமர்சனம் செய்வது நல்லது. சில விசயங்களை கவுண்டமணி செந்தில் பேன்ஸ்சில் பதிவிடுவது நல்லது!

Anonymous said...

பிலாசபி...வருசா வருஷம் ஆன்மீக புத்தக ஸ்டால் அதிமாகிட்டுதான் இருக்கு புத்தக சந்தைல.வேடியப்பன்/அகநாழிகை வாசு-மணிஜிகிட்ட ஆன்மீக புத்தக விற்பனை டீடைல் கேக்கலாமே..

ஜீவன் சுப்பு said...

//அடுத்து வருவது: இரண்டாம் உலகம்//

Reserved ? Vote for 3rd comment ...!

Philosophy Prabhakaran said...

மயிலன்,

அதுக்கு ஏன் ஒன்றரை வருடங்கள் வெயிட் பண்ணனும் ? ஒருவேளை களப்பணியாற்ற நேரம் தேவைப்படுகிறதோ ?

தங்கள் முந்தய பின்னூட்டத்தை கருத்தில் கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

நீங்கள் கூறியது போல நான் ஜீவாவிடம் அனுமதி கேட்டேன் தான்... அவர் சங்கவியைப் போல எப்படி வேணுமின்னாலும் எழுது என்று சொல்லவில்லை... ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தார்... அதற்கு அடக்கி வாசி என்று அர்த்தம்... ஆனாலும் நான் எனக்கு தோன்றியதை தான் எழுதியிருக்கிறேன்...

ஜீவாவின் மனப்பக்குவம் பற்றி எனக்கு தெரியவில்லை... இந்த பதிவிற்கு அவர் கொடுக்கப்போகும் ரியாக்ஷனை வைத்து அதனை சோதித்துக்கொள்ளலாம்...

பின்னூட்டங்களோடு புக்கு போடனும்னு ஒரு ஐடியா உங்களுக்கு பொருந்தும்... டெம்ப்ளேட் பின்னூட்டம் வாங்குற ஆசாமிகளுக்கு எப்படி பொருந்தும் ?

Philosophy Prabhakaran said...

வீடு மாம்ஸ்,

ஒருவேளை கிழக்கு ஆட்கள் ஆன்மிக புத்தகங்களை அளவுக்கு அதிகமா அச்சிட்டு விட்டார்களோ என்னவோ ?

ஆனால் கிழக்கில் ஆன்மிகத்திற்கு அடுத்து நான் அதிகம் பார்த்தது சுய முன்னேற்ற நூல்களும், பாலியல் தொடர்பான நூல்களும்...

கடைசியாக சொன்னதில் ஒரு செட்டை அப்படியே தூக்கிக்கொண்டு வந்துவிட்டேன்...

உங்கள் அடுத்த பின்னூட்டத்தை கருத்தில் கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

சிவா,

ஆன்மிக ஸ்டால்கள் அதிகமாகத்தான் செய்கின்றன... ஆனால் கூட்டம் ? வேணுமின்னா அடுத்த முறை கண்காட்சிக்கு வரும்போது நாம இதைப்பற்றி ஆராயலாம்...

Philosophy Prabhakaran said...

ஜீவன் சுப்பு,

நாளை காலை உதயம் திரையரங்கம்...

இப்போது மட்டுமல்ல நிறைய விஷயங்களில் நீங்களும் மயிலனும் ஒரே மாதிரியாக சிந்திப்பதாக எனக்கு ஒரு எண்ணத்தோன்றல் :)

வவ்வால் said...

பிரபா,

//ஜீவாவின் மனப்பக்குவம் பற்றி எனக்கு தெரியவில்லை... இந்த பதிவிற்கு அவர் கொடுக்கப்போகும் ரியாக்ஷனை வைத்து அதனை சோதித்துக்கொள்ளலாம்...
//

அது சரி நாடிப்புடிச்சு பார்க்கத்தான் இந்தப்பதிவா, ஜீவா அன்பா "இறுக்கி கட்டிப்புடிச்சாலே" ரெண்டு மூனு எலும்பு நொறுங்கிடும் போல இருக்கு ,எதுக்கும் சூதனமா நடந்துக்கொள்லவும் அவ்வ்!

# அப்படியே , புத்தகத்தின் விலை, பக்கங்கள், எந்த பதிப்பகம் என்ற விவரமும் பதிவில் சேர்த்துவிடவும், புத்தக விமர்சனம் என்றால் அதற்கான "டெம்ப்ளேட்" முக்கியம் :-))

//புத்தகம் முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்கள். ஒரு பக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதில் குட்டி குட்டியாக நான்கு அல்லது ஆறு புகைப்படங்கள் உள்ளன. //

படம் போட்டு அச்சடித்தால் புத்தக அச்சு செலவு கூடும் என்பார்கள், படங்களை குறைத்து அச்சிடுவது சிக்கனமான ஒன்றாகவும் இருக்கும்.

அனுஷ்யா said...

சீரியசாக பதிலளிக்க வேண்டுமெனில் நான் சொல்லியிருக்கும் காலக்கெடு எனக்கொரு புத்தகத்திற்கான குறைந்தபட்ச தேவை. முதல் புத்தகம்.. கடைசியாகவும் இருக்கலாம்.. காரணம் நீங்கள் எண்ணிய விதத்திலில்லை :) ஏனெனில் தலைப்பு அதுவல்ல.

அனுஷ்யா said...

பின்னூட்டம் மூலம் அறிமுகமுண்டு.. மனிதரை இதுவரை வாசிக்கவில்லை.. ப்லொக் id?

Ponmahes said...

ஏலே...இது தேவை இல்லாத நேரத்தை வீணாக்குற வேலை....இத விட்டுட்டு வேற ஏதாவது உருப்படியா எழுத பாரு......

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

நீங்கள் சொன்னபடி புத்தகம் பற்றிய விவரங்களை சேர்த்தாயிற்று...

Philosophy Prabhakaran said...

மயிலன்,

http://jeevansubbu.blogspot.com/

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ்,

இது நேர விரயம் அல்ல... நம்மை மதித்து கருத்து கேட்கும் நண்பர்களுக்காக செய்யும் கடமை :)

தென்னவன் said...

அம்மணிகள் பற்றி ஒரு தனி புத்தகம் போட்டுக் கொல்லலாமே ?

Super ji

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...


//ஹி...ஹி எனக்கு பின்னூட்டங்களோடு புக்கு போடனும்னு ஒரு ஐடியா வேற இருக்கு அவ்வ்!//
வவ்வால்,
நீங்கள் பின்னூட்டங்களை வைத்து மட்டும் புக் போடலாம். புத்தகத்தில் பதிவுகளை பின்னூட்டம் மாதிரி சேர்த்தால் இன்னும் சுவாரசியம் கூடும

பிரபாகரன்,
மனதில் சரி என்று பட்டதை எழுதும் உங்களைப்போன்றவர்கள் நட்புக்காக நூல் விமர்சனமோ,அணிந்துரையோ எழுதாமல் தவிர்ப்பது நல்லது.
பொதுவாக விமர்சனம் இருவகை நிலைகளில் இருந்து எழுதப் படுகிறது
1. தனது ரசனை, அல்லது தனது ஆதர்ச எழுத்தாளரின் நடை அந்த நூலில் அமைந்திருக்கிருப்பதை வைத்து எழுதுவது
2. தன்னோடு,பிற வாசகர்களின்(சாதாரண என்று கருதப்படுகிற)ரசிப்புத் தன்மையையும் கருத்தில் கொண்டு எழுதுவத

இவை சினிமா விமர்சனத்துக்கும் பொருந்தக் கூடும்.

குரங்குபெடல் said...

இதே புத்தகத்தை கலரில் கொண்டுவர இருப்பதாக கூறினார். தயவு செய்து அந்த முயற்சியை கைவிட்டுவிடுவது நல்லது. நமக்கு...!

&


ஆன்லைனில் வாங்க


. . . . .!?

Philosophy Prabhakaran said...

குரங்குபெடல்,

அது முந்தய பின்னூட்டம் ஒன்றில் வவ்வால் சொன்னபடி புத்தக விமர்சன டெம்ப்ளேட் சேர்த்திருக்கிறேன்....

Anonymous said...

பாவம்பா அவரு..விட்டுடுங்க..