5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

19 comments:

sethu said...

பிரபா நானும் படிக்க ஆர்வமாக உள்ளேன்

அனுஷ்யா said...

I remember, i ve mentioned about this novel once in my mail,sent to u.. What i like most in this, the way he presented the synergism bw a real historical event and a fictious event.. The story had one nice flow in writing.. Especially the intimate moments bw poonjolai/raakkan and emilie/makki, being written in a screenplay format. Alternating verses from two different scenes..My bookmark s still in that page.. :)

But one disgusting character s that bairaagi.. We can accept the importance of that character, but not the clumpsy way of essaying his nuances.. And at the end of the novel, this character stood dark..

Definitely not a masterpiece of Vaathiyaar.but ,there s no place for a doubt,it s a great attempt in unwinding the darker aspects of sippoy mutiny, in a palatable way..

I prefer his dramas to thrillers/horror.. Like pirivom santhippom, irandaavathu kaadhal kathai... If time permits, ve a try... :)

அனுஷ்யா said...

And ji, Getting into blogs via mobile, now a days.. Its too hard to work in its tamil keyboard.. Thats y, i most often refrain from commenting.. And if i ve to, am doing it in english.. apologies fr the same..

ஜீவன் சுப்பு said...

முடிஞ்சா அந்த இ.லெட்டரில் இருக்கும் விலாசத்திற்கு புஸ்தகத்தை அனுப்பி வைக்கவும் .

Philosophy Prabhakaran said...

ஜீவன் சுப்பு,

நீங்கள் சொன்னதும் தான் நினைவுக்கு வருகிறது...

இ.லெட்டர் எதுவும் என் கைக்கு இதுவரை வந்து சேரவில்லையே... என்ன காரணம் யார் செய்த தாமதம் ?

Philosophy Prabhakaran said...

மயிலன்,

ஆங்கிலத்தில் டைப் செய்வது ஒன்றும் பிரச்சனை இல்லை... தமிங்கிலத்தில் எழுதாமல் இருந்தால் போதும்... நான் எனக்கு சிக்கலில்லாத தமிழிலேயே பதிலளிக்கிறேன்...

நீங்கள் சொல்வது போல இரு இணையருக்கு முதல் இரவு நடைபெறும் வர்ணனை ஒரு சினிமா பார்ப்பது போலவே இருந்தது...

பைராகி கதாபாத்திரத்தை சித்தர் என்பதற்கு பதிலாக வாத்தியார், குருநாதர் மாதிரி வைத்திருக்கலாம்...

Ponchandar said...

நுங்கு மாதிரி இருக்கு புள்ளே ! ! -இது தமிழன்...

ஷாம்பெயின் கிண்ணம் மாதிரி இருக்கு ! !- இது ஆங்கிலேயன்

வாத்தியார்...வாத்தியார்தான்.....

”தளிர் சுரேஷ்” said...

ரத்தம் ஒரே நிறம்! குமுதத்தில் வந்தது என்று நினைக்கிறேன்! பிளாட்பார கடை ஒன்றில் ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு பைண்ட் செய்து வைத்திருந்ததை வாங்கினேன்!படிக்க ஆரம்பிக்கையில் சுவாரஸ்யம் குறைந்ததால் நிறுத்திவிட்டேன்! புத்தக அலமாரியில் இருக்கும் தேடி எடுத்து படிக்க வேண்டும்! அருமையான பகிர்வு! நன்றி!

வவ்வால் said...

பிரபா,

சுரேஷ் சொன்னது போலத்தான் படிக்க ஆரம்பிக்க்வும் ஆர்வம் வடிந்துவிட்டது எனவே அப்பவே முழுசா படிக்கலை.

//சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.//

என்னப்பா இது ஒரே ஒரு தமிழன் தான் பங்கேற்றானா? சிப்பாய் கலவரத்தின் போது வேலூர் சிப்பாய்களும் கலந்துக்கொண்டார்கள்.

வட இந்திய சரித்திர எழுத்தாளர்கள் தான் தமிழகத்தினை இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

சிப்பாய் கலகம் தோல்வி அடைய முதல் காரணம் என்னவெனில் "பிரிட்டிஷ்" ராணுவத்தில் உணவாகவே பன்றி, மாடு ஆகியவ்ற்றின் இறைச்சி பரிமாறப்பட்டு வந்தது. இப்பவும் நம்ம ராணுவ மெனுவில் பன்றி,மாடு உண்டு.

அப்போலாம் இந்த பிராமண ,இஸ்லாமிய சிப்பாய்கள் வாயே தொறக்கல, எனவே இப்போ போராடினா நாம ஏன் ஆதரிக்கனும் என மற்ற இந்தியர்கள் முன் வரலை. எனவே புடிச்சா வேலைப்பார் இல்லைனா வேலைய விட்டு போயிக்க வேண்டியது தானே என
நினைத்து அவங்கங்க வேலைய பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜீவன் சுப்பு said...

// இ.லெட்டர் எதுவும் என் கைக்கு இதுவரை வந்து சேரவில்லையே- //

ஆஹா , பையன் தப்பிச்சுட்டான் போலையே....

அனுஷ்யா said...

@வவ்வால்

Thou i am not very much sound in history, i can say i am not ignorant in the events related with the feedom fight.. Ur comment seems like one of the speculative inferences made at the end of any failure.. If u r very much firm on this reason for failure, pls give Some reliable links in support of it..

@prabha

Pls ask anjasingam to his comment on this one.. (History and he s the right person...)

Anonymous said...

email addrs pls.
-Samson

மனசாலி said...

சுபமங்களாவின் ஆண்டு விழாவிற்கு சுஜாதா அவர்கள் மதுரைக்கு வந்த போது அவரோடு பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவரிடம் நான் 'ரத்தம் ஒரே நிறம்' கதையும் 'நாடோடி தென்றல்' கதையும் ஒன்று தானே என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் கதையை நன்றாக படியுங்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் புரியும் என்றார். பின் குறிப்பு: நாடோடி தென்றல் படத்தின் கதை இளையராஜா . பிரபா நீங்க 'நாடோடி தென்றல்' பார்த்திருந்தால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லவும்.

வவ்வால் said...

மயிலன்(சரியாத்தான் சொல்ரேனா?)

நிகழ்கால சமூக நடப்புகளையே சரியா புரிந்துக்கொள்ள மக்களுக்கு பொறுமை இருப்பதில்லை, இதில் எங்கே கடந்த கால வரலாற்றினை புரிந்துக்கொள்ள முயற்சிக்க போகிறோம்.

இந்தியாவில் பன்றி ,மாடு ஆகிவற்றின் இறைச்சியை உண்ணும் உணவு பழக்கம் இல்லை என நினைக்கிறீர்களா?

வெள்ளைக்காரன் எல்லாம் வருமுன்னர் இருந்தே அத்தகைய உணவுப்பழக்கம் இந்திய சமூகத்தில் இருந்தது. அப்பழக்கம் கொண்டவர்களை பிராமண மற்றும் உயர்குலம் என சொல்லிக்கொள்ளும் சமூகத்தினர் கீழாக நடத்தியும் வந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனி வந்து நாடுப்பிடிச்சு ,ராணுவம் அமைச்சப்போது அதில் அதிகம் சேர்ந்தது 'பன்றி,மாடு,ஆடு ,கோழி என அனைத்து மாமிச உணவு" உண்ணும் சமூகத்தினரே, மிக சிறிய அளவில் பிராமணர்கள் சேர்ந்தார்கள், கொஞ்சம் இஸ்லாமியர்கள்.

என்ஃபீல்ட் துப்பாக்கியில் பன்றி, மாட்டு கொழுப்பு இருப்பதாக தகவல் வந்ததும் , கீழ் சமூகத்தினர் போல தம்மையும் ஆக்க பார்க்கிறார்கள் என பிராமண சிப்பாய்களும், மதக்கொள்கைக்கு எதிரானது என்று இஸ்லாமியர்களும் தான் எதிர்ப்பு தெரிவித்தது , மாமிச உணவு பழக்கம் கொண்ட மற்ற இந்திய சிப்பாய்கள் பெரிதாக கலந்துக்கொள்ளவில்லை. எனவே தான் பெரிய அளவில் கலகம் பரவவில்லை.

பன்றி,மாட்டின் கொழுப்புக்கு எதிர்ப்பு என்பது எப்படி அனைத்து சிப்பாய்களையும் இணைக்கும் "common cause" ஆக இருக்க முடியும்?

எந்த ஒரு போராட்டத்திலும் அனைவரையும் இணைக்க ஒரு ஒத்த கொள்கை இருக்க வேண்டும், மாமிசக்கொழுப்பு என்பதை ஒரு பிரச்சினையாக பெரும்பான்மையினர் எடுத்துக்கொள்ளவில்லை.

வரலாற்றினை பெரும்பாலும் அவாள்களே எழுதியதால் 'பசுவினை புனிதமாக இந்துக்கள்" நினைப்பதால் இந்து சிப்பாய்கள் எதிர்த்தார்கள் என " பொதுவாக இந்து சிப்பாய்' என எழுதி பூசி மறைத்து விடுவார்கள்.

எத்தனையோ காலமாக இந்தியாவில் "இந்து மக்களால்" மாட்டிறைச்சி உண்ணப்பட்டு வருகிறதுஆனால் அவர்களை கீழ் மக்களாக்கி வைத்தது பசுவினை புனிதமாக கருதியவர்கள் ,அது யார் புலையர்களா இல்லை பிராமனர்களா?

புலையர்கள் என்பவர்கள் மாட்டிறைச்சி உண்பது மாட்டுத்தோலை பதப்படுத்துவது என செய்பவர்கள், அவர்களும் "இந்து குழுவில்" தானே கீழ் நிலையில் இருந்துக்கொண்டிருந்தார்கள் , 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் புலையர் சமூகமே,அவர் கதி என்னாச்சு?

எனவே பசுக்கொழுப்புக்கு எதிர்ப்பு தெரிவிச்சது பிரிட்டிஷ் படையில் இருந்த பிராமன சிப்பாய்கள் தானே ஒழிய மற்றவர்கள் அல்ல.

பிராமண சிப்பாய்கள் தங்களுடன் பணி புரிந்த மற்ற கீழ் சமூகம் என நினைக்கும் பிரிவு சிப்பாய்கள் தண்ணீர் கேட்டால் கூட கொடுக்க மாட்டார்களாம், தனியாக தான் தண்ணீர் வைத்திருப்பார்களாம் ,ஒரே பாத்திரத்தில் இருக்கும் நீரை பயன்ப்படுத்துவதில்லை.

தண்ணீர் தர மறுத்த பிராமண சிப்பாயிடம் , நீங்களும் மாமிசம் சாப்பிடத்தான் என்ஃபீல்ட் துப்பாக்கி என இன்னொரு ஒடுக்கப்பட்ட சிப்பார் சொன்னதால் தான் , அந்த வகை துப்பாக்கிக்கு பிராமண சிப்பாய்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள்,என
"J. A. B. Palmer: The mutiny outbreak at Meerut in 1857. " என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள் பாண்டே என்ற சிப்பாய் ஒரு சரஸ்வத் பிராமனர் அவரை ஹீரோவாக்கி வி.டி.சவர்க்கார் ,இவரும் சரஸ்வத் பிராமணரே ,என்ற இந்துத்வ தலைவர் புத்தகம் எழுதியதாலேயே " பொதுவாக சிப்பாய்கள்' போரடியது போல சித்திரம் உருவானது ,அதனை நம்ப உங்களைப்போன்றவர்களுக்கு என்ன தயக்கம் இருக்க போகுது :-))

சிப்பாய் கலகத்தில் பங்கு கொண்டது ' இந்துத்வா இந்திய சிப்பாய்களும் , பூர்ஷ்வா வகை ஜமீன்களுமே, அவர்களுடன் இஸ்லாமிய சிப்பாய்களும் இருந்தார்கள், ஆனால் இவர்களின் செயல் இந்தியாவில் "பழைவாத கொள்கையை" மீண்டும் நிலைநாட்டத்தான் என நினைத்து பெரும்பாலான இந்திய சிப்பாய்களும் ,மக்களுமே ஆதரிக்கவில்லை.

கூடவே கடைசியில் "பகதூர் ஷா ஜாபர்-2 ஐ மீண்டும் மன்னராக்கியதும், ஆஹா மீண்டும் இஸ்லாமிய ஆட்சிக்கா இந்த போராட்டம் என "மற்ற" இந்துத்வா சிப்பாய்களும் முடங்கிவிட்டார்கள்.

1857 இல் கிழக்கிந்திய ராணுவத்தில் இரண்டு லட்சம் இந்திய சிப்பாய்களும் 40,000 பிரிட்டிஷ் சிப்பாய்களும் இருந்துள்லார்கள். உண்மையில் எல்லா சிப்பாய்களுக்கும் ஒருமித்த கருத்து உருவாகி இருக்குமானால் 24 மணி நேரத்திலேயே அனைவரையும் தூக்கிப்போட்டு மிதிச்சு சட்னி ஆக்கி இருப்பார்கள், ஆனால் போராடியது சில ஆயிரம் பேர்களே என்பதால் அடக்கிவிட்டார்கள் அதுவும் இந்திய சிப்பாய்கள வச்சு தான்!

அனுஷ்யா said...

I do accept, history had been modified and at times flavoured with fictious things.. I know and accept most things u ve given in this 2nd comment. But u just go back and read ur frst comment. Its seems like ur hypothesis.

And i couldnt perceive the pun intended at the place, //அதனை நம்ப உங்களைப்போன்றவர்களுக்கு என்ன தயக்கம் இருக்க போகுது :-)) // As i already confessed, am not sound enuf in history.. In case, if u r , u very well can come fwd to explain things, but with ur feet grounded..

- Mayilan

வவ்வால் said...

மயிலன்,

//I do accept, history had been modified and at times flavoured with fictious things.. I know and accept most things u ve given in this 2nd comment. But u just go back and read ur frst comment. Its seems like ur hypothesis. //

இம்முறை கொஞ்சம் "புரியிறாப்போல பின்னூட்டம் எழுதிட்டேன் என நினைக்கிறேன்,கொஞ்சம் போல ஆமாம் சொல்லிட்டிங்க!!!

வரலாறு செல்வாக்கானவர்களால் உருவாக்கப்படுவது,அவர்கள் விருப்பமே எப்பொழுதும் முன்நிற்கும்.

# சுருக்கமாக சொல்லும் போது வரிக்கு வரி 'நூலில்" இருப்பதைப்போல எழுதவியலாது.

பசுவை புனிதம் என நினைத்து போராடியிருந்தால் ,பெரும்பாலானோருக்கு மாட்டிறைச்சி உணவு வழங்கும் போதே குரல் கொடுத்திருப்பார்கள்,ஆனால் அது யாரோவுக்கு என இருந்தார்கள்,அவர்களுக்கு என வரும் போதே "புனிதம்" தோன்றியதா என சொல்லியிருந்தேன்,அது ஹைப்போதீசிஸ் அல்ல ,நடந்த உண்மை அதான்.

டிவைட் அன்ட் ரூல் பாலிசி தான்!

சிப்பாய்கலகத்தில் பொதுவாக குத்துமதிப்பான சம்பவங்களே அதிகம் வெளியில் பேசப்படுகிறது, பல நூல்களில் உள்ளவை ,அந்தந்தந்த பங்கங்களில் தூங்குகிறது.

# //And i couldnt perceive the pun intended at the place//

"இந்து சிப்பாய்கள்" எனப்பொதுவாக சொன்னால்,அது யார்னு ஒரு ? வந்தாலே போதுமே,

அது பொதுவாக நம் மக்களின் செலெக்டிவ் நம்பகத்தன்மைக்கு சொன்னது, உங்களோடு பேசுவதால் உங்களையும் சேர்த்துக்கொண்டேன்.

#//As i already confessed, am not sound enuf in history.. In case, if u r , u very well can come fwd to explain things, but with ur feet grounded.. //

தலைக்கீழாய் தொங்குவதால் தலைதான் மண்ணில் இருக்கு அவ்வ்(தலையில (களி)மண்ணு இருக்குனு நினைக்கப்படாது)

புரியாதவர்களுக்கு/புரிந்துக்கொள்ள முயலாதவர்களுக்கும் புரிய வைக்க விளக்க முற்படுவது கல்லில் நார் உரிக்கும் வேலை எனவே முன் வரும் ஆசை வருவதில்லை :-))

வவ்வால் said...

திருத்தம்:

பொதுவாக என்பது கடைசிப்பத்தியில் விட்டுப்போச்சு எனவே ,

கடைசிப்பத்தி,

"பொதுவாக" ,புரியாதவர்களுக்கு/புரிந்துக்கொள்ள முயலாதவர்களுக்கும் புரிய வைக்க விளக்க முற்படுவது கல்லில் நார் உரிக்கும் வேலை எனவே முன் வரும் ஆசை வருவதில்லை :-))

Anonymous said...

@அனுஷ்யா
இன்னாமா பேசுற?ஒன்னியும் பிரியல..ஒண்ணு தமிழில் பேசு இல்லாட்டி ஒழுங்கா இங்க்லீஷில் பேசு..இதென்னா எஸ் எம் எஸ் மொழி?

M.Kumaran said...

இந்த புத்தகத்தை நான் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.
ஏனென்றால் என் பெயர் முத்துக்குமரன், இதற்காகவேணும் படிக்கவேண்டும்.